புதன், 14 பிப்ரவரி, 2018

பெரும் தொண்டாற்றிய மீனவர்..BSI Comics

இறைவனுக்கே மகிமை...
கிறிஸ்துவில் பிரியமானவர்களே.. இது பிஎஸ்ஐ காமிக்ஸ் வழங்கும் பெரும் தொண்டாற்றிய மீனவர்.. இறைமகன் மனுவுருக் கொண்டார். நமக்காக பாடுபட்டு போஞ்சு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றவர் மீண்டும் வருவார்...நல்வாழ்வு தருவார் என்கிற விசுவாசத்துடன் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் கிறிஸ்தவ பெருமக்களுக்காக இந்த சித்திரக்கதை அச்சிடப்பட்டுள்ளது. இப்போதும் முயன்றால் இந்த நூலை நீங்கள் வாங்க முடியும். ஆங்காங்கே கிறிஸ்தவ நூல் விற்பனை அங்காடிகளில் இதன் அடுத்த வெர்ஷன்கள் வெளியாகி இருக்கலாம்.
இன்றைக்கு விபூதி புதன் என்கிற பெயரில் கிறிஸ்தவர்கள் தங்கள் ஆண்டவர் வனாந்திரத்தில் தியானம் செய்த நாட்களை மனதில் வைத்து விழாவாகக் கொண்டாடுகிறார்கள். விபூதி புதன் காலத்தில் நற்காரியங்களை செவ்வனே செய்தும் விரதங்களை ஜெப தவ முயற்சிகளை மேற்கொண்டும் விவிலிய சித்தனைகளோடும்
இறுதியில் ஈஸ்டர் என்கிற இயேசு பிரான் உயிர்த்தெழுந்த நன்னாளைக் கொண்டாடியும் வருகின்றனர். இன்றைய பதிவும்
அதனையொட்டியே அமைந்துள்ளது. இந்தப் புத்தகத்தை  ஸ்கானாக  நண்பர் ஸ்ரீராம் லக்ஷ்மணன் கொடுத்திருந்தார். பிறிதொரு சமயம் நண்பர் ராஜசேகரன் வேதிஹா புத்தகமாகவே அன்பளிப்பு செய்தார். அவர்களுக்கு என் நன்றிகள்.
இனி...



































பிடிஎப் வடிவில் இந்தப் புத்தகத்தைத் தரவிறக்கம் செய்து கொள்ள:


என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்.
   

10 கருத்துகள்:

  1. போட்டுடறேன் ஜி. நேரக்குறைவு. ப்ளீஸ் வெயிட்.

    பதிலளிநீக்கு
  2. மிக நன்று! இவர் போன்ற புனிதர் மற்றும் புகழ் பெற்ற பெரியோர்களின் வாழ்க்கை வரலாறு கட்டுரையில் படிப்பதை விட இது போல் சித்திர வடிவில் படிப்பது என்றென்றும் மனதில், நினைவில் நிலைத்திருக்கும்! மேலும் மேலும் படிக்கும் ஆர்வத்தினை தூண்டுவதாக உள்ளது! வாழ்க உங்கள் காமிக்ஸ் சேவை!!!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரவுக்கும்கருத்துக்கும்
      நன்றி நண்பரே.. இந்த கதைகளை ஸ்கானுக்காக கொடுத்துதவிய நல்ல உள்ளங்களை இந்த நேரத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன். இதைப் போன்ற சித்திரக்கதைகள் என் சிறு வயதில் காணக் கிடைத்ததும் வாசிக்கக் கொடுத்துதவியதும் எனக்குக் கிடைத்த பெரும் பேறு..

      நீக்கு
  3. சூப்பர் ஜி அப்படியே இரத்தப்படலம் ஸ்பின் ஆப் தமிழில் இருந்தால் போடுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைவரே சுத்தல்ல விட்டுடுவாங்களே நம்ம நண்பர்கள்... லயனிலேயே வரும். சேர்ந்தே வாசித்து மகிழலாம். ஹி ஹி ஹி!

      நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. நன்றி தோழர்.. அனைவரது பங்களிப்பும் இந்த புத்தகத்துக்கும் கிடைத்தது பெரும் பேறாகும்.

      நீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...