போற போக்கில் ஒரு பதிவு!!!!

மிகவும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரித்தான அன்பின் உறவான நண்பர் படைகளே! என்றும் அன்புடன் ஜானி வரையும் மடல்! முப்பத்தாறாம் புத்தக கண்காட்சிக்கு வரும், வராமல் தூர இருந்தே வாழ்த்தும் நெஞ்சங்களின் ஆர்வத்தை நினைத்து இந்த போற போக்கில் ஒரு பார்வை!!! பதிவை போடுறேன்! கண்டு மகிழுங்கள்!


வரும் நண்பர்கள் வாங்கி மகிழ கீழே அட்டை படத்தில் இருக்கும் புத்தகங்கள் கிடைக்கும் உங்கள் அன்பானவர்களுக்கு வாங்கி கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ வைங்களேன் நம்ம நெவெர் பிபோர் ஸ்பெஷல், சென்ற இனிய வருட வெளியீடுகள் தவிர்த்து மற்றவை குறித்த கவனகம் இது , 
 நேற்று மதியம் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகள் உங்களின் ஆர்வமான பார்வைக்காக!

 இதெல்லாம் மற்ற பதிப்பகங்களின் புத்தகங்கள் சாமீ! நம்மதில்லை!

 நம்ம அயிட்டம் கீழதான் இருக்கு தூக்கிருவோமா?? ஹி ஹி ஹி ஆர்வம் தாங்கலை நண்பா! அடக்கி வாசிச்சுட்டு வந்துட்டேன்!
 பையனுடன் ஒரு பதிவு! ஹீ ஹீ ஹீ அலப்பறை பண்றதுல அவன் சமர்த்தன்!
 பார்சல் கொஞ்சமா இருக்குன்னு நினைச்சிடாதீங்க வரும் வரும் வந்துகிட்டே இருக்கும்!
 இருட்டுல போட்டோ தரம் அவ்ளோதான் பாஸ்!
 நம்ம ஸ்டால் எண்ணிக்கை குறிப்பிட்டுள்ளது! 343

 இதான் ஷெல்லி பாதை !
 லாரிகளின் அணிவகுப்பு நம் இதய துடிப்பை அதிகரிக்கிறது !
 தொழிலாளி ! வாழ்க! அவர்களது பங்களிப்பு மிக முக்கியமானது நண்பர்களே!


 மரம் தூக்க இம்மாம் பெரிய வண்டி வந்துச்சு !
 நண்பர்கள் இந்த ஆங்கில பலகையை நினைவு வைத்து அப்படியே உள்ளே நுழைந்தால் அதான் ஷெல்லி பாதை சரியா?

 நுழைவு வாயில் அலங்காரம் போய்கிட்டிருக்கு! ஆனந்த விகடன் விளம்பரம் !


சரியா நண்பர்களே! வந்துடுங்க வர முடியாதவங்க! அங்கிருந்தே வாழ்த்துங்க!  நண்பர் சௌ மற்றும் அனைத்து ப்ளாக் நண்பர்களின் பதிவையும் எதிர்பாருங்க! 
நண்பர் சௌ இன்னிக்கு ஆட்ட நாயகன் ஆறு மணிக்கு அதகளம் ஆரம்பம்! வராத நண்பர்கள் இவரது பதிவுக்காக காத்திருங்கள் தோழர்களே! மற்ற நண்பர்களது பதிவுகளுக்கு முன்னாலேயே பதிவை எழுதி வைத்து கொண்டு காத்திருக்கும் கண்மணி இவர்! இவரது சேவை அளப்பரியது! வாழ்க சௌ!
என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி! 

Comments

கலக்கீடீங்க ஜானி போகிற போக்கில் hype அதிகபடுத்ததிட் டு போய்டீங்க.
என்னால வர முடியல.நான் எனது சொந்த ஊருக்கு வந்துட்டேன்.
அப்பப்ப அப்டேட் பநீடே இருங்க.

வழக்கமா உங்க படம் இருக்கும் இன்று அந்த இடத்தை நண்பர் சௌந்தருக்கு விட்டு கொடுத்துடீங்க.
cap tiger said…
வாவ்! சூப்பர் நண்பா! போட்டோ அப்டேட்ஸ் கலக்கல்! நான் திருச்சியில் இருக்கிறேன்! என்னால் ebay மூலமாகவே நம் காமிக்ஸ் படிக்க வாய்ப்பு! :(
ப்பா, என்ன பதிவுடா இது?! போற போக்கில!!! :)
முதல் நாளே சென்று துப்பறிந்து செய்தி கொடுத்த ஜானி வாழ்க. ஹைப் ஏத்தி விட்டுட்டீங்க.

கிருஷ்ணா வா வே வராதது வருத்தமாக இருக்கிறது. அவரை இந்த சூழ் நிலையில் பார்க்கலாம் என்று இருந்தேன்.
Periyar said…
ஆர்வத்தை தூண்டும் அட்டகாசமான பதிவு! கலக்குறீங்க :)
Rafiq Raja said…
இத்தனை போட்டோக்களா.... போற போக்கில் என்று சொல்லிட்டு டபுள் மீல்ஸ் கட்டியிருக்கீங்களே, ஜான் :P

நடக்கட்டும் நடக்கட்டும். :D
தல scroll பண்ணி கை வலிக்குது. இது போற போக்குல போட்டதா....? அப்ப உட்காந்து போட்டிருந்தா......! :)
RAMG75 said…
preparation பார்க்கிறத்துக்கு நல்லா இருக்கு.. தேங்க்ஸ் சைமன் ஜி..
Vimalaharan said…
சூப்பர் Trailer.. Trailerஏ இப்படி இருந்தா Main Picture எப்படி இருக்குமோ

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!