புதன், 18 மார்ச், 2020

காத்திருப்பேன் காதலுடன்....ஜானி


கண்ணே
கடைவிழிப் பார்வை
வீசி என் இதயம்
வெடிக்க வைத்தாய்..
கண்ணீர்ப்பின்
விசையில் விழுந்து
காதலுண்டேன்..
உன் பெற்றோர்
நினைவில்வர
தப்பென்றே விலகிப் 
போனேன்..
எனையறியாமல்
நீ வீசிப்போன
புன்னகையெனும்
கடப்பாறை என்
இதயத்தை பெயர்த்தெடுக்க
உலகைமறந்து
உன்மேல் 
உன்மத்தமானேன்..
வீழ்ந்தது மனத்திரை..
வீழ்த்தியது நீ..எனை
விழுங்கட்டுமே
கல்லறை..
விழாதென்
காதல் கோட்டை..
விழிப்போடு நான்..
மீண்டும் சந்திக்கையில்
காதல் கீதத்தை
இசைத்தே தீருவேன்..
இசைவாயா?
இதயம் தடதடக்க
நீவரும் பாதை
நோக்கிக் 
காத்திருப்பேன் 
காதலுடன்...

2 கருத்துகள்:

  1. அந்த கடப்பாரையின் பெயர்..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப யோசிக்குறாரே... தலைதெறிக்க ஓடும் சிம்பல் ஒரு டஜன் பார்சேல்ல்...

      நீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...