தனித்திரு..தணிந்திரு..தலைப்பில் ஜம்போ காமிக்ஸ் வெளியீடாக ரூ.நூறு விலையிலும் அறுபது பக்கங்களுடனும் வெளியாகியிருக்கிறது.. ஹெர்மான் ஓவியங்களால் உயிரூட்ட ய்வெஸ்ஸின் கதை அனல் பறக்கிறது.. கதையின் தலைப்பை பழி தீர்த்த பாட்டனார் என்றுகூட மாற்றியிருக்கலாம்.. கருப்பினத்தவரை அத்தனை அநீதிகளுக்கும் உட்படுத்தும் சமூக அமைப்பு.. குழந்தைகள் சாலையில் விளையாடுவதையும் அடக்கி வைக்க நினைக்கும் கொடூர மனம்படைத்தவர்களின் பூமி மிஸ்ஸிஸிப்பி.. பிரசவத்தில் இறந்துபோன தன் மகளின் மகளை தாயாய் பேணிப் பாதுகாக்கும் பெரியவர் ஆண்டர்ஸன்.. திடீரென அவள் காணாமல் போக அந்த சோகத்தில் தன்னுடைய மனைவியையும் பலிகொடுத்து விட்டு தனியே வாழும் ஆண்டர்ஸனுக்கு தன் பேத்தியின் நிலை என்ன ஆனது என தெரியவருகிறது.. அதற்குக் காரணமானவர்களை ரணமாக்கும் ருத்ர தாண்டவமே இக்கதை.. நெஞ்சை உலுக்கும் சோகத்தோடு கதை முடிகிறது... கானகத்தில் நடக்கும் திகில் துரத்தல்கள் வண்ணத்தில் மிரட்டுகின்றன. அநியாயம் என்று இழைக்கப்பட்டாலும் என்றாவது ஒரு நாள் சரியான "தீர்ப்பு தேடி வரும்.." (அடடே..இதைக்கூட தலைப்பாக்கியிருக்கலாமே... )
ஆண்டர்ஸனின் கரங்களைப் பற்றிக் கொண்டே கதைக்குள் குதித்தால் கண்டுணரலாம் அவர் காயங்களை...
-ஜானி சின்னப்பன், தமிழ் காமிக்ஸ் டைம்ஸ்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக