அன்புள்ள வாசகர்களே வணக்கம்..
இந்த மாதம் வெளியீடாக ஜி காமிக்ஸில் வெளியாகி இருக்கும் இரண்டு நூல்களில் முதல் நூலான சிகப்பு சிகை சங்கம்.. இது ஒரு ஷெர்லக் ஹோல்ம்ஸ் சாகசம். துப்பறிவதில் முன்னோடியான ஷெர்லக் தனது நண்பர் டாக்டர் வாட்சனுடன் தனது துப்பறிவின் ஒவ்வொரு நகர்தலையும் பகிர்ந்து கொள்ளும் தருணங்கள் நமக்கு சர்க்கரைப் பாகாய் இனிக்கும்.. இப்படியும் ஒரு பலதுறை ஆற்றல் பெற்ற துப்பறிவாளரா என்று ஆச்சரியப்படுத்தும்.. திரைப்படங்களாகவும், ஆடியோ ரேடியோ நாடகங்களாகவும், நூல் வடிவிலும் மக்களை மிகவும் கொண்டாட வைத்த ஷெர்லக் இங்கே சித்திரக்கதை மூலம் நம்மைத் தொட வருகிறார்.. முத்து காமிக்ஸ் மூலம் தமிழில் ஏற்கனவே பரிச்சயமான நாயகர் இவர். ஆரம்பத்தில் ஷெர்லக் செய்யும் செயல்கள் ஒருவருக்கும் புரியாது தவிப்பார்கள்.. ஆனால் அதன் பலனை விவரிப்புகளுடன் அவர் கூறும்வேளையில் அனைவரும் பிரமிப்பார்கள். அதுதான் அவருடைய துப்பறியும் ஸ்டைல்..
நமது ஜி காமிக்ஸின் பதிமூன்றாவது வெளியீடாக ரூபாய் எழுபத்தைந்து விலையில் சிகப்பு சிகை சங்கம் மற்றும் போஹீமியாவில் ஒரு அவதூறு ஆக இரண்டு கதைகளுடன் நம்மை சந்திக்க வந்திருக்கிறது..
ஆக இவ்வளவு ப்ரிவ்யூ போதும் என்று நினைக்கிறேன்.. சிறப்பான ஷெர்லக் கதைகள் உங்களைக் கவர்ந்து இழுப்பது உறுதி.. புதிரான ஒரு விளம்பரம் செய்தித்தாளில் வருகிறது.. அதனை கவனித்தாலும் அப்போது எதுவும் பிரச்சினை இல்லாத நிலையில் அதனை ஓரங்கட்டி விட்டு தன் பணியினை மேற்கொண்டிருக்கிறார் ஷெர்லக்.. ஒரு கட்டத்தில் அதன் தொடர்ச்சி அவரது வீட்டு வாசலுக்கே வந்து அடைகிறது.. விட்டு விடுவாரா என்ன? ஆணிவேர் வரை ஆராய்ந்து முன்கூட்டியே ஒரு சம்பவத்தைக் கணித்து விடுகிறார் ஷெர்லக்.. அது நிகழ்ந்ததா? குற்றத்தை எப்படி முன்கூட்டியே கண்டு கொண்டார் என்பதை இந்த சிகப்பு தலை சாகசம் உங்களுக்கு சுவாரஸ்யமாகக் கூறவிருக்கிறது.. வாசித்து மகிழவும் சித்திரக்கதைகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கவும் உங்களை அன்புடன் வேண்டுகிறேன்.
இவை எல்லாம் முன்பே படித்தவை , காமிக்ஸாக வந்தால் படிக்கலாம். நன்றியுடன்.
பதிலளிநீக்கு