வியாழன், 22 ஜனவரி, 2015

வாழ்ந்தது போதுமா? _001_இது ஒரு அரிய சித்திரக் கதைத் தொடர்!_vazhnthathu pothuma_a comics series from veerakesari magazine!!!

அன்பிற்கினிய நட்பு பூக்களே!
வணக்கம். வலைப்பூவுக்கு வருகை புரிந்தமைக்கு என் வந்தனங்கள்.
அது ஒரு வியாழக்கிழமை. வருடம் 1972. மாதம் அக்டோபர். அன்றுதான் இந்தத் தொடர் ஒரு துவக்கம் பெற்றது. அன்றுதான் அருமையான எழுத்தாளர் திரு சந்ரா அவர்களது இனிமையும், பரபரபரப்புமான இந்தத் தொடர் வீர கேசரி நாளிதழில் அச்சேற்றம் கண்டது. தமிழ் செம்மொழி இன்னும் ஒரு சிறகைத் தன் மகுடத்தில் அன்றுதான் தரித்தது. வீரகேசரி தினசரிக்கும், ஓவிய எழுத்தாளர் திரு சந்ரா அவர்களுக்கும் இந்தத் தொடரை அர்ப்பணித்துக் கொண்டு, இந்த அபூர்வமான சித்திரக்கதையை வெகு நாட்களாக தனது பொக்கிஷ சாலையில் பாதுகாத்து  இன்று நம்முடன் இந்த தொடரை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டு கொண்டாடும் அன்பு மிகு அலெக்ஸ்சாண்டர் வாஸ் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு இந்தத் தொடரைத் துவக்குகிறேன்.
ஒரு அருமையான தொடரை அந்த காலக்கட்டத்தில் வெளியான அதே மன நிலையில் நீங்கள் இரசிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அதே போன்றதொரு வியாழன் அன்று ஒரு துவக்கம் கொடுக்கிறேன். நேரமும், காலமும் காவலனின் பாதையில் மக்கள் சேவைக்கு முதன்மை கொடுத்துப் பின் இரசிகர் சேவைக்கு உற்சாகத்துடன் வருகையில் கொஞ்சம் முன்-பின்னாக இந்தத் தொடர் வந்தால் அதற்கு முன்னதாகவே மன்னிப்பினைக் கோருகிறேன்! தமிழ் - இலங்கை மக்களின் தொடர்ந்த அன்புக்கும் இதுபோன்ற சித்திரக் கதைகள் உருவாக்கத்தில் அங்கும் நண்பர்கள் தொடர் ஆதரவும், முயற்சிகளையும் முன்னெடுத்தால் இன்னும் வெவ்வேறு புதிய சித்திரக்கதைகள் உருவாக வேண்டும். மக்கள் மனம் சித்திரங்களால் நிறைய வேண்டும் என்கிற சின்ன சிந்தனையை உங்களோடு பகிர்ந்து கொண்டு கதைக்கும் நேரத்துக்கு உங்களை நேராக அனுப்பி விடுகிறேன். மகிழுங்கள்! மனம் மலர்ந்து வாழுங்கள்! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

   கதை துவக்கம் பெறும் தினமாதலால் ஒரு அணிகலன்-அழைப்பிதழ்  முயற்சி மேலே உள்ளது. மற்றபடி கீழே உள்ள உண்மையான பக்கங்களே தொடரும்.
துவக்க வார்த்தைகளிலேயே நம்மைப் நிமிர்ந்து அமரச் செய்து விடுகிறார் திரு சந்ரா. இந்தத் தொடர் முழுக்கவே அடுத்தடுத்த திருப்பங்களும். திடுக்கிடும் சம்பவங்களுமாகக் கடப்பதை நீங்கள் காணலாம். ஒரு இரசிகராக கதைக்குள் தொடரைத் தொடர எனது வாழ்த்துக்கள்ங்க!

அப்புறம் நேற்றுடன் சென்னை புத்தகக் கண்காட்சி இனிதே நிறைவடைந்தது. நிறைய மகிழ்வான தருணங்கள் இம்முறை. நண்பா குழாம் தி.நகரை முற்றுகையிட்டதில் இருந்து அடுத்தடுத்து இரசிக்கும் விதமான நிகழ்வுகள் அரங்கேறின. சேலம் டெக்ஸ் விஜயராகவன், டெக்ஸ் சம்பத், ஈரோடு விஜய், மாயாவி சிவா, தாரமங்கலம் பரணிதரன், ரம்மி XIII, இன்னும் பல நண்பர்கள் அன்பளித்த இனிப்பும் அவர்களது அன்பும் நெஞ்சில் நீங்காமல் நிறைந்துவிட்டது. மறுபடியும் சந்திப்போம் நண்பர்களே! என்னிடம் சொல்லியும், சொல்லாமலும் சில நெஞ்சங்கள் கடந்ததும் நிகழ்ந்தது! அனைவருக்கும் நன்றிகள்! ஒரு சேதி சொல்லவா? இந்த முறை புத்தகத் திருவிழா எக்கச்சக்க லாபம் அடைந்ததால் தலைநகரில் இருந்தே சில விசாரிப்புகள். அடுத்த முறை இன்னும் பெரிய அளவில் இது அமையும் போல..
மிக நெருங்கிய, என் மீது பாசம் வைத்துள்ள நண்பர் ஒருவர்  இந்த காமிக்ஸ் மீதான ரசனை-நேசம் பொறுப்புமிக்க பணியில் உள்ள உங்களுக்குத்  தேவைதானா ?  என்று பொருள்பட கேள்வியொன்றை வீசினார். சித்திரக்கதைகள் மீது நேசம் வளர செய்த மறைந்த எனது பாட்டனார் திரு.அமிர்தன் அவர்களைத்தான் இது குறித்து கேட்க வேண்டும். பழமை என்கிற விதத்தில் அன்னாருடைய அரிய புகைப்படங்களையும் பதிவோடு பதிவாக பாதுகாப்பு செய்யும் விதமாக அவ்வப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேனே?  
என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி (எ) ஜான் சைமன் 
குறிப்பு:
வீர கேசரி இதழுக்கு ஒரு மெயில் அனுப்பி கூடுதல் தகவல்கள் கோரியுள்ளேன். குறிப்பாக இந்தத் தொடர் குறித்த தகவல்கள் கூடுதல் விவரங்கள் தெரிய வந்தால் நம்முடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். ஒரு ஆவணப்படுத்தும் நோக்கில் இந்தத் தொடரை முன்னோக்கி செலுத்துவோம். பை!

2 கருத்துகள்:

  1. வீரகேசரி வரை வந்து விட்டீர்கள்.விமர்சன பதிவுகளையும் தொடருங்கள்.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜீவ்! தொடர்வோம்! யாழ் நகரில் அல்லது மற்ற பகுதிகளில் இயங்கும் நூலகங்களில் தமிழ் சித்திரக் கதைகள் குறித்து உங்கள் சக ரசிகர்களுடன் ஒரு சுவாரஸ்யமான தேடல் மேற்கொள்ள முடிகிறதா என்று பாருங்களேன்?!?!?

    பதிலளிநீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...