வியாழன், 16 டிசம்பர், 2021

கவிதையில் தொலைந்தவன்..ஜானி சின்னப்பன்

 கவிதைக்குக் கண்ணின்றித் தொலைந்து போன சிறுபயலென்னைத் திரும்பியும் கவிஞனாக்கிச் சென்றது ஒரு பேருந்துப் பெண்ணின் துப்பட்டாவின் உரசல் என்று கதைவிட்டாலும் கவிதையென்பீர்களோ..?!கவிஞனென்பீர்களோ?! கவிஞனென்பவனின் கவிதைகளின் ஆணி வேரில் பொய்யும் சேரும்போதினில்தான் கொஞ்சம் கொத்துமல்லி மிதக்கும் ரசமென மணமணக்கும்.. இன்றைய கணங்கள் நாளைய நினைவுகளாகக் கடப்பதைத் தடுத்து இன்றை இனிமையாக்கிடக் கவிஞனின் 

சிறு பொறிகள் கணங்களின் இனிமையை அள்ளித் தர இதயம் முழுதும் உயிர்ப்பு நிறைந்து ததும்பி அலைகிறது.. மழை நேரத்து தும்பியாய்...

-ஜானி சின்னப்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IND-24-037-ராட்சஸ ரட்சகர்-பகதூர்

 வணக்கங்கள் அன்புள்ளங்களே..  நம் மதிப்புக்குரிய நண்பர்  மாரிமுத்து விஷால் அளித்த மற்றுமொரு அன்பளிப்பாக இந்த முறை பகதூர் சாகசமான ராட்சஸ ரட்சக...