புதன், 4 மார்ச், 2020

நில்..கவனி..வேட்டையாடு...விமர்சனம்..ஜம்போ காமிக்ஸ்




அமேஸான் நதியையும் காட்டையுமா கதைல காட்டுனாங்க...
வேறெதோ தீவாச்சே...என்றபடி நடையைக் கட்டினார் காமிக்ஸ் தேச குடிமகன்...
மனித வேட்டையை வெறிபிடித்த பேர்வழியொருவர் தனித்தீவொன்றில் நடத்திக் கொண்டிருக்கிறார். அங்கே பவளப்பாறைகள் சிறிய படகுகளையும் உடைத்தெறியும் வகையில் இயற்கையாக அமைந்துள்ளன.. தப்பிப் பிழைத்து கரைசேரும் மனிதர்களை அங்கே கோட்டைகட்டி வாழும் ரஷ்ய பிரஜை தன் மாளிகைக்கு நம்பி வருவர்களை  வரவேற்று உபசரித்தபின் காட்டுக்குள்ளே விரட்டிவிட்டு அடியாட்கள்,  நாய்களை ஏவி விரட்டி வேட்டையாடி தலையை வெற்றிக் கோப்பையாக பறித்தெடுத்து வைத்துக் கொள்கிறார்.. அங்கிருந்தும் ஒருவர் தப்பிப் பிழைத்து உலகினருக்கு உண்மையை போட்டுடைக்க அங்கிருந்து சட்டென காலி செய்து வேறொரு தீவில் குடியேறுகிறார்...
பலியானோரில் ஒரு தாதாவும் இருந்து வைக்க அவரது மகள் தன் படையோடு அவரைத் தேடும் முயற்சியில் வேட்டை ராஜாவின் தங்கை பிள்ளைகள் கிடைக்க அவர்களை புதிய தீவில் அமைதியாக இருக்கும் வேட்டையரிடம் கொண்டு வந்து  உன்னையும் உன் தங்கை மற்றும் பிள்ளைகளையும் கொன்று குவிக்கிறேன் என்று சவால் விடுகிறாள்... அந்த வேட்டை எத்தனை கொடூரமாக அமைகிறது என்பதே கதை.. கடைசியில் வேட்டையன் மாத்திரம் தப்பிப்பது சுத்த சினிமாத்தனம்.. நோ மாரல்.. சில முறை இரசித்து வாசிக்க வைக்கும் கதை... மதிப்பெண்ணா?... 7/10
பேக் டுதி பாயிண்ட்
~அமேஸான் நதியையும் காட்டையுமா கதைல காட்டுனாங்க...
வேறெதோ தீவாச்சே...என்றபடி நடையைக் கட்டினார் காமிக்ஸ் தேச குடிமகன்...~
ஆங்காங்கே சிற்சில எழுத்துப் பிழை..
பலூன் வேறொருவர் பக்கமாக திரும்பியிருத்தல் என்கிற சின்னூண்டு தப்பிதங்களை காண முடிகிறது.. ஊதிப் பெரிசாக்கி பிரயோசனமில்லை என்பதால் அதனை சுட்டிக் காண்பிக்கும் முயற்சி கைவிடப்படுகிறது..
ஆக்ஷன், த்ரில்லர், செண்டிமெண்ட்.. அனைத்தும் கதையில் உண்டு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...