ஒரு வழிப் போக்கனின் பார்வையில்....

அன்பு நண்பர்களே! ஆருயிர் தோழர்களே! நலம்! நலமே விழைகிறேன்! இன்று மீண்டுமொருமுறை உங்களை சந்திக்க ஒரு வாய்ப்பு அமைத்து தந்தது குறித்து இறைவனுக்கு நன்றிகள்! இன்று இரவு ஒரு லுக்கு விட போனேன்! நம்ம நண்பர் திரு கோபால கிருஷ்ணன் அவர்கள் எதிரில் உள்ள பழைய கடையில் புத்தகங்களை அள்ளிகிட்டு இருந்தார்! 
உள்ளே நம்ம ஸ்டால் பக்கம் ஒதுங்கலாம்னு போனால் எதிரில் ஒரு ஸ்டாலில் அடிச்சேன் ஒரு ஜாக்பாட்! கவி சிங்க மகன் வாலி வாட்ட சாட்டமாக அமர்ந்திருக்க கவி குட்டி புலி பழனி பாரதி பம்மி அமர்ந்திருந்தார்! ஒரே போட்டோ பிளாஷ் மழையில் நனைந்து கொண்டு தலைவரை பார்க்க அருமையானதொரு வாய்ப்பு! 


 அவரை தொந்தரவு பண்ணாமல் தூர இருந்தே ரசித்து விட்டு பின்னர் நம்ம ஏரியா பக்கம் ஒதுங்கினேன்! மூடும் நேரமாக (எட்டு மணி) இருந்தது. ஒரு சகோதரி ஆங்கிலத்தில் தன் பிள்ளைகளுக்கு ஜஸ்ட் டைம் பாஸ் என்று தனது தோழியிடம் அளவளாவி கொண்டே நெவெர் பிபோர் ஸ்பெசலை அள்ளிக்கொண்டு போன போது என் மனத்தில் ஒரு முறை ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் ஒரு சகோதரி தனது பிள்ளைகளுக்கு தமிழில் காமிக்ஸ் கேட்டு பின்னர் கிடைக்காமல் போன சம்பவம் கண்ணில் நிழலாடியது! இனி நம்ம காமிக்ஸ் எதிர்காலம் மிக மிக மிக சிறப்பாக அமையவிருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வே பெருமைக்குரிய ஒரு எடுத்துக்காட்டல்லவா? 

 புத்தகங்கள் சும்மா ரெக்கை கட்டி பறந்து விட்டன. பழைய புத்தக ஸ்டாக் ஒரு காலத்தில் இருந்தது ஜென்டில் மேன் என்று நாம் புலம்பும் காலம் வந்து கொண்டு இருக்கு பாய்ஸ்! சீக்கிரம் உங்கள் பிரதிக்கு முந்துங்கள்! கடைசி நேர கலாட்டாவுக்கு ஒதுங்குவோர் உடனே சந்தா கட்டிடுங்களேன்?

 டபுள் திரில் ஸ்பெசல் ஓடி போச்சு பாஸ். போயிந்தி! இனி நம்ம கிட்ட ஸ்டாக் இல்லையாம்! அதே நிலை தலை வாங்கியாருக்கும் நாளை கொஞ்சம் பழைய புத்தகங்கள் வருகின்றன!
 என்னது புது டெக்ஸ் புத்தகமா? நாளை எண்பது புக்ஸ் மட்டுமே வருது நண்பாஸ். முடிந்தவர்கள் இரண்டு மணிக்கு அங்கே போனா கிடைக்கும்!
 
வரோம் அப்புறமா ஜென்டில் மேன் அண்ட் விமன்! பாய்! 

Comments

மீண்டும் ஒரு எக்ஸ்பிரஸ் பதிவு.
கலகுறீங்க ஜானி.
இப்பொழுதெல்லாம் உங்களுக்கு பதில் நீங்க போடும்
உங்க திரு புதல்வரின் புகைப்படங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது.

அதுக்காக நீங்க நல்ல இல்லை என்று அர்த்தம் இல்லீங்க :D .
உங்க துப்பாகிகாகவே ஒரு தனி கிரேஸ் இருக்குங்க..
John Simon C said…
அதிரடி கிருஷ்ணா! நம்ம அடுத்த அடாவடிய கொஞ்சம் பிரீயா இருக்கும்போது அரங்கில் இறக்கி விட்டுடலாம் என யோசித்து வருகிறேன்! வணக்கம்!;-)
காமிக்ஸ் புத்தகங்கள் சில மாதங்களில் முழுதும் விற்றுத் தீர்வது மகிழ்ச்சி தரும் சங்கதி!

//உங்க துப்பாகிகாகவே ஒரு தனி கிரேஸ் இருக்குங்க..//
Factu Factu Factu :)
John Simon C said…
வருகைக்கு நன்றி ப்ளேடாரே! துப்பாக்கி அன்பானவர்கள் கையில் இருப்பது பாதுகாப்பு! ஆபத்தானவர்கள் கையிலிருப்பது அபாயம்! ஹி ஹி ஹி!
துப்பாக்கி அன்பானவர்கள் கையில் இருப்பது, ஆபத்தானவர்களுக்கு அபாயமானது - இப்படியும் சொல்லலாமே?! :D
John Simon C said…
சொல்லுங்கள் சொல்லுங்கள்! அப்படி இருந்துவிட்டால் பிரச்சனைகள் குறைந்து வாழ்வு மலரும் ஜி! தலை வாங்கிகள் உருவாக மாட்டார்கள்!
Modesty Blaise said…
Super Ji wonderfull post.. nice clicks Gopal as usual vettai mudichitaar pola...

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!