வெள்ளி, 3 ஜனவரி, 2020

After that night - graphic novel விமர்சனம்..


ஜெடெடியா கூப்பர்...அந்தப் பெயருடன் இரு பிணங்களை ஷெரீப் அலுவலகத்தில் கொண்டு வந்து போட்டு விட்டு செல்கிறான் இளைஞனொருவன். அவனை தொடரும் ஷெரீப்புடன் மோதல். அந்த மோதலை தடுக்கும் பெண்ணின் அறிவுரைக்கிணங்க ஊருக்கு வெளியே  ஆளரவமற்ற இடத்தில் நடக்கும் அநியாய சண்டை.. ஷெரீப் தன் நற்பெயருக்காக முறையற்ற விதத்தில் இரு முறை இரு வேறு நபர்களை கொல்கிறார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை அச்சுறுத்தி வைக்கிறார். இறுதி வெற்றி அவருக்கே என்றாலும் அது அவரே தன் தோல்வியை ஒப்புக் கொள்ள வைக்கும்படியான மோசமான தோல்வியாக அமைகிறது... வாசித்த விதத்தில் ஐயையோ கிராபிக்ஸ் நாவலா என தெறிக்க விடுகிற கதைய்ம்சம் கொண்டதுதான் எனினும் சோக இழையோட ஓட கதை புனைதலில் ஹென்றி மெயுனியரும், ரிச்சர்ட் கியுரினௌவும் நிற்கிறார்கள்..ஓவியங்கள் மனதை பிசைகின்றன... கதையை சேர்ந்து எழுதிய ரிச்சர்ட் கியுரினௌவே  ஓவியங்களுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டதால் கதையோடு பேனல்களும் நம்மை கதைக்குள்ளே இழுத்துக் கொள்கின்றன... கி.நா.வாக இருப்பினும் வாசிப்புக்கேற்ற கதையே.. குறையெனில் இளைஞனின் பின்புலம் மற்றும் அவனது எண்ணவோட்டத்துக்கான காரணங்களும் அத்தனை சுருதி சேர்க்கவில்லை. அனாதை என்கிற நிலையில் அவன் தன் இடத்தை விட்டு வேறு பெயரில் வேறிடத்தில் வாழ வெளிக் கிளம்புவதையும் போனவிடத்தில் ஏதோவொரு பெயரை பதிவேட்டில் பதியாமல் அதிலிருந்தே ஒரு பெயரை பதிவதும் அது ஷெரீப்பின் இறந்தகால நினைவுகளை தூண்டி விடுவதாக அமைவதையும் கதையின் போக்காக உருவாக்கியிருப்பது அழுத்தமாக பதிவாகவில்லை.. இவ்வாண்டின் 2020 மொழிபெயர்ப்பு பரிசாக நண்பர்கள் களமிறக்கியிருக்கும் இக்கதைக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி..

2 கருத்துகள்:

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...