ஞாயிறு, 6 நவம்பர், 2016

ஞானமிகு பேரரசர் சாலமன் _விவிலிய கதை வரிசை_013


வணக்கங்கள் அன்பு நெஞ்சங்களே..
இம்முறை விவிலியத்திலிருந்து பேரரசர் சாலமனின் வாழ்க்கை வரலாறை அறிந்து கொள்ள உங்களை அழைத்துப் போகிறேன்....இறைவன் அவரிடம் அவரது சிறு வயதில் உனக்கு அளவற்ற செல்வம் வேண்டுமா இல்லை அளவற்ற ஞானம் வேண்டுமா என்று கேட்டார்...எதனை சாலமன் தேர்ந்தெடுத்தார் தெரியுமா?
அவர் ஞானத்தைத் தேர்ந்தெடுத்தார். அந்த ஞானம் அவருக்கு அளவற்ற செல்வத்தை மட்டுமல்ல பூமியின் கடைக்கோடி எல்லையில் வசித்த ஜனங்களும் அவரது கீர்த்தியையும் புகழையும் அறிந்து கொள்ளும் வண்ணம் சிறப்பானதொரு வாழ்க்கையை தேடித் தந்தது.

பேரரசர் சுலைமான் என்று இஸ்லாமிய சகோதரர்களால் குறிப்பிடப்படும் இவரது வரலாறு விவிலியப் பார்வையில் உங்கள் முன் காட்சித் தொகுப்புகளாக விரிகிறது. நல்ல ஞானத்தைத் தேடுகிறவன் அதனுடன் அளவற்ற செல்வத்தையும், புகழையும் அடைகிறான் என்பதே இந்தக் கதை நமக்குக் கூறும் நீதியாகும்.
இனி உங்கள் கைகளில் பேரரசர் சாலமன்....




































ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு கல்வெட்டாகக் கருதத் தகுந்தவையாகும். ஏதோ ஒரு நூலை நீங்கள் வாசிக்கையில் உங்களை அறியாமலேயே உங்கள் ஆழ்மனதில் அந்த நூல் நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கை தடம் மாறுவது உங்களை அறியாமலேயே நிகழும் அற்புதமாகும். கிடைத்தற்கரிய புத்தகங்களை எப்படியாவது ஆவணப்படுத்துவதே என் கனவாகும். அந்த நோக்கத்தைத் தெளிவாகப் புரிந்து இன்று உதவிடும் நண்பர்கள் பின்னர் ஒரு நாள் இந்த என் முயற்சிக்கு உறுதுணையாக நின்றமைக்கு நிச்சயம் பெருமைப்படும் வண்ணத்தில் அவர்கள் கொடுத்த நூலை என்னால் முடிந்த அளவுக்கு மறு சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு உங்கள் கரங்களில் இல்லையென்றாலும் ஆவணமாகப் படித்து இன்புறும் விதத்தில் கொண்டு வந்து சேர்ப்பித்துள்ளேன். இந்த நூலை வெகுகாலமாகப் பாதுகாத்து என் முயற்சிகளைக் கேள்விப்பட்டுத் தானாக முன்வந்து கொடுத்து உதவிய திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்களுக்கும், இந்த நூலை செம்மைப்படுத்தி உங்கள் பார்வைக்குக் கொண்டு வரும் முயற்சியின் ஒவ்வொரு இழையிலும் உடனிருந்து உதவிய திரு.சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் அவர்களுக்கும் என் நன்றிகளை இந்த நேரத்திலும் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். 
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி..  

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

வலைத் தளத்தில் நூல்கள் வாசிக்கும் பழக்கம்..

