சனி, 12 செப்டம்பர், 2020

தனியே தன்னந்தனியே..!









 


லயன் கிராபிக் நாவல் வரிசையில் 12வது இதழாக ரூ.100/- விலையில் வெளியாகியுள்ள சித்திரக்கதை தனியே தன்னந்தனியே.. 

கதாசிரியர் கிறிஸ்டோப் பெக் கதைக்கு சித்திரங்களால் மிரட்டல் வடிவம் கொடுத்திருக்கிறார் ஓவியர் சிரில் டெர்னான்.. பிரெஞ்சு மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இந்த க

அந்த சாலையில் வரும் வாகனங்கள் அவ்வப்போது விபரீதமாக ஏதாவது உருவத்தை காண நேரிடுகிறது.. அமானுஷ்யம் ஒரு புறமிருக்க ஆண்டுகள் 1951க்கும் 2016க்கும் தாவித்தாவிக் குதித்தோடுகிறது.. தன் குடும்பத்தையே சின்னஞ்சிறு சிலந்தியால் இழக்க நேரிடும் தந்தை தனியேதன்னந்தனியே வசிக்கிறார். அவரும் ஒரு கட்டத்தில் தான் வளர்த்து வந்த சிலந்திகளால் மரணத்தை அரவணைத்துக் கொள்கிறார்.. 

வேலை நிமித்தமாக இடம் மாறிப்போகும் பெண்ணும் அவளது சின்னஞ்சிறுமகனும் அதே சாலையில் காணாமல் போகிறார்கள்.. ரிச் ஸ்டாஸ்ஸர் அப்பகுதியின் ஷெரீப்.. அவரது துப்பறிவில் பலப்பல மர்மங்களும் விலகி சிறுவன் பால் மாத்திரம் உயிரோடு மீட்கப்படுகிறான்.. கருப்பு வெள்ளை சித்திரங்களின் டோனே மிரட்டலாக இருக்கிறது.. மௌனமான ஓவியங்களில் ஆயிரம் விவரிப்புகளும் கானகத்தின் மர நெரிசல்களில் நாமும் சிக்கித் தவிப்பதான மனோநிலைக்குத் தள்ளப்படுவது உறுதி.. சிறுமியின் அகோர மரணமும் அவளது ஆவியின் அவ்வப்போதைய தரிசனங்களும் அவ்வழியே செல்பவர்களை சிறுவனைக் காக்க வேண்டியே அமானுஷ்ய நகர்வுகள் அமைவதாக சித்தரிக்கப்படுவதும் கதையை இன்னொரு முறை வாசிக்க தூண்டுகின்றன.. லயன் கிராபிக் நாவல்களில் சிறப்பான தேர்வுகளில் இதுவும் ஒன்று எனலாம்.. இரசனையில் முதிர்ந்தோருக்கான இதழ் என விளம்பரப்படுத்தப்பட்டாலும் ஹாலிவுட் ஹாரர் இரக இரசிகராகவும் காமிக்ஸ் பிரியராகவும் நீங்கள் இருக்கும்பட்சத்தில் இது உங்களுக்கான கதையே..

-ஜானி சின்னப்பன், தமிழ் காமிக்ஸ் டைம்ஸ்..

2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தேங்க்யூ தோழா.. இது மிகவுமே மனதைப் பிசையும் கதையும் கூட.. வாசிக்கக் கொடுத்தமைக்கு நண்பர் திரு.சுரேஷ் தனபால் அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்..

      நீக்கு

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...