சனி, 9 ஜனவரி, 2021

குட்டி மின்மினி அழகிக்கு...




மின்னி மினி மறைவதால் நீயொரு குட்டி மின்னலே..

திடீர்திடீரெனத் தோன்றி மறைவதால் நீயுமொரு மாயாவியே.. 


இருளின் ராஜ்யத்தில் உன் வெளிச்ச வாளால் வெட்டி வீழ்த்துவதால் நீயொரு சாகஸக்காரியே..


மனதைக் கொள்ளை கொள்ளும் உன்னழகால் பித்துப்பிடிக்க வைக்கிறாயே சின்னஞ்சிறு மின்மினியே..


கையிலேந்தி உன் வெளிச்சத்தை இரசித்து வழியனுப்பி வைத்தேன்.. 


நெஞ்சில் தன்னம்பிக்கையொளியை தைத்து விட்டுப் போனாய்.. 

அடி என் தையல்காரியே...


_ஜானி சின்னப்பன்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...