வணக்கங்கள் தோழமை  உள்ளங்களே. 
வலைதளத்தில் இயங்குகின்ற சில தளங்கள் இணைய இணைப்பிலேயே தங்கள் புத்தகங்களைப் படித்தலையும் அவ்வாறு  படித்து  நன்றாக இருந்தால் தங்கள் நூல்களை  அருகாமையில் உள்ள அங்காடிகளில் வாங்கிக் கொள்ளுவதையும் ஊக்கப்படுத்துவது என்பது உலகுக்குப் புதிய புதுமையானதொரு  செய்தியல்ல. அதே போல  பிடிஎப் ஆகக்  கூட  வாங்கிப்  படித்தல், டவுன்லோட்  செய்து  கொள்ளத் தனிக் கட்டணம்  என்பவையும் உலகமெங்கிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு சங்கதியே. உங்கள் பார்வைக்கு  சில ஆன் லைனில் அணுகிப் படிக்கக் கூடிய  வாசிப்புத் தளங்களை இணைத்துள்ளேன். உறுப்பினராகுங்கள். இலவசப் புத்தகங்களை வாசித்து  அனுபவியுங்கள். சில  கட்டண விகிதங்களுக்குட்பட்டவை. பல இலவசத் தளங்கள். முயற்சியுங்களேன். 

dc Comics Reading
நிற்க தமிழகத்தில் இருந்து உலகளாவிய சர்வதேச தமிழ் சமூகம் தங்கள் அடையாளத்தை நிலைநாட்டிடும் முயற்சிகளில் பெரு வெற்றி கண்டு வரும் இந்த சூழலில் அவர்களுக்காகவும், தமிழ் மொழி வழங்கிடும் அத்தனை இந்து இடுக்குகளுக்கும் காமிக்ஸ் அனுபவத்தைக் கொண்டு சேர்க்கும் விதமாகவும் புதியதொரு மன்றம் துவங்கப்பட்டு இயங்கி வருகிறது.
உறுப்பினராவதும், அதில் உள்ள இலவசப் புத்தகங்களை வாசிப்பதும், தேவை எனில் சந்தாக் கட்டணங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது வரையில் இருபது, இருபத்திரண்டு  புத்தகங்கள் மட்டுமே காணப்படுகிறது. பின்னர் சேர்க்கப்பட்டு கிடைக்கும்  வாய்ப்புள்ள  புத்தகங்கள் முக நூல் முகவரியிலும் காணக் கிடைக்கின்றன. முயன்று பாருங்களேன். யார் கண்டது. இதனை அடியொற்றி நிறைய வலைத் தள வாசிப்பு தளங்கள் துவக்கம் காணலாம். இது தமிழின் முதல்  முயற்சி என்பது மட்டும் இப்போதைய சேதி.

இதற்கிடையில் நண்பர்கள் பல வலைப் பூக்களை இப்போது புதிதாகத் துவக்கி இருக்கிறார்கள். 
மற்றும் நமக்கு நன்கு தெரிந்த ரஞ்சித் ஆகியோர்.
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். 
புதிய வாசிப்பு  முறைகள்  அனைத்தும் வெல்லட்டும். 
என்றும் அதே அன்புடன்
உங்கள் இனிய நண்பன் ஜானி

அரசர் தாவீது_விவிலிய சித்திரக்கதை வரிசை_012

வணக்கங்கள் தோழமை  உள்ளங்களே..
வெகு  நாட்களாகக்  காத்திருந்த  தாவீது  அரசரின் வரலாற்றின் இறுதிப் பகுதி  இந்தக் கதை...
முதல் பாகம் இங்கே: http://johny-johnsimon.blogspot.in/2016/09/011.html
(நன்றிகள் சுட்டிக் காட்டியமைக்கு திரு.வைரம் அவர்களுக்கு)
இந்த  விவிலிய சித்திரக்கதையினை வெகு காலமாக பாதுகாப்பாக வைத்திருந்து நமக்காகக் கொடுத்துதவிய திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்களுக்கும், அன்னாரது  முயற்சிகளுக்கு  உறுதுணையாக  நின்றுதவிய குடும்பத்தாருக்கும் இறைவனின்  ஆசீர் கிடைக்கட்டும்.
 ரிலையன்ஸ் புண்ணியவான்களின்  தயவில்  இந்தப் பதிவினை  வலையேற்றுவதால் அவர்களுக்கும் என் நன்றிகள்.
அரசர் தாவீது தான்  சவுலின் கொலை வெறிக்குத்  தப்பி ஓடி ஒளிந்த காலத்திலும் சரி, மன்னராக முடி சூட்டப்பட்ட  காலத்திலும் சரி இறைவனுக்கு  புகழ் சேர்க்கும் கீதங்களையும், இசைக் கோர்வைகளையும்  இசைத்து  மகிழ்வாக  இருப்பார். அதனால் அவருக்கு விவிலியம் வழங்கிய சிறப்புப் பெயர் ஒன்று  உண்டு. அது சங்கீதக்காரன். இவரது பாடல்கள் அதிகமாகக் கொட்டிக் கிடக்கும்  இடம் விவிலிய நூலின் சங்கீதங்கள் பகுதியாகும்.



























