சனி, 20 டிசம்பர், 2014

Cbr_Comic Book Reader_How to Use?_காமிக்ஸ் புக் ரீடரைப் பயன்படுத்தி காமிக்ஸ் வாசிப்பது எப்படி?

இனிய வணக்கங்கள் இயந்திரத் தலை மனிதர்களே! இரும்புக்கை மாயாவிகளே! அஞ்சா நெஞ்சன் ஆர்ச்சிகளே! வலை மன்னன் ஸ்பைடர்களே!
ஒரு வினா எழும்போதுதான் அதற்கான விடையும் உதிக்கின்றது. விடை தேடும் வாழ்க்கைதான் இனிமையான அனுபவங்களைக் கொண்டு வருகிறது. விடை தெரியாத கேள்விகளுக்கான விடையைக் கண்டறிய நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியை நமது காலடியில் கொண்டு வந்து சேர்த்திடும் படிக்கட்டுகளாக அமைந்திடுகின்றது. இன்று ஒரு வினாவுடன் தொலைபேசினார் அன்பு நண்பர் மாயாவி சிவா! அதற்கான விடையை யோசித்திடுகையில் அடடா இத்தனை நாள் இதற்கான விடையினை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் போய்விட்டோமே என்கிற சிந்தனை என் மனப்பரப்பை ஆக்கிரமித்துக்கொண்டு விட்டது. ஆக்கிரமிப்பு என்றாலே அதனை உடனடியாக அகற்றிடும் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள என் துறைக்கான சிந்தனை வேகமெடுக்க அதற்கான விடைதான் இந்த வலைப்பூவின் அடுத்த மலராக மணம் வீசி மலர்ந்துள்ளது.
இனி பதிவுக்குள் புகுந்திடுவோம்!
சித்திரக்கதை வாசிப்புக்கு இப்போது பரவலாக Pபிடிஎப் வகை கோப்புகள் பயன்பட்டு வந்தாலும் சித்திரக்கதை வாசிப்பானது காமிக்ஸ் புக் ரீடர்  என்கிற மென்பொருள் பயன்படுத்தி வாசிக்கும் விதத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. வெளிநாடுகளின் காமிக்ஸ்கள் தரவிறக்கம் செய்து வாசிப்பவராக நீங்கள் இருக்கும்பட்சத்தில் உங்களது தரவிறக்கப்பட்ட காமிக்ஸ் வாசிக்க இயலாவண்ணம் சிபிஆர் பார்மட்டில் இருக்கும். அதனை வாசிக்க வேண்டுமானால் சிபிஆர் ரீடர் http://www.cbrreader.com/ என்கிற மென்பொருளை நீங்கள் முதலில் உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் காமிக்ஸ் வாசிக்கையில் அது மிகவும் அருமையானதொரு  அனுபவமாக இருக்கும்.
முதலில் இலவசமாக கிடைக்கும் மிக குறைந்த எம்பி கொள்ளளவு கொண்ட சிபிஆர் ரீடரை http://www.cbrreader.com/இந்த லிங்கில் சென்று தரவிறக்கிக் கொள்ளவும்.
நண்பர் சிவக்குமாரின் அட்வைஸ் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் https://play.google.com/store/apps/details?id=jp.co.tokyo_ip.SideBooks&hl=en இல் கிடைக்கிறது அது பல்வேறு வகை காமிக்ஸ் பைல்களையும் வாசிக்க உதவும்.

பின்னர் உங்கள் கணினியில் சில செயல்களை சரிபார்க்க வேண்டும்.   
முதலில் ஆர்கனைஸ் பட்டனை அழுத்துங்கள். அதில் உள்ள டிராப்டவுன் மெனுவில் போல்டர் அண்ட் சர்ச் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். 

மூன்று சுவிட்சுகள் பார்வைக்குக் கிடைக்கும். அதில் வியூ பட்டனை க்ளிக் செய்யுங்கள். கிடைக்கும் மெனுவில் ஹைட் எக்ஸ்டென்ஷன் பார் நோன் பைல் டைப் என்கிற உத்தரவானது டிக் பண்ணப்படாமல் உள்ளதா என்பதை உறுதி செய்திடுங்கள். இது உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை அது எந்த வகையானது என்பதனைக் காட்டுகின்ற விரிவாக்கப் பெயரை மறைக்கவோ அல்லது காட்டவோ உதவுகிறது. இதில் டிக் இருப்பின் நீங்கள் ஒரு கோப்பினை நோக்கினால் அது அதற்கு நீங்கள் இட்ட பெயரை மட்டுமே காட்டும். உதாரணமாக ஜானி.பிடிஎப் என்கிற கோப்பை கவனியுங்கள். இதில் .பிடிஎப் என்பது பெயர் நீட்சியாகும். இந்த நீட்சியை நீங்கள் பார்க்க வேண்டுமானால் ஹைட் எக்ஸ்டென்ஷன் பார் நோன் பைல் டைப் என்கிற உத்தரவு டிக் பண்ணப்படாமல் இருக்க வேண்டும். அதற்காகத்தான் முதலில் அதனை உறுதிப்படுத்திக் கொள்கிறோம். 



