புதன், 4 மார்ச், 2020

*இனி எல்லாம் சுகமே..*-வினாடிக்கதைகள் வரிசை..ஜானி



ஆண்டு 3100..
உடனே நான் கேட்டதை அனுப்பவும்..
என்று எங்கோ தொலைவிலோர் இடத்துக்கு பணித்து காத்திருந்தாள் சூன்யா..
அடுத்த சில நிமிடங்களுக்குள் சோனார் ஒலி அலைகளை உமிழ்ந்து எதிரொலித்து முகவரியை வேகமாகப் பற்றி முன்னேறிய வாகனம் இலக்கை அடைந்தது..
சூன்யாவின் குடியிருப்பு..
அவள் தவிப்போடு காத்திருந்தாள்..
"ஜோஸான்ட்ரோ என்றும்  தங்கள்சேவையில்" என அந்த ட்ரோன் வகை வாகனத்தின் தலையில் ஒளி எழுத்துக்கள் மின்னின..
பார்சலை ஒரு ஸ்கான்..அவளை ஒரு ஸ்கான்.. சேவைக்கான தொகையை வினாடிக்குள் தங்கள் நிறுவன கணக்கிற்கு மாற்றியவண்ணம் கண்காணாமல் பறந்தோடிப் போனது அந்த வாகனம்.. அது கொண்டு வந்த பார்சலை வேகவேகமாக பிளந்து பிரித்துப் பாய்ந்து போய் தன் கணவன் ரோயோஷ்
மார்பைப் பிளந்து உள்ளே இருந்த காலி இதயத்தை தூக்கியெறிந்து விட்டு புத்தம்புதிய அப்டேட்டட் இதயத்தைப் பொருத்தினாள்.. லப்டப்..லப்டப்..லப்டப்...
உயிர் பிடித்தெழுந்த
ரோயோஷ் சூன்யாவைப் பார்த்து கண்ணடித்தான்..
-ஜானி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...