வியாழன், 12 அக்டோபர், 2017

XIII ஆலன் ஸ்மித் _இரத்தப்படல வரிசை...

நாளை வெளியாகிறது ஸ்பின் ஆப்.. XIII கதை வரிசை...ஆலன் ஸ்மித்..சாலி ஸ்மித் தன் முப்பத்தெட்டாம் வயதினில் கடும் சிகிச்சைகளுக்குப் பின்னர் ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்..ஆலன் ந்யூ ஜெர்சியிலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் ஆசியப் பிரசாரத்துக்காக அணி திரட்டப்படும் முன்பு வரை திறமையாகப் படித்தார்...போரினால் பாதிக்கப்பட்ட முதல் வரிசை நபர்களுள் ஒருவரான ஸ்மித்தின் அடையாளம் மறைந்து போனது. அவரது பெற்றோர்கள் தங்களுக்குக் கிடைத்த புது மகனுக்கு ஆலனின் அடையாளத்தைப் பொருத்திப் பார்த்து வந்துள்ளனர்.
Image may contain: 1 person, text ஆக மொத்தம் ஆலனின் அடையாளத்தைத்தான் தான் ஸ்டீவ் ராலாண்ட் என்று ஜெனரல் காரிங்க்டன் வெளிப்படுத்தும் வரையில் நமது பதிமூன்று தனக்குரியதாக வைத்திருந்திருக்கிறார்.ஆலனின் பெற்றோர்கள்தான் முதன்முதலில் நமது தலையில் குண்டடிபட்டு கரையொதுங்கிய அடையாளமில்லா பதிமூன்றை மட்டுமே தன் மார்பில் பச்சை குத்திய நபரைக் காப்பாற்றுகின்றனர். 
No automatic alt text available.தங்கள் மகனுக்குரிய அடையாளப்படுத்தலுடன் அவரைக் குணமாக்க முயற்சிக்கின்றனர். 
No automatic alt text available.அந்த முயற்சிக்கு உதவியாக வந்தவர்தான் மருத்துவர் மார்த்தா. இம்மூவரையுமே கொலைகாரக் கும்பல் போட்டுத் தள்ளி விட ஒரு அதிரடிப்படை வீரனுக்குரிய சாமர்த்தியத்துடன் தப்பிச் செல்கிறார் நமது பதிமூன்று...
நாளை வெளியாகிறது பிரெஞ்சு தேசத்தில். ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க.
திகில் காமிக்ஸில் வெளியான சித்திரங்கள் கீழே....


என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன்...ஜானி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...