கொண்டாட்டங்களுக்கோர் துவக்கம் இந்த அட்டைப்படம்..
தீபாவளி நெருக்கத்தில் இருப்பதால் உடனடி கவனத்தை அடுத்த ஆண்டில் வரவிருக்கும் தீபாவளி மலரான இது ஈர்க்கும்.. மீண்டு வந்த மாயனின் தொடர் அத்தியாயங்கள் அசுரர்கள் அடங்குவதில்லை என்ற சிறப்பான தலைப்பில்..
கோல்டன் கிராப் கதை அசத்தலாக இருக்கும்..
ஆண்டு மலர்கள் எப்போதுமே லக்கி லுக்கின் கலக்கலான ஆக்ஷன் நகைச்சுவையுடன் நம்மை சித்திரக்கதை வாசிப்புக்கு இன்னும் நெருக்கமாக்கும்..
இரட்டைத் தலைப்புகள் தொடர்கின்றன.. வதம் செய்வோம் வேங்கைகளே தொடரின் அடுத்த நகர்வு...
தளபதி பராக்..
ஸ்டெர்ன் எப்போதுமே நம்மை ஏமாற்றுவதில்லை.. கமான் ஸ்டெர்ன்.. கமான்..
சகுவாரோ ஏற்கனவே வலுவாக நிலை கொண்டுவிட்டார்.. இந்த அதிரடியும் அசத்தவிருக்கிறது..
விதி எழுதிய வெற்றி வரிகள்.. தலைப்பே தலை தலை தலை என்று ஓங்கி உரைத்திடுமே வெற்றி முழக்கத்தை.. மாஸ் ஹிட் இந்த கதை என்பது இப்போதே தெரிகிறது..
அதிரடி சரவெடி முழக்கம்..
கலக்கலாக வரட்டும்.. காத்திருப்போம்..
கடற்கொள்ளையர் கதைகளுக்கு இருக்கும் பலத்த வரவேற்பு இந்த கதையின் மூலம் இன்னும் சிறப்பாக வெளிப்படவிருக்கிறது.. காத்திருப்போம்.. கடற்படை வீரரே..
மினியில் இது என்னை மிகவும் ஈர்த்தது..
டேங்கோ அதிரடிப்பார்.. ஜானி விளையாட இப்போதே அழைக்கிறார்.. வாரீர்..
செவ்விந்தியரை நல்லவர்களாக காண்பிக்கும் பல முக்கியமான கதைகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.. மிஸ்டர் நோ ஆகாயத்தில் அதிரடிக்கப் போகிறார்.
டாக் புல் வயிறு வலிக்க சிரிப்புக்கு கியாரண்டி..
நள்ளிரவின் நயனம்.. நயன்தாரா இல்லீங்கோ.. தலைப்பு நயமாக வைக்கப்பட்டிருக்கிறது.. சிறப்பு..
வாவ் என்று இப்போதே சொல்லத் தூண்டுகிறது நரகத்துக்கொரு புரவி..
ஆத்திச்சூடி தாக்கத்திலான ஓட்டமதைக் கைவிடேல் .. எதிரிகளை விரட்டி வரும் டெக்ஸ் அண்ட் கோவிடம் இருந்து தப்புவதற்கு அட்வைஸ் செய்துள்ளனர் போலிருக்கிறதே..
ப்ளூ கோட்ஸ்..வாருங்கள் வாருங்கள்.. உங்கள் நகைச்சுவை இங்கே அவசியம் தேவை.. மம்மி..அதிரவிடும் போலிருக்கிறது..
தோர்கல் முத்து ஆண்டுமலரை சிறப்பித்திருக்கிறார் என்பதே பெரும் சிறப்பு..
ஆக்ஸா என்று அலற விடும் இவள் மாடஸ்டியாம்.. கத்தி முனையில் மாடஸ்டியில் இருந்து லயனில் ஆட்ட நாயகியான மாடஸ்டி...கார்வின் சாகசம் நிச்சயம் அசத்தும்.. என் இனிய பொய்யே..ஆவிகளோடு மல்லுக்கட்டுமா?
ரெட் கன் பராக் பராக்.. பலப்பல வன்மேற்கு தொடர்கள் இருப்பினும் அவற்றில் சிறந்ததை நமக்களித்து வரும் லயனின் தேர்வுகள் என்றுமே சோடை போவதில்லை.. இதோ அறிமுக நாயகர் ரெட் கன்..
ஒன் ஷாட் கதைகள் கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை என்பதை ஏகப்பட்ட முறை மெய்ப்பித்திருக்கிறது. இதுவும் மெகா ஹிட் ஆக வாழ்த்துவோம்..
-030.jpg)
இந்த விவரங்களில் சிறப்பான சுருக்கமாக அமைந்து நிறைய தகவல்களைத் தருவது இந்த பக்கம்தான். கவனமாக வாசித்து யோசித்து சிந்தித்து சந்தாவை தேர்ந்தெடுங்கள்.. அடுத்த ஆண்டு அடிப்பொலியாக அமையட்டும்....
லயன் காமிக்ஸ் 2026 முழு சந்தா விவரங்கள் இங்கே முழுமையாக பிடிஎப் லிங்கில்
https://www.mediafire.com/file/y051vu0uxvgtdmn/லயன்+முத்து+2026+அட்டவணை.pdf/file
என்றும் அதே அன்புடன்...
உங்கள் இனிய நண்பன் ஜானி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக