செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

ஸ்டார் காமிக்ஸ் வெளியீட்டு விழா...சேலம் டெக்ஸ் விஜயராகவன்



இரத்தப்படலமும் பனிமலைக்கோட்டையும்......

(இது ஒரு டெக்ஸின் சிறு வயது பதிவு)
Image may contain: 2 people, text
*1990களில் காமிக்ஸ் படிக்க வந்தபோது நிறைய நண்பர்கள் பழையு புத்தக கடையில் அறிமுகம் ஆனாங்க. நிறைய புத்தகங்களை படிக்கத் தந்தாங்க. நிறைய பேர் தங்களிடம் இருந்த இரட்டை காபிகளை தந்து அப்ப, 15 வயசு பொடியனானா என் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்தாங்க. அப்பத்தான் 1994ல் லயன் சென்சுரி ஸ்பெசல் வந்தது.

*லயன் சென்சுரி ஸ்பெசலில் லயன் 1 டூ 100லிஸ்ட் தர்றவங்களுக்கு பரிசு போட்டி வெச்சிருந்தாங்க. அந்த புக் சேலத்தில் ரூபாய் 20னு (இப்ப ஒரு 1000ரூபாய் மதிப்பு இருக்கலாம்) ரிலீஸ் ஆகல. +2  லீவு அப்ப. அந்த புக்கை வாங்கியே ஆகணும்னு தேடும்போது, யாரோ ஒரு சீனியர் நாமக்கல்ல கிடைக்கும் என்றார். லைப்ரரி போயிட்டு வர்றேன்மான்னுட்டு ஒரு நாள் கிளம்பி நாமக்கல் பஸ் ஏறிப்போய், பஸ் ஸ்டாண்ட் கடையில் தொங்கிட்டு இருந்த லயன்  செஞ்சுரி ஸ்பெசல் ஒன்று வாங்கிட்டு, அடுத்த பஸ்லயே கிளம்பி வந்துட்டேன். மதியத்திற்குள் வூட்டுக்கு வர்லனா எங்கம்மா கழுத்திலியே மிதிக்குமே.


No automatic alt text available.
*வரும்போதே அந்த புக்கை பிரித்து மேய அந்த போட்டியில் செயித்தது யார்னு பார்த்தா மெல்லிய அதிர்ச்சி, அதில் சேலத்தில் இருந்து ஒரு சீனியர் நண்பரும் இருக்காரு. (நம்ம கலீல் ஜி, அய்யம்பாளையம் வெங்கடேசன் சாரும் அந்த வின்னங் லிஸ்ட்ல உண்டு; காமிக்ஸ் கலக்டர்கள் என சொல்லும் போதே கலீல் ஜியோட முக்கியத்துவம் இப்ப தெரியுதா நண்பர்களே...!!!!- அதில் இருந்த கலீல் ஜி அட்ரசை தொடர்பு கொண்டு பிற்பாடு ஒருநாள், எனக்கு கிடைப்பதில் ரொம்பவும் அலையவிட்ட இரத்தப்படலம் பாகம்1 ஐ வாங்கினேன்; அந்த கதை வேறு ஒரு பதிவுல )

*அந்த சேலம் நண்பரோட வீட்டுக்கு ஒரு ஞாயிறு தயங்கி ,தயங்கி போனா- அன்பாக பழகினார்கள் அங்கே. அவுங்க பிரதர்ஸ் 3பேர், மூவரும் தீவிர காமிக்ஸ் ரசிகர்கள். அதில் இளையவர்தான் நம்ம பிரண்டு. அதற்குப் பிறகு அவ்வப்போது படிக்க நிறைய புக்ஸ் ஓசி வாங்கி வருவேன். இப்படியே போகைல, 2006 ல ஒருநாள் நான் வேலை செய்யும் கடைக்கு வந்தார், என் நண்பர். நம்ம தீவிர சீனியர் வாசகர் ஒருவர் வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்; புதிதாக காமிக்ஸ் ஆரம்பிக்கப் போகிறார். வர்ற ஞாயிறு நம்மை துவக்க விழாவுக்கு அழைக்க வர்றார், அவசியம் வந்துடுங்க என்ற ஓரு சேதியை சொல்லிட்டு போனார்.