வலைப் பூவில் ஒவ்வொரு பூவையும் மலரச் செய்வது என்பது பெரிய தவமாகும். முகநூலில் உள்ளது போன்ற இருவழிச் செய்திகளும் வேகவேகமான உரையாடல்களும், கிண்டல் கலாட்டாக்களும் இங்கே சாத்தியமல்ல. அமைதி  இங்கே உறைந்த ஒன்றாகும். இந்த நூலின் மின் பதிப்பு  வடிவினை நீங்கள் எங்கேனும் பகிரலாம். வெறுமனே  வலைத்தளத்தில்  கிடைத்தது  என்று மாய முரசு ராணி காமிக்ஸை நண்பர்  ஒருவர்  சமீபத்தில் தனது வலையில் பதிவேற்றினார். அந்த நூலை மின் வடிவாக்கம்  செய்த முயற்சிக்கு இந்தியா டுடேவில் நமது வலைப் பூவுக்கு மத்தியில் இடம் ஒதுக்கி சிறப்பு சேர்த்தார்கள் என்பதை அறிவீர்கள். மாயா மாயா டொம்ம் டொம்ம் டொம்ம் என்கிற அந்த மாய முரசொலியை இன்னுமொரு முறை இரசிக்க  இங்கே செல்லுங்கள். இது போன்று உரிய புத்தகங்களை உரிய நேரத்தில் வாசிக்கவும், மின் தடவல் மேற்கொள்ளவும் கொடுத்துதவிய அனைத்து நண்பர்களையும் இந்த நேரத்தில் நினைவு கூறுகிறேன். அனைவருக்கும் என் நன்றிகள். கடவுளும்காலமும் அனுமதித்தால் அடுத்த கதையான..  
சாலமன் அரசரின் வரலாறுடன் தங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது  உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன். 
உங்களுக்குப் பிடித்தமான கதைகளை தமிழில் வாசிக்கவும் நேசிக்கவும்  
சந்தா  கட்டலாமே நண்பர்களே...



புதிய முயற்சியாக மலர்ந்துள்ள 
மன்றத்தில் இணைவதையும் யோசியுங்கள். 
பை...






சனி, 22 அக்டோபர், 2016

இது என் வானம்: விசித்திரப் பாடம்!

இது என் வானம்: விசித்திரப் பாடம்!: வணக்கம்  நண்பர்களே    !  வலைப்பூவில்  படம் இணைப்பதில்    இது    எனது   முதல்  முயற்சி  !  இணையத்தில்  காணக்கிடைத்த  சிறு  காமிக்ஸ்  கதை  ஒ...

வெள்ளி, 14 அக்டோபர், 2016

வாண்டுமாமா வாசகர்கள் தேடலுக்கு...

வணக்கங்கள் தோழமை நெஞ்சங்களே! 

வாண்டுமாமா  ஒரு சரித்திரம்..அவரது  நூல்கள் குழந்தைகளின் பொக்கிஷம்..அந்தக் கால  சிறார்களுக்கு  வாண்டுமாமாவின்  எழுத்துக்கள்  வரம். அவரது நூல்களைத்  தேடுவோருக்கு உதவும் விதத்தில் இந்தப் பதிவு.

