வெள்ளி, 20 மார்ச், 2020

**சிட்டுப் பெண்ணே** ஜானி சின்னப்பன்


கீச்..கீச்..கீச்சென
கொஞ்சும் 
குரலில்
குதூகலமாக
கீச்சிடும்
குருவிப் பெண்ணே..

அன்றொரு தினம்
அருமையாய் ஒரு
கூடுகட்ட உன்
துணையோடு 
சோராது உழைத்த
தருணமோ 
என் மனதில்
அத்தனை
பெரிதாகப்படவில்லை..

உன் கூட்டுக்குள்
அவ்வப்போது 
கேட்டிடும் 
உன் இணையோடு
கூடிக்குலவிடும்
கீச்சொலிகள்..
வாசத்தோடென்
வாசலை நிரப்பியபோதும்
காதை வேறுபக்கம்
திருப்பி செல்ல
தயங்கியதில்லை..

திடீரென
சிலிர்க்க வைக்கும்
உன் குஞ்சுகளின்
உற்சாகக் குரலைக்
கேட்டு மயங்கிப்
போனேன்..
புழு தேடிப் பறந்திடும்
உன் இரைதேடும்
படலம் இதோ
தொடங்கிவிட்டது..
உன் உலகை இரசிக்க
நானும்
தயாராய்....
-ஜானி சின்னப்பன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...