செவ்வாய், 3 டிசம்பர், 2019

எச்சரிக்கை இது கொள்ளை டைம்..வினாடி கதைகள்_ஜானி சின்னப்பன்



பரபரவென்று ஆடையை அவிழ்த்தெறிந்துவிட்டு எண்ணெயோடு குழைத்து உடலெங்கும் கரிபூசி இருளில் பதுங்கி முன்னேறி வங்கி சுவரில்  கன்னமிட்டு உள்ளே நுழைந்தார்கள் மூவரும்.. செக்யூரிட்டியை வெகுசுலபமாக வீழ்த்தி முன்னேறினர். மிகவும் நுணுக்கமான திட்டம் அது. பிழையே இல்லாதவாறு பார்த்துப் பார்த்து செதுக்கி வரக்கூடிய எல்லாப் பிரச்சினைகளையும் முன்கூட்டியே கணக்கிலெடுத்துக் கொண்டு திறம்பட தீட்டிய திட்டம். மின்னணு அலாரங்களையும் அகச்சிவப்பு கதிர் கண்காணிப்பினையும் வெகுகவனமாக தவிர்த்துக் கொண்டு முன்னேறினர். கனத்த லாக்கர் சில வினாடிகளில் பணிந்து வாயை ஆவென பிளந்துகொண்டது.. கருப்பு உடலில் பளிச்சென வாயெல்லாம் பல்லாக அவர்கள் இருப்பை காட்டிக் கொடுத்தது. பணத்தையும் நகைகளையும் வேகமாக அள்ளிப் போட்டுக் கொண்டிருந்த அதே வினாடி..இருளில் அலைந்த ஆந்தையொன்று எலியைக் கண்டு பாய எலி தெறித்தோடி புத்தம்புது துளையின் வழியே வங்கி உள்ளே பாய துரத்திய ஆந்தை சடசடவென அகன்ற இறக்கைகளை  விரித்துக் கொண்டு உள்ளே அகச்சிவப்பு கதிரலை சென்ஸார்களை தாறுமாறாகக் குழப்பியடித்தபடி பறக்க சின்னதொரு பிரளயமே நிகழ்ந்தது அங்கே.. அலாரங்கள் தொடர்ந்து அலற டயர்கள் கிறீச்சிட வெகுவேகமாக  சைரன் ஒலியோடு பாய்ந்து வந்தது வங்கிக்கு மிக அருகே நின்றிருந்த போலீஸ் ரோந்து வாகனம்..

8 கருத்துகள்:

  1. விதி வலியது.. செம ட்விஸ்ட்..

    பதிலளிநீக்கு
  2. Superb..எதிர்பாரத முடிவு.. அசத்தல்

    பதிலளிநீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...