வியாழன், 5 டிசம்பர், 2019

மர்மச்சுழல்_செல்வமணி காமிக்ஸ்_அறிமுகம்_திருப்பூர் குமார்

ஒவ்வொருவருக்கும்ஒவ்வொருகனவிருக்கும்..என் தோழர்கள் அனைவரின் கனவுகளையும் கைக்கெட்ட செய்வதே என் நிஜமான கனவு நண்பர்களே...
நம்மவர்கள் மனம் வைத்தால் மாமலையும் பணிந்து நிற்கும்.. சித்திரக்கதையுலகினில் மூழ்கி இரசனையென்னும் முத்துக்களை முகிழ்க்க வைத்த இரசிகர்களுக்கு இதயத்தால் சேவை செய்யும் எண்ணம் மிக்கவர்களில் குறிப்பிடத் தக்கவர் திருப்பூர் குமார். இதுவரை கேள்விப்பட்டேயிராத தமிழ் சித்திரக்கதையுலகின் பழைய காமிக்ஸ் ஏதாவதொன்றினை எனக்கும் உடன் வாசிக்கும் தோழர்களுக்கும் நீங்கள் தருவதே என் பிறந்ததின பரிசாகஇருக்கும் என்று கோரிக்கை வைத்தபோது சற்றும் தயங்காது இதுவரை நாம் செவிவழியாகக் கூட கேள்விப்படாத செல்வமணி காமிக்ஸ் எனும் அரியதொரு பதிப்பகத்தின் அபூர்வமான மர்மச்சுழல் என்னும் புத்தகத்தை ஸ்கேன் செய்து தந்து மகிழ செய்தார். இதன் ஒரிஜினல் அட்டை கிடைக்காததால் பின் அட்டையில் வந்திருந்த 
வைர மோதிரம் என்னும் காமிக்ஸ் விளம்பரத்தை திரு.சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் அவர்களிடம் கொடுத்து சீர் செய்து பரிமாறுமாறு கேட்டுக் கொண்டதின்பேரில் சிரத்தையெடுத்து அட்டையை செதுக்கி கொடுத்திருக்கிறார்.. அவர்கள் இருவருக்கும் நன்றிகள்.
சென்னை மன்றம்...இதுவரை கேள்விப்பட்டேயிராத இந்த பதிப்பகம் தயரித்து வெளியிட்டுள்ள புத்தகங்களின் வரலாறை அறிவது அத்தனை சுலபமானதல்ல.. ஆனால் மொத்தம் மூன்று புத்தகங்களை கண்டிப்பாக இனிவரும் காலங்களில் சுட்டிக்காண்பிக்கவியலும் எனில் இது எத்தனை சிறப்பானதொரு தேடல் என்பதன் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்..
1.மர்மச் சுழல்
கதை-வசனம்: திரு.சூரியன்
சித்திரம்: திரு.சிவக்கொழுந்து..
2.ABC மர்மம்..
அதே கதை, சித்திர உருவாக்கத்தில் ஈடுபட்டோராக இருக்க வாய்ப்பு இருக்கிறது..
3.வைர மோதிரம்
அதே கதை, சித்திர உருவாக்கத்தில் ஈடுபட்டோராக இருக்க வாய்ப்பு இருக்கிறது..
ஆக இந்த மூன்று கதைகளை குறித்த தகவல் இப்போது நமக்குக் கிடைத்திருப்பதே இன்றைய என் மெய்யான மகிழ்ச்சி..
பாண்டியன் பிரஸ் சென்னை 21ல் அச்சிட்டுள்ளனர்.
சென்னை மன்றம், 21,முத்துக் கிருஷ்ணன் தெரு, சென்னை 600001 பதிப்புரிமை பெற்று இந்த செல்வமணி காமிக்ஸை கொண்டு வந்துள்ளனர்..

நிற்க..மேற்படி காமிக்ஸ் குறித்த மேலதிக தகவல் தெரியவந்தால் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு மகிழ உங்கள் அனைவரையும் அன்போடு அழைப்பு விடுத்துக் கொள்கிறேன்..
இனி கதை...
































தரவிறக்க சுட்டி பேனல்களுக்கு இடையே ஒளிந்திருக்கிறது..கண்ணாமூச்சி ரே..ரே...
பை நவ்..
சைமன்..சைனிங் ஆஃப்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...