தேடுங்கள்..இன்றும் பயன்தரத் தக்க பல கட்டுரைகள் நிறைந்த நூல்கள் வாண்டுமாமாவின்  வர்ணனையில் கொட்டிக் கிடக்கின்றன. தேடல் இனிதே சிறக்க என்  வாழ்த்துக்கள்! 
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி  

திங்கள், 3 அக்டோபர், 2016

வியாழன், 29 செப்டம்பர், 2016

Lion-Muthu Comics: ஒரு அட்டவணையின் கதை !

Lion-Muthu Comics: ஒரு அட்டவணையின் கதை !: நண்பர்களே, வணக்கம். நிறைய இன்டர்நெட் பேலன்ஸும், நிறைய-நிறையப் பொறுமையும், உங்களிடம் உள்ளனவாயென்று இந்தப் பதிவினில் புகுந்திடும் முன்பா...

திங்கள், 5 செப்டம்பர், 2016

சிவகாசி டு சென்னை...

Diwali Crackers Wallpapers
வணக்கம் தோழமை உள்ளங்களே,

சிவகாசி  டு  சென்னை. நிற்க, நான் காமிக்ஸ் கலாட்டாக்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை. சென்னைக்கு  இன்னும் புத்தகங்கள் வந்து சேரவில்லை. வந்ததும்  அதைப் பற்றிக் குறிப்பிடுகிறேன். நேரில் வந்து பெற்றுச் செல்லுங்கள். சிவகாசி அதிர்வேட்டுகளின் தலை நகரம் என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? ஒவ்வொரு ஆண்டும் நம் ஊர்களுக்கு வந்து குவிந்திடும் மத்தாப்புக்களும், சர வெடிகளும், அணுகுண்டுகளும் சிவகாசிச் சரக்கு என்று பெயர் தாங்கி நின்று பட்டையைக் கிளப்புவதுண்டு. சிவகாசி வெடிகளை சிவகாசியில் கிடைக்கும் விலையிலேயே சென்னையில் வாங்குவது சாத்தியம் என்றால் கொண்டாட்டங்களுக்குக் கூடுதல் உற்சாகம் கொள்ள அது வழி வகுக்கும் அல்லவா? சிவகாசி வெடிகளையும் கூட தீபாவளிக்கு ஒரு மாதம் முன்னரே  வாங்கி பத்திரப்படுத்தி வைத்து தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடலாமே நண்பர்களே. தமிழ் நாட்டின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் சரி. மின்னஞ்சல் மூலமாக ஆர்டர் பெற்று இங்கிருந்தே  உங்கள் பகுதிக்கு அனுப்பும் அளவுக்கு சாத்தியம் உள்ள நண்பர் ஒருவர் தயாராக வெடி பார்சல்களுடன் இருக்கிறார். அவரை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. 
அவர் பெயர் கோகுல். 
அவரது கைபேசி எண் 8122073336
அவரது மின்னஞ்சல் முகவரி. Gokulmadhu2006@gmail.com. 
அவரது முகநூல் தொடர்புக்கு: https://www.facebook.com/gokulakrishnanmadhu.gokulmadhu?fref=ts

சென்னைக்கு சிவகாசியில் இருந்து பொருட்கள் வந்து சேர்ந்து விற்பனைக்கு வைக்கப்படுகையில் முப்பது சதவீத விலை உயர்வு இருக்கும். அது இல்லாமலேயே நேரடியாக சிவகாசி விலையிலேயே நீங்கள் இந்தத் தீபாவளிப் பட்டாசைப் பெற்று உங்கள் பட்ஜெட்டுகளுக்கேற்ப தேவையான ஒவ்வொரு வெடிகளையுமே தனித்தனியே குறிப்பிட்டு வாங்கிப் பயனடைந்து தீபாவளியினை அர்த்தத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாட உங்களை அன்புடன் அழைக்கிறேன். நன்றி. வணக்கம்.   

