செவ்வாய், 5 நவம்பர், 2019

பிளாக் போவின் பொக்கிஷம் _Guna Karur Birthday Special

💛💙💜💚❤அயராது பணிசெய்து 500 ராணி காமிக்ஸ்களை ஆவணப்படுத்தி நமக்களித்த கரூர் குணாவிற்கு இன்று பிறந்தநாள். இந்த நன்னாளை அவர் மன மகிழ்வுடன் கொண்டாடும் வேளையில் நலமும் வளமுமாய் அவர் பெருவாழ்வு வாழ வாழ்த்துக்களுடன் இந்த புத்தம் புதிய மொழிபெயர்ப்பு காமிக்ஸ் பகிரப்படுகிறது❤💚💜💙💛


 முகமூடி வேதாளர் மாயாவியின் புதையல் வேட்டை ... புதிரான ஒரு உலகத்திற்கு....

 பிளாக் போவின் பொக்கிஷம்

 முதன்முறையாக இப்போதுதான் தமிழ் பேசும் ஒரு அதிரடி ஆக்ஷன் அட்வென்ச்சர் த்ரில்லர் காமிக்ஸ்

வேதாளரின் டென்காலி கானகம்.. அங்கே மோரி பழங்குடியினரின் கடற்கரையில் புயலால் பாதிக்கப்பட்ட ஒரு உடைந்த படகில் இருந்து தூக்கிவீசப் படுகிறார்கள் மேரி ரீட் என்ற பெண்ணும் ரிச்சர்ட் ரீட் என்ற அவளது சித்தப்பாவும்.. ஏதோ ஒரு புராதான கடையில் கிடைத்ததாக கூறப்படும் கடல் கொள்ளைக்காரன் பிளாக் போவின் தாயத்திலிருந்த வரைபடத்தை வைத்து அவனது பெரும் பொக்கிஷத்தை தேடி இருவரும் வந்திருப்பது பதின்மூன்றாம் வேதாளருக்கு தெரியவருகிறது.. அந்த பிளாக் போவைக் கொன்று கொள்ளையரின் அட்டகாசங்களை ஒடுக்கியவர் பன்னிரண்டாம் வேதாளர் என்பதால்  வேதாளகுகையில் இருந்த அவனது வாளில் கிடைத்த மீதி வரைபடத்தையும் இனைத்துப் பார்த்து வேளாளரும் புதியவர்களும் மிகவும் பலம் வாய்ந்த மோரி பழங்குடியினரும் புதையலை தேடி ஒரு படகில் கிளம்புகிறார்கள்.

அவர்கள் சென்றடைய வேண்டியது ஆபத்தான கடற் பரப்புகளை கடந்து நெருப்பு தீவு என்ற ஒரு கைவிடப்பட்ட அமானுஷ்ய பகுதி.... மிகவும் புதிராக குறிப்பிடப்பட்ட வாசகங்களை புரிந்து கொண்டு அந்தத் தீவின் ரகசிய பாதைகளில் செல்லும் பயணம்.... யாருமே இல்லாத அந்த தீவில் தன்னந்தனியனாக வாழ்ந்து கொண்டிருக்கும் பிளாட்டோ என்ற குட்டை மனிதன்.... இதற்கிடையிலோ புதையலை நெருங்கும் வேளையில் கொள்ளையர் படகு ஒன்றுடன் திடீரென முளைக்கும் பிளாக் போவின் வாரிசு ஒன்று..

இறுதியில் வேதாளர் பிளாக் போவின் பொக்கிஷங்களை கண்டுபிடித்தாரா?? கானகத்திற்கு கொண்டு சென்றாரா? என்பதை பரபரப்பான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக செல்லும் இந்த புத்தம் புதிய மொழிபெயர்ப்பு படக்கதை பிடிஎஃப் வடிவில் உங்களை புதிய அனுபவத்திற்கு உள்ளாக அழைத்துச் செல்ல வருகிறது...

குறிப்பாக இதன் மொழிபெயர்ப்பு நம் பூபதியின் கைவண்ணத்தில் தமிழகத்தின் நம்பர் ஒன் காமிக்ஸ் பதிப்பகத்தில் இருந்து வெளிவந்த பல முகமூடி வேதாளரின் கதைகளை படிக்கும் அதே உணர்வை ஏற்படுத்தும் வகையில் மிக சரளமாகவும் ஒரு தனி பாணியில் ரசிக்கத்தக்க வகையிலும் எழுதப்பட்டிருக்கிறது.  வடிவமைப்பிலோ சமீபத்திய வெளியீடுகளை விட பெரிய எழுத்துகளில் மிகப் பிரமாதமாக செய்து அதகளப் படுத்தி இருக்கிறார் மதுரை இளங்கோ.. எல்லா வகையிலும் தவறாமல் படிக்க வேண்டிய அற்புத விருந்தாக....

சுகவீனத்துடன் காமிக்ஸ் பணிகளில் ஈடுபடுபவர்கள் பலர். ஆனால் 500 காமிக்ஸ்களை ஸ்கேன் செய்ததாலேயே சுகவீன நிலையை நெருங்கியவர் நம் கரூர் குணா. அவர் அவ்வளவு பாடுபட்டு ஆவணப்படுத்திய அந்த ராணி காமிக்ஸ்கள் அனைத்தையும் இலவசமாகவே நமக்கெல்லாம் பகிர்ந்தளித்தார்.. அந்த உயர்ந்த உள்ளம் கொண்ட நண்பர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதற்கான சிறப்பு வெளியீடாக இந்த மொழிபெயர்ப்பு காமிக்ஸ் பகிரப் படுவது பெருமகிழ்ச்சி. வாழ்த்துக்கள் குணா!!!

இந்த நன்னாளை அவர் மன மகிழ்வுடன் கொண்டாடும் வேளையில் நலமும் வளமுமாய் அவர் பெருவாழ்வு வாழ வாழ்த்துக்களுடன் இந்த புத்தம் புதிய மொழிபெயர்ப்பு காமிக்ஸ் பகிரப்படுகிறது

http://bit.ly/2BUN7R5

 முகமூடி வேதாளர் மாயாவியின் புதையல் வேட்டை ... புதிரான ஒரு உலகத்திற்கு....

 பிளாக் போவின் பொக்கிஷம்

 முதன்முறையாக இப்போதுதான் தமிழ் பேசும் ஒரு அதிரடி ஆக்ஷன் அட்வென்ச்சர் த்ரில்லர் காமிக்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...