மனிதர்கள்....

வணக்கம் நண்பர்களே!
உலகில் எத்தனை மனிதர்கள் உள்ளனரோ அத்தனை தனிப்பட்ட உலகங்கள் உண்டு என்று எங்கோ ஒரு சிந்தனையாளர் தனது சிந்தனையை செதுக்கிச் சென்றார். எனக்கு ஒரு பெரியவரைத் தெரியும். அவர் ஆயுதப்படையில் காவல் துணை ஆணையாளர் அலுவலகத்தில் முகாம் எழுத்தராகப் பணிபுரிகிறார். அவரது விசேஷமான செய்கை என்னவெனில் ஒவ்வொரு புத்தாண்டு மலரும் வேளையிலும் தன் வட்டாரத்தில் தனக்கு உதவியாளராகப் பணியிலுள்ள அனைவரையும் அழைத்து தன் கையொப்பமிட்ட பத்து ரூபாய் நோட்டுகளை அன்பளிப்பாகக் கொடுத்து இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் எல்லா செல்வ வளங்களையும் வாரி வழங்கட்டும். எனது ஆசீர்கள் என்பார்.  அது அவரது சிந்தனை. அவரின் எண்ணம் உயர்வானது என்பதால் ரூபாய் நோட்டில் செய்த இனிசியலை பெரிதாக்காமல் அந்த ரூபாய் நோட்டினை வீட்டில் பத்திரப்படுத்தி வைக்கும் நண்பர்கள்தான் அதிகம். வருடத் துவக்கம் இது போன்று கிடைக்கும் அபூர்வப் பரிசுகள் மனதுக்கு நெகிழ்ச்சியை கொடுக்க வல்லவைதானே!
 தான் ஆடாவிட்டாலும் தன் தசை  ஆடும் என்பது முதுமொழி. முன்தினம் இரவு சுமார் இரண்டுக்கு மேல் நெஞ்சைப் ஒரு இம்சை வந்து பிசைவதாகவே தோன்றியது. அது வலியுமல்ல. ஏதோ ஒன்று தப்பாக நடக்கிறது என்று மட்டும் புரிந்தது. ஆனால் அது என்ன என்பது மட்டும் பிடிபடவில்லை. சுமார் மூன்றரைக்கு என் கைபேசி அலறிற்று. என்னமோ ஏதோவென்று பயந்து கொண்டே போனை எடுத்தேன். எனக்குப் பிரியமான என் தாத்தாவின் சகோதரர் திரு.சாமிநாதன் அவர்கள் காலமாகிவிட்டார் என்கிற செய்திதான் அது. நாங்கள் பழகியது வெகு சில சந்தர்ப்பங்களில்தான் என்றபோதிலும், அந்த இடைவெளியில் என்னை அவருக்கு மிகப் பிடிக்கும் என்பது ஒரு புறம் இருக்க, அவரை சந்தித்தே பல வருடங்கள் உருண்டோடி விட்ட நிலையில் இன்று நேர்ந்த இந்த விசித்திரமான இனம்புரியாத அனுபவம் குறித்து உங்களுடன் பகிர்வதில் ஒரு ஆறுதல். 
என் சகோதரர் செந்தழல்ரவி தனது வலைப்பூவில் எங்கள் தாத்தா குறித்து எழுதியுள்ள பதிவு....http://tvpravi.blogspot.in/2014/05/blog-post_9.html
இடையே இங்கேயே வசித்து நான் காண விரும்பி வந்த இனியவர்கள் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களும், செவியில் இறைவனை நனைத்துக் கொண்டே இருந்த அன்பு அய்யா நாகூர் ஹனீபா அவர்களும் மீளாச் சொர்க்கம் எய்தி வருத்தத்தின் சதவீதத்தை அதிகரித்து விட்டனர். அன்னார்களது ஆன்மா இனிய இறைவனின் ஜோதியில் கலந்து சாந்தியும் சமாதானமும் அடைய வேண்டிக் கொள்கிறேன். 
அப்புறம்....அப்புறமே!!
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பர் ஸ்பைடர்மேனின் தோழன் ஜானி!
  

Comments

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!