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

தாவீது_விவிலிய சித்திரக்கதை வரிசை_011

வணக்கங்கள்  தோழமை உள்ளங்களே.
இது தமிழ் காமிக்ஸ் டைம்ஸ்..நம் தமிழ்  நாட்டிலே  எக்கச்சக்கக் கதைகளும், காவியங்களும் மலர்ந்தும் மறைந்தும் தக்க நேரம் வரும்போது யாராலோ, எவராலோ, எங்கோ ஒரு மூலையில் இருந்து சடுதியில் குதித்துத் தன்னை வெளிக்காட்டிக் கொள்வதுண்டு. கல்வெட்டுகளும் அப்படித்தான், மதுரையம்பதியில் ஒரு மாற்று சிந்தனை கொண்ட கல்வெட்டு ஆராய்ச்சியாளர் வைகை ஆற்றை இரசித்துக் கொண்டிருந்தோர் மத்தியில் புகுந்து சலவையாளர்கள்  அடித்துத் துவைத்துக் கொண்டிருந்த கல்லைப் பார்த்தார். அவர் பார்வையில் அதில் இருந்த வட்டெழுத்துக்கள் மட்டுமே தென்பட்டன. அதனை வைத்து ஒரு மறைந்த மன்னரின் கொடை உள்ளத்தை இனம் காண முடிந்தது. இது போன்று எத்தனையோ எடுத்துக் காட்டுகள்.

சிவில் எஞ்சினியரான திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்கள் தேனியில் உள்ள தன் இல்லத்தில் பாதுகாத்து வைத்திருந்த இந்த தாவீதின் வரலாறு இன்று உங்கள் பார்வைக்கு படிக்கவும், இரசிக்கவும் வைக்கப்பட்டுள்ளது என்றால் அதன் பின்னால் இத்தனை ஆண்டுகளாக அதனைப் பாதுகாக்கவும், அதனை இப்போது டிஜிட்டல் ரூபத்தில் தங்கள் வசம் கொண்டு வந்து சேர்க்கவும் ஆன செலவினங்கள் மற்றும் உழைப்பை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அன்னாருக்கு நன்றிகள். இதோ அந்த மாவீரனின் வரலாறு. வேண்டுவோர் மட்டும் மின்னஞ்சல் இங்கே பதியுங்கள். தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு நேரடியாக இலவசமாக அனுப்பி வைக்கப்படும். 





நிற்க, இதனைப் போன்றே நம் தமிழ்த் தாய்த்திரு நாட்டில் கால வெள்ளம் அடித்துக் கொண்டு போன எத்தனையோ சித்திரக்கதைகளும், இலக்கிய நூல்களும், சித்தர் வாக்குகளும் கணக்கிலடங்கா. அவற்றைக் கண்டு பிடிக்க எத்தனையோ விதமான எண்ணற்ற முயற்சிகள் இன்றளவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் சித்திரக்கதைகளைத் தேடிக் கண்டுபிடிக்கவும் அதனை வெளிக் கொணரவும் இன்றளவும் பிரயத்தனப்படுக் கொண்டுள்ளது. உங்களது இல்லங்களை அலசி ஆராயுங்கள். அப்படி ஏதேனும்
இன்னும் இணைய உலகுக்கு அறிமுகமாகாத எத்தனையோ சித்திரக்கதைகளில் ஒன்றேனும் தங்களிடம் இருக்குமாயின் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அவற்றை மறுபிறவி எடுக்க வைக்கும் முயற்சிகளை இன்றும் என்றும் எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை முறியடித்து வெளிக் கொணர்வோம். தமிழின் சிறுவர் இலக்கியத்துக்கு எங்களால் ஆன தொண்டாற்றுவோம் என்ற உறுதியுடன் விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம்.
_ஜானி சின்னப்பன்.  
இறைவனுக்கு சித்தமிருப்பின். விரைவில்...

ஈகிள் கேர்ள்-உதித்து விட்டாள்-புதிய வரவு

  வணக்கங்கள் அன்பு இரசிகர்களே.. புதிதாக கோவையில் இருந்து எசென்ஷியல் பப்ளிகேஷன்ஸ் வாயிலாக அறிமுகமாகி இருக்கிறாள் புதிய நாயகி ஈகிள் கேர்ள். இர...