*அந்த சமயத்தில் ஆடிக்கு ஒருக்கா, அமாவாசைக்கு ஒருக்காத்தான் லயன் காமிக்ஸ் வரும். அதும் ஒருதபா லயனு,அடுத்த தபா முத்து.
இந்த சமயத்தில் இப்படி ஒரு புது காமிக்ஸ்ஸா என ஒரே ஜாலி. என்னன்னவோ காமிக்ஸ்லாம் கையில் வாங்கி படிப்பது போல அன்று இரவு கனவு. அந்த ஞாயிறும் அவுங்க வூட்டுக்கு போனா, மதியம் வர்றாங்க ஒரு 4பேர். எல்லாம் தீவிர காமிக்ஸ் ரசிகர்கள். எல்லாம் முத்து காமிக்ஸ் பற்றியே பேசுறாங்க. டயலாக்லாம் அப்டியே லைன் லைனா சொல்றாங்க. பேந்த பேந்த விழிப்பதை தாண்டி ஒன்றும் புரியல.

*படக்குனு நம்ம நண்பர் ஒரு கேக் பாக்ஸ் எடுத்து வந்து ஒப்பன் செய்யறார். அழகா, "ஸ்டார் காமிக்ஸ்"- னு எழுதியிருக்க, நம்மை அழைக்க வந்த ராகுலன் சாருக்கு லைட்டா ஒரு இன்ப அதிர்ச்சி. சார், இங்கே ஒரு மினி லாஞ்ச்; சென்னையில் உங்களின் பிரம்மாண்டமான லாஞ்ச் என நண்பர்கள் சொல்லவும், சரின்னு அவர் சொன்ன நொடி பலூன் வெடிக்க, வண்ண காகிதங்கள் சிதற, மந்திர பூச்சு தெறிக்க, கைதட்டல்கள் அதிர, கேக் கட் பண்ணி எல்லோருக்கும் தர்றார் நம்ம ராகுலன் சார்.

*ராகுலன் சார் கொண்டுவந்திருந்த பையில் இருந்து சாம்பிள் பிரதிகள் எடுத்து ஆளுக்கு ஒன்றாக கையில் தர, என் கையிலும் ஒரு " பனிமலைக் கோட்டை" வந்தமர்ந்தது. தகதகனு பொன்னிறத்தில் மின்னிய வெளவால்கள் பறக்க, அப்டியே ஒரு ஹார்ட் பைண்டு பொக்கிசம் கையில் கிட்டியிருப்பது உரைக்கவே ரொம்ப நேரம் ஆச்சு. நான் புக்கை பார்த்து விட்ட ஜொல்லை, கேக்கை பார்த்து தானோ என்னவோ என இன்னொரு பிளேட் தர்றாங்க. அதற்கு பிறகு என்ன பேசினாங்க என நினைவில் ஏற அந்த வெளவால்கள் விடல. எல்லோரையும் அழைத்து விட்டு, என் முகத்தை பார்த்த ராகுலன் சார் அந்த பிரிதியை எனக்கே எனக்கனு தந்துட்டார்.
Image may contain: 1 person, smiling, standing and shoes
Image may contain: text

*சென்னை செல்லும் சமயம் என் நண்பரின் 2வது அண்ணா(அவரும் இப்ப நம்ம நண்பர்தான்) விழாவிற்கு அழைத்து செல்வார் என முடிவானது. எனக்கு கல்யாணம் ஆகி 3வருசம் ஆகியிருந்தது, என் பையன் 2வயசு பொடியன்; அவுங்களை அதுவரை எங்கும் அழைத்து சென்றதில்லை. சரி,செலவோடு செலவாக வாங்கனு சனிக்கிழமை இரவு சேலத்தில் இருந்து ட்ரெயின் ஏறினேன். வால்டாக்ஸ் ரோட்ல ஒரு லாட்ஜில் ரூம் போட்டு, ரெடி ஆகி நாங்கள் பீச்சுக்கு கிளம்பினோம். என் நண்பர் நேராக விழா நடக்கும் ஓட்டலுக்கு வந்து விடுவதாக ஏற்பாடு.

* மெரினாவை முதல் முறை காலை 8மணிக்கு ரசித்து விட்டு, ஒரு ஹோட்டலில் சைவ டிபன். நான்வெஜ் ஓட்டலில் ஏதோதோ கறி போட்டுடுவாங்கனு என் வீட்காரி வர மறுத்துட்டா. ரொம்ப நாளைக்கு பிறகு ஞாயிறு காலை சைவம்; கடனே என பூரியும் இடியாப்பமும் சாப்பிட்டுட்டு, ஸ்பென்சர் பிளாசாவுக்கு எதிரில் உள்ள பேர் வாயில் நுழையாத அந்த விழா நடக்கும் ஓட்டலுக்கு போனோம்.
ராகுலன் சார் அனைவரையும் அன்போடு வரவேற்றார்.
கடைசி ரோவுல நாங்கள் அமர்ந்து கொள்ள, என் நண்பர் உள்ளிட்ட நிறைய நண்பர்கள் வந்து கொண்டே இருந்தனர்.
No automatic alt text available.

