வெள்ளி, 8 ஜனவரி, 2021

கொலுசின் மொழி_கவிதை_ஜானி சின்னப்பன்


விலகி விலகிப் பறக்க நினைத்தாலும் புவி ஈர்ப்பைத் தாண்டி பறவைக்கெங்கேவானம்.. 

புவியை சுற்றிடும் நிலவாய் அவள் நினைவை சுற்றிடும் என் மனம்..

தொலைவில் கேட்கும் கொலுசின் மொழி என் மனதை மயக்கும் சொக்குப்பொடி

எங்கோ எதிரொலிக்கும் அவளது சிரிப்பு எங்கெங்கோ அலைந்து என் இதயம் துளைத்த அம்பு.

காற்றில் வீசிவரும் வாசம்  வழியெங்கும் மணக்கும் பூக்களை மிஞ்சிடும்.. அவள் வந்து போன தடத்தில்..

_ஜானி சின்னப்பன்..

#கவிதையதிகாரம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு_ட்யூன்_ஒரு_ஸ்பூன்_ஒரு_கொலை_விகடன் சித்திரக்கதைத் தொடர்

 வணக்கங்கள் நண்பர்களே..  இணையத்தில் கிட்டிய இந்த விகடன் தொடரைத் தொகுத்தவருக்கே முழுப் பெருமையும் சாரும்... நாமும் இணைந்து வாசித்து மகிழலாம்....