ஞாயிறு, 14 டிசம்பர், 2014

அரச குழந்தை இயேசு _ இது ஒரு BSI comics வெளியீடு....

வணக்கம் இனிமையான  காமிக்ஸ் நேயர்களே! தோழமை உள்ளங்களே! 
இம்முறை BSI நிறுவனத்தாரின்  காமிக்ஸ் இதழுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்! நான்  கிறிஸ்தவ சித்திரக்கதைகளில் புனிதர்கள் குறித்தும் ஆதி கிறிஸ்தவர்கள் பட்ட துயரங்களையும் அடைந்த துன்பங்களையும் குறித்து வெளியாகி முன்னொரு காலத்தில் தமிழில் வேளாங்கண்ணி போன்ற அதி முக்கிய திருத்தலங்களில் கிடைத்து இன்று காண்பதற்கு அரிதான வகை சித்திரக்கதைகளை தேடி அலைந்து கொண்டிருப்பது  அறிந்த தமிழ் காமிக்ஸ் உலகம் பதிப்பக ஆசிரியர் நண்பர் திரு கிங் விஸ்வா அவர்களும் எங்கள் நண்பர் திரு ஸ்ரீராமனும் தங்கள் தேடலில் சிக்கிய சித்திரக்கதைகள் பலவற்றை சுமார் ஒரு வருடம் முன்னதாகவே கொடுத்துள்ளனர். அவர்களுக்கு முதற்கண் என் வணக்கமும் நன்றிகளும்! அவற்றில் சிலவற்றை மட்டும் ஆங்காங்கே உங்கள் பார்வைக்குப் பரிமாறுவதை ஒரு மகிழ்ச்சியான அனுபவமாகவே அனுபவித்து வருகிறேன்! அதில் ஒரு பகுதியாக இம்முறை கிடைத்துள்ள இந்த சித்திரக்கதை அன்பர் இயேசுவின் மழலைப் பருவத்தின் முக்கிய சம்பவங்களின் தொகுப்பாக வெளியாகியுள்ளது! இது கிறிஸ்துமஸ் மாதமாதலால் இதில் இந்த சம்பவங்களை பகிர்வது இயல்புதானே?
இனி கதை.....
    




































முதல் பத்தியில் குறிப்பிட்டதுபோல் மதம் தாண்டிய காமிக்ஸ் நேசமுள்ள நண்பர்களது அன்பால் கிடைத்து உங்களை மகிழ்வித்த மேலும் இனியும் வரவிருக்கிற விவிலிய சித்திரக்கதைகள் கிடைத்ததே அந்த விஸ்வரூபி ஸ்ரீ ராமனின் அன்பால்தான் என்பதை நினைவு வைத்து மனதில் மதத்தின்பால் கொண்ட அன்புக்கும் சித்திரக்கதைகளின் பால் கொண்ட ஈர்ப்புக்கும் வித்தியாசத்தை உணர்ந்திட வேண்டிக்கொள்கிறேன். நண்பர் ஒருவரது சந்தேகத்துக்கு விளக்கமாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம். இறைமகன் இயேசுவின் ஆசீர்கள்!

இந்தப் புத்தகத்தை தரவிறக்கம்  செய்து படித்திட cbr வடிவில்....


ஆனந்தவிகடன் சித்திரக்கதைகளின்பால் கொண்டுள்ள அன்புக்கு எடுத்துக்காட்டான இந்த கட்டுரையை குறிப்பிட்டு சுட்டிய திரு சிவக்குமார் அவர்களுக்கு நன்றிகள்! தேங்க்யூ விகடன்! 

என்றும் அதே ப்ரியமுடன் உங்கள் நண்பன்  ஜானி!

2 கருத்துகள்:

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...