வெள்ளி, 27 அக்டோபர், 2023

மத்துவாச்சாரியார்_அமர சித்திர கதைகள் வரிசை


ஜட உலகம், ஆன்ம உலகம் இரண்டையுமே மாயை என்றோ, பொய்மை என்றோ கருதாமல் உண்மை எனக் கண்டுகொள்ளுமாறு மனிதகுலத்திற்குப் போதித்தார் மத்துவாச்சாரியார். தாம் கண்ட மெய்ப் பொருள் தத்துவத்தை சுதந்திரம், பரதந்திரம் என்ற இரு கூறுகளாகப் பகுத்துக் காட்டினார். அதாவது, தனித்தியங்குவது என்றும், மற்றொன்றுக்குக் கீழ்ப்படிவது என்றும் இரு வகை. கடவுள் ஒருவர்தாம் தனித்தியங்கும் மெய்பிமை. இரு தத்துவங்களாக நிற்கும் மத்துவரின் கொள்கை துவைதம் என பெயர் பெற்றது

மத்துவர், பக்தி நெறியினக் குருட்டு நம்பிக்கையின் பிடியிலிருந்து விடுவித்து, அதை அறிவிற் கனிந்த பற்றாக, இறைவன்மீதான அன்பாகக் கண்டுகொள்ளச் செய்தார் பரம்பொருளின் மகிமையை உள்ளபடி உணர்ந்த விழிப்பே அவை. மேலும் உணர்ச்சிமயக்கம், காமம் போன்ற பிணிகள் பலவற்றினின்று நம் பக்தித் தத்துவத்தை காப்பாற்றினார்.

79 ஆண்டுகள் திடகாத்திரமான வாழ்வு வாழ்ந்தார் மத்துவர். சமஸ்கிருத உரைநடை, செய்யுள் இரண்டையுமே வளம்பட எழுதியவர் அவர். மத்துவர் இயற்றிய முப்பத்தேழு நூற்களின் தொகுதி சர்வமூலம் என வழங்கப் படுகிறது. ரிக் வேதம், உபநிடதங்கள், கீதை, பிரம சூத்திரங்கள், மகா பாரதம், பாகவதம் ஆகியவற்றுக்குப் பாஷியங்களும், மற்றும் தத்துவம், சித்தாந்தம், சம்பிரதாயம், சதாசாரம்(நல்லொழுக்கம்) பற்றிய விமரிசன நூல்களும் அத் தொகுதியில் அடங்கும். தவிர, பக்திப்பாடல்களயும் அவர் இயற்றியிருக்கிறார்.

நிற்க.. தரவிறக்கி இந்த மாமனிதரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதுடன் அமர் சித்ர கதைகளின் லேட்டஸ்ட் வடிவத்தினை புத்தகமாக வாங்கி வாசித்து பிள்ளைகளுக்கும் கொடுத்து மகிழ உங்களை அன்புடன் அழைக்கிறேன்... 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...