*திடீரென சலசலப்பு, பார்த்தா நடிகர் பொன்வண்ணன் சார். அட அவரும் காமிக்ஸ் ரிசிகரா என மிரண்டு போனேன். தூர்தர்ஷன் தொலைக்காட்சி நாடகங்களில் அப்ப அவர் செம பேமஸ். சிறுவயது முதலே அவருடைய வித்தியாசமான நடிப்பிற்கு நான் ரசிகன். ஒரு உதாரணம்;
பொதிகை தொலைக்காட்சி தொடரில் ஒரு கிராமத்து இளைஞராக அவர் நடித்து இருப்பார்.  நகரில் படிக்கும் அவருடைய முறைப்பெண், கிராமத்து விழவிற்கு வரும். அந்தப்பெண் வைத்திருக்கும் ஆபாச புத்தகத்தில் சில படங்களை இவர் கிழித்து எடுத்து விடுவார். தவறாக புரிந்து கொண்ட முறைப்பெண்ணிடம் பொன்வண்ணன் சார் தரும் விளக்கம் ஸ்டன்னிங்.  அதுமுதலே அவரது அனைத்து கேரக்டர்களும் நான் ரசிப்பேன். சபை கூச்சம் காரணமாக அவரிடம் பேச தைரியம் வரவேயில்லை.
Image may contain: 1 person
*தொடர்ந்து டைரக்டர் மிஸ்கின் சார், எழுத்தாளர்கள், ஒவியர் ட்ராஸ்கி மருது சார் என மேடை வி.ஐ.பி.களால் (மனதால் சின்னஞ்சிறு காமிக்ஸ் குழந்தைகள்) நிரம்பியது. பனிமலைக்கோட்டை கரகோசத்திற்கு இடையே ரிலீஸ் ஆனது. மிஸ்கின் சார், மருது சார், பொன்வண்ணன் சார் இவங்களோட காமிக்ஸ் சம்பந்தப்பட்ட பேச்சுக்கள் எல்லாம் கேட்க கொடுத்து வைத்து இருக்கனும். தொடர்ந்து ஒரு மூத்த காமிக்ஸ் ரிசிகரின் அனுபவங்கள் கேட்டு அனைவரும் கண்ணீர் விட்டோம்.

*நம்ம கலீல் ஜி, மடிப்பாக்கம் வெங்கடேசன் சார், RTM sirஎன நிறைய நண்பர்கள் வந்து இருக்காங்க போல. பிற்பாடு போட்டோ பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். இதுல என்னா கொடுமைனா, அதற்கு சில ஆண்டுகள் முன்பே கடிதம் மூலம் தொடர்பு உடைய கலீல் ஜி, இவர்தானா என அடையாளம் தெரியாமல் பேச முடியாமல் போனதுதான். செல் போன்களின் இன்றியமையாமை எந்த அளவு அத்தியாவசிம், ஹூம்.

*வி.ஐ.பி. அன்பர்கள் கிளம்பிட, எஞ்சிய காமிக்ஸ் ரசிகர்களுக்கு
மதியம் நான்வெஜ் விருந்து; அப்பாடி என ஒரு பிடிபிடித்துட்டு இன்னும் என்ன பேசுறாங்கனு கவனிச்சேன். அப்பத்தான் அந்த அதிசய பார்சலை ஒரு நண்பர் எடுத்து பிரித்தார். என்ன என்ன புக்குனு எல்லோரும் எட்டிப்பார்க்க, ஓவ், ஆஹா, பிரமாதம், பலே, செம என்பன போன்ற உற்சாக குரல்கள் கிளம்பின. சைசில் மிகப்பெரிய பிரம்மாண்டமான ஐஸ்பெர்க்  காமிக்ஸ் வெளியீடு, "ஆள்அடையாளம் XIII ஒரு தேடல்" முதல் பாகம்- கறுப்பு சூரியநாள்- நண்பர்களை பார்த்து மிரட்டியது.

