வணக்கம் அன்பு நெஞ்சங்களே.. இம்முறை நாம் வாசிக்கவிருப்பது அண்டவெளி அசுர எலியார்.. 1974ம் ஆண்டு ஒரு ரூபாய் விலையில் வெளியிடப்பட்ட டைம்ஸ் ஆப் இந்தியா வெளியீடு. வேற்று கிரகங்களின் மோதல் பூமிப் பந்தை அடைகையில் இங்கே சிறந்த நபரான மாண்ட்ரேக் அந்த சிக்கலை தீர்த்து வைக்க தூதுவராக செல்கிறார்.. ஆழ்கடலுக்கடியில் பூமிக்கு அச்சுறுத்தலாக வந்திருக்கும் எலியார்களின் முக்கிய பிரச்சினை தீனி,சாப்பாடு, உணவு.. அவர்களை மாண்ட்ரேக் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதையின் மையக்கரு..
பல்வேறு கிரகத்தின் நபர்களை கைது செய்து வருகிறது விண்வெளி ஓடம் ஒன்று.. அதன் எஜமானர்கள் அசுர எலியார்கள். புவியின் ஆழ்கடலில் அவர்களை ஒளித்து வைத்து தகுந்த சமயத்துக்காக காத்திருக்கிறார்கள்.. அவர்கள் கைது செய்திருப்பவர்களில் ஒருத்தி இளவரசி.. பேரண்டங்களின் அரசர் மக்னானின் மகள்.. அது அவர்கள் அறியாத இரகசியம்.. அப்படிப்பட்ட நேரத்தில் நமது மாண்ட்ரேக் உதவியுடன் மக்னான் செயல்பட காலம் கனிகிறது.. மாண்ட்ரேக் உதவியைக் கோருகிறார் அரசர்.. எலியாரை தப்ப விட்டால் முழு உலகையும் உணவாக்கிக் கொள்வர். விண்கலத்தில் இருப்பதோ பன்னிரெண்டே எலியர்.. என்ன நடக்கும்???
வாசித்து மகிழ நமக்காக புத்தகத்தைக் கொடுத்தும், ஸ்கேன் செய்தும் அளித்த நண்பர்கள் திரு.செந்தில்நாதன், திரு.குணா கரூர் ஆகியோர்களுக்கு நன்றிகளுடன்..
அபூர்வமான படைப்பிது.. மகிழ்ந்திடுங்கள்.. என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி சின்னப்பன் @ விஜயா மைந்தன்.
மாண்ட்ரேக் கதைகள் இப்போது லயன் காமிக்ஸ் மூலமாக வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.. ஹார்ட் பவுண்டில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வாசிக்க ஏதுவான வடிவில் கொண்டுவரப்பட்டுள்ளன.. வாங்கி வாசித்து ஆதரவு நல்குமாறு வேண்டுகிறேன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக