ஞாயிறு, 12 ஜனவரி, 2020

தர்பார் _விமர்சனம்

Image result for durbar movie
நம்ம சூப்பர் ஸ்டார் திரைப்படம் தர்பார் பார்த்து விட்டீர்களா? செம்மத்தியா அசத்துறார். இந்த வயதிலும் ஜிம் செய்வதென்ன கர்லாக்கட்டை சுற்றுவதென்ன.. நம்மால் முடியுமா என்கிற சந்தேகம் உள்ளவர்களை நிமிர்ந்து அமர வைத்திருக்கிறார்.எக்கச்சக்க எனர்ஜியுடன் தனது நடிப்பை பதிவு செய்திருக்கிறார். சிறைக்குள் அடைக்கப்பட்டு ஆள்மாறாட்டம் செய்து வெளியே உலவும் வில்லனின் மகனை அதே சிறைக்குள் வரவழைத்து கொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை எதிரிக்கு உருவாக்கி வைக்கிறார் ஆதித்யா அருணாச்சலம்.. மும்பை போலீஸ் கமிஷனர்.. அப்படி கொல்லப்படும் வில்லனின்  மகன் உண்மையில் வேறொரு சர்வதேச மாபியா தலைவனின் மகன் என்பது அதிர்ச்சி.. அந்த மாபியா தலைவன் தனது மகளையும் கொன்று உடன் பணிபுரிபவர்களையும் தொடர்ந்து கொன்று வர அவனை எவ்விதம் முறியடிக்கிறார் ஆதித்யா அருணாச்சலம் என்பதே திரைக்கதை.. ரஜினி என்கிற மந்திரம் ஓதி விட்டதால் லாஜிக் குறைகளை அப்படியே ஒதுக்கி வைத்து விட்டு ரஜினிக்காக படத்தை குடும்பத்தாருடன் சென்று கண்டு மகிழலாம்.. நம்ம சாக்லேட் பாய் ஷாம் போன்றே சுனில் தத்தும் இருக்கிறார்.. இவரது நடிப்பில் ஷாரூக்கானுடன் மெய்ன் ஹூ நா கண்டு மகிழ்ந்திருக்கிறேன். இதில் வில்லத்தனம் குறைச்சலே என்பது போல தெரிகிறது... நயன்தாரா...தனி ஆவர்த்தனம்.. இங்கே வேலை கம்மி. நிவேதா தாமஸ் நல்ல வாய்ப்பினை அட்டகாசமாக உபயோகித்து இருக்கிறார். யோகி பாபு ஹிஹி ஏரியாவை நன்றாகவே மெயிண்டைன் செய்துள்ளார். ஸ்ரீமன் பொருத்தமான செய்தியை பொருத்தமாக கூறி செல்கிறார்.. இயக்குனர் முருகதாஸ்   சிறப்பு.. கள்ளக்குறிச்சியை எங்காவது ஒலிக்க செய்து விடுவார். ரமணாவில் பார்த்த சிங்கை இதிலும் காண்பித்திருப்பது சூப்பர்.
போதைப்பொருட்களின் தாக்கத்தையும் அதன் விளைவுகளையும் விழிப்புணர்வூட்டுவது போன்று இத்திரைப்படம் வாயிலாக நமக்கு எச்சரிக்கை கொடுத்திருக்கிறார் என்பேன்... இசை அனிருத்... இன்னும் ரஜினி இரசிகர்களை துள்ள வைத்திருக்கலாம் நண்பா என்று கூற தோன்றுகிறது... எடிட்டிங் பிரிவில் வில்லனை மாபியா கொல்வதை பின்னர் எங்காவது பொருத்தமாக காண்பித்திருக்கலாம். ரஜினி வில்லன் கொல்லப்பட்டு விட்டதை தெரிந்து கொள்ளும்போது நமக்கும் அதிர்ச்சி வந்திருக்க வேண்டும். ஆனால் அட்வான்ஸாக வில்லனை மாபியா தலைவன் கொல்வதை கத்தி காண்பிப்பதை எல்லாம் காண்பித்து வைத்து விட்டதால் அந்த இடம் அதிர்வலை எழுப்பவில்லை....உண்மையில் யாரைத் தேடுகிறோம் என்றே தெரியாமல் ஹீரோ தேடுகிறார்.. அந்த முயற்சியில் கண்ணில் சிக்கும் அத்தனை கேடிகளையும் போட்டுத் தள்ளுகிறார்.. இதனை இன்னும் டெர்ரராக காண்பித்திருக்கலாம். லைக்கா நிறுவனம் பணத்தில் குறை வைத்திருக்காது.. சில பிரம்மாண்டமாக வர வேண்டிய காட்சிகளை எளிமையாக முடித்து வைத்து விட்டார்கள்..என்ன அவசரமோ...ஒரு முறை பார்க்கலாம் சாதாரண பொதுஜனம். ரஜினி ரசிகர்கள் பார்த்துக்கிட்டேதான் இருப்போம்னேன்...
கடைசியாக என் மகன் கேட்ட கேள்வி...
Daddy...வில்லனை மாபியாக்காரன் கொன்னானில்லையா அதே கத்தியால்  ரஜினி அவனை கொன்னிருக்கலாமில்லையா? சூப்பரா இருந்திருக்குமே???
Image result for durbar movie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...