*இரத்தப்படலத்தின் உண்மையான ரசிகர்கள் நிறைய பேர் குழுமியிருந்த இடம் அல்லவா! மடமடவென ஆளுக்கொன்றாக அள்ளிக் கொண்டார்கள். இலங்கையில் வியாபாரம் செய்யும் நண்பர் ஒருவர் இந்த புக்கையும் தருவித்து இருந்தார் போல. பளீரிடும் வெள்ளைத்தாளில் அசாத்திய பெரிய சித்திரங்களில் இந்த இதழ் அசத்தலான கலக்சன் இதழ். பனிமண்டல கோட்டைக்கு வந்த நண்பர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இந்த புத்தகம் அமைந்தது.


*பிற்பாடு, செவ்விந்தியக் குடியிருப்பு என்ற 2ம்பாகமும் கிடைத்தது. ஆனால் வியாபாரம் இல்லையென சைஸை சுருக்கி விட்டார்கள். இப்போ மாதிரியா இருந்தா, அந்த எடிட்டரின் சட்டையையும் பிடித்து இருப்பார்கள். பெரிய சைசுக்கு காசு வாங்கிட்டு எப்படிப்பா சின்ன சைஸ் தர்லாம் என; வியாபாரம் குறைந்தால் சொன்ன மாதிரியேவா நடந்து கொள்ள முடியும் என்ற அடிப்படை கூட புரியாத புள்ளைங்களா இருக்காங்களே என அந்த எடிட்டரும் செய்வதறியாது திக்கு முக்காடிப் போயிக்ககூடும். நல்லவேளை அந்நாளைய ரசிகர்கள் அந்தளவு தர்ம சங்கடத்தில் அவரை ஆழ்த்தவில்லை போல. கிடைத்ததை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தது அவரின் அதிர்ஷ்டம் போலும்.  இந்த 2ம் பாகத்தில் அந்த எடிட்டர் நிஷாகரனின் விளக்கங்கள் பக்கம் பக்கமாக இருக்கிறது.
Image may contain: 1 person
*தொடர்ந்து டைகரின் "இரத்த யுத்தம்"  என்ற 3 பாக (நம்ம இளமையில் கொல்) இதழும் வந்து கிடைத்தது. படிக்க வாங்கிச்சென்ற புண்ணியவான் யாரோ திருப்பித்தரவேயில்லை. அதற்கு பிறகு ஐஸ்பெர்க் காமிக்ஸ் என்ன ஆனது, ஏன் நின்று போனது என்ற தகவல்கள் நமக்கு முழுமையாக தெரியாது.
No automatic alt text available.

*சரி, பனிமலைக்கோட்டைக்கு திரும்புவோம். இந்த இதழ் இரு தரத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. கலக்டர்ஸ் எடிசன் என்ற தடித்த தாளிலிலும், ரெகுலர் எடிசன் என்ற சன்னமான தாளிலும் வந்திருந்தது. எப்படியாயினும் அந்நாளைய காலகட்டத்தில் ரூபாய் 100 என்ற விலை அதிகப்படியான விலையாக தெரிந்தது போல. விற்பனை அதளபாதாளம். ஸ்டார் காமிக்ஸ்ம் நின்று போனது. தமிழ் காமிக்ஸ் படிக்க இருந்த சாளரங்கள் ஒவ்வொன்றும் அடைக்கப்பட்டு வந்தன. என்னைப் பொறுத்து ரெகுலர் இதழ்கள் ரூபாய் 25க்கும், ஸ்பெசல் இதழ்கள் ரூபாய் 100க்கும் என்ற அளவில் முடிவு செய்திருந்தால் இன்று வேறு விதமாக இருந்து இருக்க கூடும்.

*விழா முடிந்து மதியம் நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, டவுன்பஸ்ஏறி வண்டலூர் ஜூ போனோம். பொடியன் முதன் முறையாக சென்னை வந்ததை அனுபவித்தான். இலையுதிர் காலம் என்ற போதிலும் விலங்குகளை ரசிக்க முடிந்தது. ஒவ்வொரு உயிராக பார்க்க பார்க்க அவனது துள்ளல் ஏறிக்கொண்டே வந்தது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சக காமிக்ஸ் நண்பர்களை சந்தித்த முதல் விழா மறக்க முடியாதது.
Image may contain: 19 people, including Gokul ChinnaGounder, Shallum Fernandas, Ponvannan, Pathy RVc and Kaleel, people smiling, indoor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...