வெள்ளி, 31 ஜனவரி, 2020

ஹீரோ...மழலைகளை கவனிப்போமே..



ஹீரோ...படம் நல்ல கருத்துடன்தான் வந்திருக்கிறது.. என்ன ஒன்று ஆரம்பத்திலேயே நாயகன் செய்வதாக சிலபல சாகஸங்களை நிகழ்த்திக் காண்பித்து விட்டு அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக நாயகன் சூப்பர் ஹீரோவான பின்னணிக் கதையை அமைத்திருந்தால் நன்றாகவே வந்திருக்கும்.. சூப்பர் ஹீரோ என்ற எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டு பாதி படம் வரை காண்பிக்கப்படாத நிலையில் அதுவே திரைப்படத்துக்கான ஸ்பீட் பிரேக்கராக அமைந்து விட்டது.. கடலூர் தூய வளனார் போர்டிங்கில் நான் படித்துக் கொண்டிருந்த சமயம்.. வாசிப்புக்கு நிறைய நேரம் கிடைக்கும்.. அப்போதெல்லாம் எனது ரஃப் நோட்டுகளில் ஓவியம் வரைவது,  விலங்குகளை மையப்படுத்தி கதை எழுதுவது ஆகியவை எனக்கு மிகப்பிடித்தமான செயல்.. ஒரு முறை எனது தந்தையாரும் விசிட்டின்போது அவற்றை நோட்டமிட்டு ஒரு சில நோட்டுக்களை வீட்டுக்கும் எடுத்துப் போனது நினைவிருக்கிறது.. இந்த திரைப்படத்தின் மையக்கருத்தான பிள்ளைகளை அவரவர் திறமைகளை கவனித்து வளர்க்கக் கூறியுள்ளது சிறப்பு..
மேலதிக விவரங்களுக்கு..
https://en.m.wikipedia.org/wiki/Hero_(2019_Tamil_film)
என்றென்றும் அன்புடன்
ஜானி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கிளாசிக் ஸ்பெஷல் -2-வகம் காமிக்ஸ் மார்ச் வெளியீடு

  இனிய வணக்கங்கள் தோழர்களே.. இந்த மார்ச் மாதம் வெளியாகியுள்ள காமிக்ஸ்களின் வரிசையில் வகம் லேட்டஸ்டாக இறக்கி இருப்பதுதான் இந்த கிளாசிக் ஸ்ப...