வியாழன், 29 ஜனவரி, 2015

கடல் கடந்தும் காமிக்ஸ் தேடு......

வணக்கம் அன்பு உள்ளம் கொண்டோரே! இம்முறை ஒரு சிங்கப்பூர் சித்திரக்கதை வரிசையுடன் தங்களை சந்திப்பதில் பேருவகை அடைகிறேன். "தமிழுக்குத் தொண்டு செய்பவர்கள் சாவதிலை"  என்கிற அடைமொழியுடன் அட்டகாசமான ஏ நான்கு சைசில் இன்னும் கொஞ்சம் கூடப் பெரியதாக வெளியாகிப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் படக்கதை வரிசையினை தேடலின் ஒரு பகுதியாகக் காண நேரிட்டது. கண்டு அகமகிழ்ந்து அதனை தங்களுக்கும் காட்சிப்படுத்தும் வாய்ப்பு அமைந்ததற்கு இறைவனுக்கு நன்றிகளை சொல்லிக் கொண்டு கதை குறித்து விளக்குகிறேன். ஆரஞ்சு நிறத்தின் அடர் மற்றும் மென் வண்ணங்களைக் குழைத்து வண்ணம் தீட்டப்பட்டிருக்கும் இந்தக் கதை வரிசையில் யான் காணுவகை அடையப் பெற்றது டாக்டர். செண்பகராமன் பிள்ளை, மறைமலையடிகள், ராணி மங்கம்மாள், பாவேந்தர் பாரதி தாசன், இராச ராச சோழன் மற்றும் கீழே நீங்கள் காணும் புலித்தேவன் ஆகியோரது வரலாற்றுப் பெட்டகங்களான சித்திரக்கதைகள்தான். இவற்றின் விலை விவரங்கள் அந்த குறிப்புகளில் காணப்படவில்லை. வெளியிட்டோர் EVS Publishers, 16, Cuff Road, singapore 209727. Tel.(65)2915334, Fax (65) 2952105. முத்து விசிறியார் இது குறித்து மேலதிக விவரங்களை பின்னர் விசாரித்துப் பகிர வேண்டுகிறேன். இரண்டு தினங்களுக்கு முன்னர் சிங்கப்பூர்-மலேசிய வாழ் தமிழ் சமூகத் தயாரிப்பு சித்திரக்கதைகள் நம்மை வந்து எட்டினால் நன்றாக இருக்கும் என்பது குறித்து தங்களுடன் என் மனதில் இருந்ததை பகிர்ந்தது குறித்து நினைவுள்ளதா? அருமை சகோதரர் அன்பு செல்வன் என்னை சந்திக்க வேப்பேரி வரை வந்திருந்த போது பெரியார் திடலில் உள்ள நூலகத்தில் எனது காமிக்ஸ் தேடலின் ஒரு பகுதியாக ஈடுபட்டிருந்தேன். நூலகர் முருகேசன் அவர்களது கனிவான வார்த்தைகள் மட்டுமன்றி சித்திரக்கதைகளும் அதுவும் அயல் நாட்டில் உருவாகி இங்கே கொண்டு வரப்பட்டுள்ள சித்திரக்கதைகள் குறித்து அறிந்து அக மகிழ்ந்து போன வேளையில் அன்பு செல்வனுடன் ஒரு சந்திப்பும் நிறைவாக அமைந்தது. நண்பர் புதிய தலை முறை. சித்திரக்கதை வயது தாண்டி எல்லை தாண்டி அனைவரையும் அன்பினால் கட்டி இணைப்பதை மிக இரசித்தேன்!  





அப்புறம் இறுதி பன்ச் ஒன்று!
இந்த சித்திரக் கதைகளை தனது பேரப்பிள்ளைகளுக்காக சிங்கப்பூர் சென்றிருந்த போது வாங்கி வந்து அப்படியே நூலகத்துக்கும் ஒரு செட் வாங்கிக் கொடுத்தவர் யார் என்று நினைக்கிறீர்கள்?
விடுதலை நாளிதழ் ஆசிரியரும், திராவிட கட்சியின் தூணும், பகுத்தறிவுப் பாசறையின் பெருமகனாருமான  அய்யா.கி.வீரமணியார்தான் அவர்!
_என்றும் அதே நட்புடன்_உங்கள் இனிய நண்பன்_ஜானி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...