வரும் தீபாவளிக்கு நிக் ரைடரின் மூன்று கதைகள் (ஹாட் கேஸில்) வெளிவர உள்ளது. சென்ற வருடம் த்ரில்லர் தீபாவளி ஸ்பெஷலில் மூன்று வெவ்வெறு கதைகளை வெளியிட்டிருந்தோம். அதே போல் வெளியிட கம்பெனி நிர்வாகம் ஒத்துக்கொள்ளளாததால், இந்த வருடம் நிக் ரைடர் கதைகளையே மூன்று கதைகளாக (ஒரே இதழில்) வெளியிட உள்ளோம்.
முதல் கதை ( சைனா டவுன்)
இது நிக் ரைடரின் ஆரம்பகால கதை. சைனா டவுனின் முதல் ஆக்ஷன், த்ரில்லர் கதை.
இரண்டாவது கதை ( நார்த்போர்ட் மர்மம்)
ஆறாத வடுக்கள் கதையோடு ஒரு சிறு கருவை எடுத்துக் கொண்டு இந்தக் கதையை உருவாக்கியுள்ளார், இதன் கதாசிரியர். நார்த்போர்ட்டிலிருந்து வரும் ஒரு கடிதத்தை எடுத்து கொண்டு, நார்த்போர்ட் செல்கிறார். அங்கே நடைபெறும் மர்மத்தை துப்புதுலக்குகிறார், நிக் ரைடர்.
மூன்றாவது கதை ( காகிதக் கொலைகள்)
ஒரு உணவகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை அதன் பிண்ணனி என்பதை நிக் ரைடர் & மார்வின் துப்பறியும் கதை
இம்மூன்று கதைகளும் வரும் தீபாவளி இதழில் வெளிவர உள்ளது.
இதன் விலை 500/-
முன்பதிவு செய்பவர்கள் அனைவருக்கும் கூரியர் இலவசம்.
இதோடு திரு. ஆசிரியர் வல்லிக்கண்ணன் எழுதிய ஊர்வலம் போன பெரியமனுஷி சிறுவர் சிறுகதையும், 50/- ரூபாய் விலையில் வெளிவரவுள்ளது. இதனுடன் ஈரோடு கார்த்திக் எழுதிய ரகசியத் தீவு சரித்திர நாவலும் வெளிவரவுள்ளது.
தேவையுள்ளவர்கள் 9894692768 Gpay எண்ணிற்கு பணம் அனுப்பிவிட்டு அதே எண்ணிற்கு முகவரியை தெரிவித்தால், புத்தகங்களை அனுப்பி வைக்கப்படும். நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக