ஞாயிறு, 15 அக்டோபர், 2017

பாலை நிலத்திலிருந்து சுழல் காற்று-"எலியா"-விவிலிய கதை வரிசை_014

வணக்கம் அன்பு நெஞ்சங்களே...
எங்கெங்கே அநீதியும், அக்கிரமமும் அரசாட்சி புரிகிறதோ அங்கெல்லாம் ஒரு தூயவர் தோன்றுவார்...தீமைக்கு எதிராய்க் குரல் கொடுப்பார். குரலைக் கேட்டு நற்பாதைக்குத் திரும்புவோர் பாக்கியவான்கள்... குரலை அலட்சியம் செய்தோர் இறைவனின் வழிகாட்டுதலை ஏற்க மறுப்போரின் முடிவு மற்றோருக்குப் பாடமாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே கிடையாது...

நிற்க, இம்முறை பாலை நிலத்திலிருந்து சுழற்காற்றுடன் வருகிறேன்... இறைவாக்கினர் எலியாவின் வாழ்க்கை வரலாறு உங்கள் பார்வைக்கு...இறைவனின் குரலை அரசனிடம் அவர் தீரமாகக் கொண்டு சேர்த்த விதம் அரசை எப்படிக் கலக்கி எடுத்தது என்பதனை இங்கே காணவிருக்கிறீர்கள். நீங்கள் இறைவனின் வழிகாட்டுதலின்படி உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்போது எங்கிருந்தாவது இறைவனது அழைப்பு உங்களைத் தேடி வரும்..அந்த அழைப்பை ஏற்று அதன்படி வாழ்வைத் திருத்திக் கொள்ளுதல் நல்லது என்கிற நீதியை இந்தக் கதையில் வாசிக்கப் போகிறீர்கள்...
இந்தக் கதையை உங்களுக்கு வழங்குவதற்கு புத்தக உதவி புரிந்த திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்களுக்கும், தொழில் நுட்ப உதவி புரிந்த திரு.சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் அவர்களுக்கும் இந்த சமயத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...









இந்தக் கதையின் பிடிஎப் தரவிறக்க:
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன்...ஜானி சின்னப்பன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...