பின்னர் ஜே பெக் வகையில் உங்களது சித்திரக்கதை ஸ்கான்ஸ் ஒரு போல்டரில் இருப்பதாகக் கொள்வோம். அதற்கு ப்ளாக் என்ற பெயர் இருப்பதாக எடுத்துக் கொள்வோம். முதலில் உங்கள் போல்டரை திறந்து கொள்ளுங்கள். அதில் உள்ள அனைத்து படங்களையும் கண்ட்ரோல் + A கொடுத்து செலக்ட் செய்து கொள்ளுங்கள்.





அதனை வலது கிளிக் செய்து ஆட் டு ப்ளாக்.ரார் என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். ரார் வகையாக சுருக்கப்பட்ட பைல் தனியே கிடைக்கும். (இதற்கு ரார் மென்பொருள் முன்கூட்டியே உங்கள் கணினியில் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் லிங்கில் இருந்து நிறுவிக்கொள்ள வேண்டுகிறேன்.)

அந்த ப்ளாக்.ரார் கோப்பினை செலக்ட் செய்யுங்கள். வலது க்ளிக் செய்திட்டால் கிடைக்கும் மெனுவில் ரீநேம் என்கிற பெயர் மாற்றும் ஆணையை கிளிக் செய்யுங்கள். அவ்வாறு செய்யும்போது ப்ளாக். மட்டுமே செலக்ட் ஆகும். அதை விடுத்து புள்ளிக்குப் பின்னர் வருகிற “ரார் என்பதை மட்டும் தேர்வு செய்து அதற்கு மாற்றான சிபிஆர் என்று பெயர் மாற்றம் செய்திடுங்கள். கணினி பெயர் மாற்றம் செய்யலாமா என்று கேட்கும்போது எஸ் என்பதனை க்ளிக் செய்து விடுங்கள். இப்போது உங்கள் காமிக்ஸ் வசிக்கத் தயார் நிலையில் உள்ளது. வாசியுங்கள் மகிழுங்கள். இந்தப் பதிவுக்கான வினாவினைத் தொடுத்த நண்பர் மாயாவி சிவா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் அதே அன்புடன்_உங்கள் நண்பன் ஜானி!  

3 கருத்துகள்:

  1. நண்பரே ஜான் அருமையான விளக்கம் ! நான் தொலைபேசியில் கேட்டதற்கு நீங்கள் சொன்ன வழிமுறைகளை,எனக்கு எளிதாக விளக்கியதுபோல...நன் வேறு நண்பர்களுக்கு விளக்குவது, உங்களை போலவே விளக்குவது சிரமமே! இந்த சிரமத்தை தவிர்க்க,தடாலடியாக ஒரு பதிவே போட்டது மிக பயனுள்ளவை. இது தினமலர்,தினத்தந்தி கம்யூட்டர் மலரிலேயே போடஅனுப்பிவைக்கலாம்...!

    பதிலளிநீக்கு
  2. தங்கள் கருத்துகளே என்னை செதுக்கும் என்பதை மற்ற நண்பர்களும் உணர்ந்தால் போதும் நண்பரே! இந்த வாய்ப்பளித்தமைக்கும் நன்றிகள்! இது குறித்து விளக்கமாக சொல்லித்தந்த அன்பு நண்பர் ஸ்ரீராமுக்கு இந்த வேளையில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு

எங்கள் ஊர் நூலகத்துக்கான இரஷ்ய சிறுவர் இலக்கிய அன்பளிப்புகள்

 வணக்கங்கள் அன்பு வாசக இதயங்களே. உங்கள் அனைவருக்கும் வேலன்டைன்ஸ் டே வாழ்த்துக்கள்..  சிறுவர் இலக்கியத்தில் இரஷ்ய படைப்புகள் மிகவும் சிறப்பான...