இவண், இன்னுமோர் இதயம் தொலைத்தவன்!

இயந்திர உலகில்
இதய  மிக்கோர்
இல்லையென
இடித்துரைப்போர்
இங்குண்டு!
இதே இயந்திர
உலகினில்
இதயம் தொலைத்து
இவரும் ஈண்டு
இருப்பதை மறந்து...

இனியோரையும்
இகழ்ந்துரைத்தல்
இதுவும் இன்னொரு
இன்பமே
இவர்தமக்கு
இதுவன்றோ
இந் நகர மாந்தரின்
இருதய எண்ணம்
இதுவன்றோ
இவர்தம் காட்சிப் பிழை
இவருமே இதில்
இரண்டறக் கலந்து
இயைந்திருப்பதை
இனியுமா  உணர்வார்

இவர்?

Comments

Rummi XIII said…
நல்லா இருக்கு போலிஸ்கார்.... ஆனா பிரியலை..
John Simon C said…
ha ha ha புரிந்து விட்டால்தான் நம்ம ஆளுங்க அதைக் கவிதை என்று ஏற்பதில்லையே? நகரத்து மாந்தர்களின் மனப்போக்கின் குறுக்கு வெட்டுத் தோற்றம்தான் இது (ஹீ ஹீ ஹீ இதுவும் பிரியாது)

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!