புதன், 14 ஜனவரி, 2015

பொங்குக! ஓங்குக! மலர்க!


கணநேரமும் கண்ணுறங்கா கதிரவனின்
கதிரொளியில் கதிரடிக்கும் களத்துமேட்டு
காதலர்கள் கண்விழித்து கானமழை
கீதமொழி கொஞ்சிப்பேசிக் குலவையிட்டுக்
கைதூக்கிக் கும்பிட்டுப் பொங்கல் பானை
பொங்கிவரும் வேளை சொல்வர்
பொங்கலோ பொங்கல்;
பொங்கிவரும் பொங்கலின் புத்துணர்வு
பொங்குகின்ற பெண்டிர்தம் மனம்போல
புன்னகையுள் பதித்து பிரவாகிக்கட்டும்;
பொங்கல் திருவிழா புத்தம்புதுசாக
வண்ணக் கோலங்கள் வரைந்திடும்
இல்லங்களின் முற்றங்களில் சங்கீதம்
தொனிக்கட்டும்! பொங்கலோ பொங்கல்;
கடித்திடும் கரும்பினில் வழிந்திடும்
சாறைப் போன்று; வெடித்திடும் வெல்லத்தின்
சுவையைப் போன்று; இடித்திடும் பச்சரிசியின்
வாசம் போன்று; இனிக்கட்டும் இனி
உதிக்கும் ஒவ்வொரு தினமும்!
பொங்கலோ பொங்கல்;

தை மகள் காலடி வலதினை
வைத்து விதைத்திடட்டும் வளங்களை!
அன்பினில்; கனிவினில்; சுவையினில்;
மகிழ்வினில்; நிறைவினில்; திருப்தியில்
நிறைக வாசகர்தம் உள்ளங்களும்;இல்லங்களும்
பொங்கலோ பொங்கல்;
என வாழ்த்துகிறேன்!  


6 கருத்துகள்:

  1. என்னா ப்ரதர் எல்லாரும் ஏதோ கொலைவெறியா கேமராவ பாக்குறீங்க ?

    பதிலளிநீக்கு
  2. உங்க கிட்ட இருந்து ஒரு கமெண்ட்டாவது வராதா? என்ற ஏக்கம்தான் இப்படி கொலைவெறியா மாறிடுச்சு ரவி சாரே.

    பதிலளிநீக்கு
  3. பொங்கல் வாழ்த்துக்கள் ஜி. உங்கள் இளவயது போட்டோவா ஜி?

    பதிலளிநீக்கு
  4. ஹா ஹா ஹா என் சகோதரனின் அன்புக்கு நன்றி! ஆனா விஸ்வா கிண்டலை நினைத்தால் ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...