திங்கள், 9 அக்டோபர், 2017

சாமுவேல்--யேஹோவாவின் சேவையில்..விவிலிய சித்திரக் கதை வரிசை..jw.org comics

வணக்கம் வாசக நெஞ்சங்களே...மறுபடியும் ஒரு பதிவுடன் இன்று உங்களை சந்திப்பதில் பேருவகை கொள்கிறேன்..
யேஹோவாவின் சாட்சிகள் என்கிற உலகம் முழுதும் விரிந்து பரந்த ஒரு கிறிஸ்துவ சபையானது சிறுவர்களுக்காக நீதிபோதனைப் பகுதிகளை கேள்வி பதில்களுடன் சேர்த்து சித்திரக்கதை வடிவில் தந்திருப்பதும் அவ்வப்போது நேரமிருக்கையில் அதிலிருந்து சில பாகங்களைத் தமிழ்ப்படுத்தி நான் வழங்கி வருவதும் நினைவிருக்கலாம்.. கடைசியாக ரூத் அவர்களது வாழ்வியல் சிந்தனைகள் இடம்பெற்றிருந்தன.. இதோ சாமுவேலின் கதை உங்களுக்காக.. விவிலியத்தில் சாமுவேல் தீர்க்கத்தரிசியின் இரண்டு புத்தகங்களை நீங்கள் காணலாம். முதல் புத்தக சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சித்திரக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. பிள்ளையில்லையே என்கிற வேதனையில் தவிக்கும் அன்னாளுக்கு இறைவன் கருணை காட்டுகிறார். அவளுக்குப் பிறக்கும் குழந்தையை தேவாலயத்துக்கு நேர்ந்து விடுகிறாள்... அந்தக் குழந்தை ஏலி தீர்க்கத்தரிசியின் பாதுகாவலில் வளர்ந்து வருகிறது. ஏலியின் குமாரர்கள் மதகுருவாக இருந்தபோதிலும் அவர்கள் செய்யும் தீங்குகள் கணக்கிலடங்காதவை. குழந்தை சாமுவேல் தனது தாயின் அறிவுரையின் படி இறைவனை நாடிப் பற்றிக் கொள்கிறான். அவனது செயல்கள் இறைவனுக்குப் பிடித்தமாகிறபடியால் அவனைக் குரல் வடிவில் இறைவன் அணுகுகிறார்...
மேலே தெரிந்து கொள்ள....



நற்செயல்களும், தேவ பக்தியுமே நம்மை உயர்த்தும்...
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன்...ஜானி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...