சனி, 7 அக்டோபர், 2023

பேய் புகுந்த பள்ளிக்கூடம்_லயன் லைப்ரரி_டைலன் டாக் சாகசம்

 வணக்கம் வாசக தோழமை உள்ளங்களே.. 

டைலன் டாக் சாகசமான பேய் புகுந்த பள்ளிக்கூடம். லயன் லைப்ரரி வெளியீடாக இந்த அக்டோபர் மாத இலவச புத்தகமாக சந்தாதாரர்களுக்கு மட்டும் வெளியாகி இருக்கிறது.. 





 திடுமென ஒரு விபத்துடன் துவங்கும் இந்தக்கதையின் அட்டைப் படமே கதையின் மையம். நேரடியாக நம்மைக் கதைக்குள் இழுத்து வந்து விடுகிறது இந்த சம்பவம். மிதிவண்டியில் செல்லும் சிறுமி ஒருத்தி லாரியில் அகப்பட்டு விபத்துக்குள்ளாகிறாள். அவள் படிக்கும் பள்ளியின் வகுப்பறையில் அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கத் தொடங்குகின்றன. அது ஏன்? துப்பறிய வருகிறார் அமானுஷ்ய நிபுணர் டைலன் டாக்.. அவரை அந்த பள்ளியின் ஆசிரியரே அவமானப்படுத்தினாலும் கவலை கொள்ளாமல் தான் வந்த நோக்கத்துக்காக சிரத்தை மேற்கொள்கிறார் டைலன். சிறுமியின் விபத்துக்குப் பின்னணியில் யார் இருந்தது என்கிற அதிர்ச்சியான விஷயம் அவரது துப்பறியும் திறனால் வெளிப்படுகிறது. கதை சிறு கதை எனினும் நம்மை நெகிழ வைக்கும் நிறைய சிறு சிறு சம்பவங்கள் கதையின் ஓட்டத்தில் தொய்வு ஏற்படாவண்ணம் நிகழ்கின்றன.. 
இந்தப் பேய் புகுந்த மாளிகை ஹி ஹி சந்திரமுகி இரண்டாம் பாக பாதிப்பு.. பள்ளிக்கூடம் உங்களைக் கவரும் என்பதில் சந்தேகமில்லை.. 
லயனின் அன்பளிப்பு இது.. 
நன்றி. என்றும் அதே அன்புடன் ஜானி 
  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Enter The Phantom_FREW First Issue வேதாளர் முதல் FREW இதழ்_கதைச்சுருக்கம்

 வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே!                  இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்ப...