சனி, 27 டிசம்பர், 2014

மேத்தாவின் முழுமையான காமிக்ஸ் பட்டியல்!

ஆசை கொண்டால் ஆழ்கடலும் முழங்காலளவு! முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை! உழைப்பு ஒன்றரை வருடங்கள்! பூஜ்ஜியத்தில் தொடங்கி நல்லுணர்வு கொண்டு புரிதலுடன் பகிர்ந்து கொண்டு அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ரசிக சீமான்களுக்கும்.... தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் சார்பில் நன்றிகள்! 1. இரத்த விளையாட்டு (ஜான் சில்வர்)
2. கொலைக் கழகம் (ஜான் சில்வர்)
3. மரணக்கயிறு (ஜான் சில்வர்)
4. மனித வேட்டை (ஜான் சில்வர்)
5. பயங்கரத் தீவு (ஜான் சில்வர்) 
6. விசித்திர பந்தயம் (ஜான் சில்வர்)
7. மரணத்தின் நிழலில்... (ஜான் சில்வர்)
8. நவீனக் கொள்ளையர் (ஜான் சில்வர்)
9. புதிர்மாளிகை (லில்லி குழுவினர்)


10. பொற்சிலை மர்மம் (ஜான் சில்வர்)
11. நள்ளிரவு பிசாசு (லில்லி குழுவினர்)
12. சுரங்க வெடி மர்மம் (ஜான் சில்வர்)
13. இரும்புக் கை (ஜான் சில்வர்)
14. மரணக்களம் (ஜான் சில்வர்) 

15. நல்லவனுக்கு நல்லவன் (ஜான் சில்வர்)
16. கல் நெஞ்சன் (ஜான் சில்வர்)
17 மர்ம பங்களா (அங்கிள் டெர்ரி)
18 ஆழ்கடல் திருடன் (ஜான் சில்வர்)

19. வைரக் கொள்ளை (ஜான் சில்வர்)
20 இரத்த பூதம் (அங்கிள் டெர்ரி)
21. மர்மத் தீவு (ஜான் சில்வர்)
22. மரண வைரம் (ஜான் சில்வர்)
23. பழி தீர்க்கும் உளவாளி (ஜான் சில்வர்)
24 போலி சுல்த்தான் (ஜான் சில்வர்)


25 மைக்ரோ ப்லிம் மர்மம் (ஜான் சில்வர்)
26 ரகசிய பைல் எக்ஸ் (ஜான் சில்வர்)
27 கடத்தல் மர்மம் (ஜான் சில்வர்)
28 இரத்த கறைகள் (ஜான் சில்வர்)


29 இரகசிய எதிரி (ஜெய்சன் ஒயில்ட்)


30 முகமூடி முரடன் (ஜெய்சன் ஒயில்ட்)

பின்குறிப்பு அசோக்/மேத்தா காமிக்ஸ் நிறுவனத்தார் வெளியிட்டுள்ள சித்திரக் கதை புத்தகங்களில் சில கதைகள் மறுபதிப்பாகவும் வெளியிட்டுள்ளனர்.
அதன் தலைப்புக்கள் ...
1.அரசாங்க ஒற்றன் (இரத்த விளையாட்டு)
2.ரகசிய உளவாளி (கொலைக் கழகம்)
3.மரண விளையாட்டு (மரணக்கயிறு)
4.கொலைகார லீடர் (மனித வேட்டை)
5.வெடி மண்டல ஒற்றன்(பயங்கரத் தீவு)
6.துப்பாக்கி முத்தம்(விசித்திர பந்தயம்)
7.இனி ஒரு கொலை (மரணத்தின் நிழலில்...)
8.சர்வதேச உளவாளி (நவீனக் கொள்ளையர்) முன்&பின் அட்டை, அட்டையின் உள் பக்கம், பக்கங்கள் 3,66 ஆகியவை மட்டுமே தேவை)
9.மர்ம மாளிகை(புதிர்மாளிகை)
ஆக மொத்தம் முப்பத்தொன்பது சித்திரக்கதைகளை தமிழ் கூறும் நல்லுலகுக்கு வாரி வழங்கிப் பெருமை கொண்ட மேத்தா காமிக்ஸின் ராஜ்ஜியம் மிக ரசிக்கதக்கவிதத்தில் அமைந்ததுடன் அனைவரின் ஆதரவினையும் அன்பினையும் பெற்று இன்றும்கூட ஜான்சில்வரின் சாகசங்களை சிலாகித்துப் பேசக் கூடிய விதத்தில் நீடித்து நிலைத்து என்றென்றும் நினைவுகளில் நிற்கும். என் நண்பர்-பெரு மதிப்புக்குரிய திரு குணசேகரன் அவர்கள் எல்லைக்காவல் படையின் எங்கோ ஓர் மூலையில் காவல் புரிந்து கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில் அவரும் நானும் தெருவோரத் திண்ணைகளை மேடைகளாகக் கொண்டு மேத்தா வித்தையில் மயங்கியிருந்த நாட்கள் என்றென்றும் மறவாது! அண்ணா! இதை நீ அறிவாயா? என்கிற மாறாத ஏக்கத்துடன் இன்றும் உங்கள் அன்புத்தம்பி ஜானி!!!
இதை சாத்தியமாக்கிக் காட்டிய அனைத்து காமிக்ஸ் நேயர்களுக்கும் எனது இனிய நன்றிகள்! தாங்க்ஸ் நண்பர்களே! நெகிழ்வுடன்-ஜானி! 

5 கருத்துகள்:

எங்கள் ஊர் நூலகத்துக்கான இரஷ்ய சிறுவர் இலக்கிய அன்பளிப்புகள்

 வணக்கங்கள் அன்பு வாசக இதயங்களே. உங்கள் அனைவருக்கும் வேலன்டைன்ஸ் டே வாழ்த்துக்கள்..  சிறுவர் இலக்கியத்தில் இரஷ்ய படைப்புகள் மிகவும் சிறப்பான...