வெள்ளி, 11 செப்டம்பர், 2020

வேதாளருக்கொரு சவால்..

 1986ல் அமெரிக்காவின் தொலைக்காட்சி வாயிலாக வேதாளர் தோன்றிய தினம்.. டிபெண்டர்ஸ் ஆப் எர்த் தொடரின் ஹவுஸ் டிவைடட் என்கிற கதை ஒளிபரப்பப்பட்டது..

 26&27வது வேதாளர்களின் கதை.. மேலும் இரண்டு பிள்ளைகளில் இளையவர் வேதாளராக தேர்ந்தெடுக்கப்படுவதும்.. மூத்தவர் ஏன் வேதாளராகவில்லை என்பதும் இந்த தொடரில் விளக்கப்பட்டது.. இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் அண்ணனின் பெயர் கர்ட்.. தம்பியின் பெயர் கிட்..

தந்தையாரின் உத்தரவுக்கிணங்கி மலைமீதிருக்கும் வைரக்கல்லை எடுத்துவர ஒற்றுமையோடு செல்ல வேண்டிய நிலை கர்ட்டுக்கும், கிட்டுக்கும்.. அப்படி திரும்பி வருபவரே அடுத்த வேதாளர் எனும் நிலையில் கிட் கானகத்தில் சிங்கத்திடம் சிக்கிய கர்ட்டை காப்பாற்றி விடுகிறான். ஆனால் மலையில் தடுமாறி விழும் நிலையில் இருக்கும் கிட்டை கர்ட் கைவிடுகிறான். வைரக்கல்லோடு மண்டைஓட்டு மாளிகைக்கு சென்று தன்னை அடுத்த வேதாளராக்க வேண்டுகிறான். வேதாளர் என்ற பட்டமே அடுத்தவருக்கு உதவும் சேவை மனப்பான்மையுள்ளவருக்கே தரப்படும். ஆகவே தான் வெல்லும் வாய்ப்பிருந்தும் சிங்கத்திடமிருந்து உன்னைக் காப்பாற்றிய கிட்டே சிறப்பானவன் என்று வேதாளர் அறிவித்து விடுகிறார். கடுப்பாகி வெறியோடு வெளியேறுகிறான் கர்ட்..

தொடரின் ஒரு பகுதியை லிங்க்கில் தருகிறேன். வேதாளரை தோற்கடிக்க பேரரசர் மிங்கிடமிருந்து சக்தி பெறுகிறார் வேதாளரின் சகோதரர்.. தட்பவெப்பங்களை மாற்றியமைக்கும் சக்தியோடு எண்டாமா ஸ்பிரிட் ஆப் த விண்ட் எனப் பெயரை மாற்றிக் கொண்டு வேதாளரிடம் மோதுகிறார் கர்ட் வாக்கர்.. இறுதியாக அதே போட்டியை இம்முறை வைத்துப் பார்த்து விடுவோம் வா என்ற சவாலை ஏற்கிறார் கிட் வாக்கர்.. சவாலில் வென்றது யார்..? பரபரப்பான அனிமேஷன் தொடர்..

ஹைலைட்ஸ்..

*வேதாளருடன் அவரது மகள் சேர்ந்தே தனது பெரியப்பாவை எதிர்க்கிறாள்.

*குரானின் உருவமும் பண்டார் இனத் தலைவர் பட்டமும் நச்சென பொருந்துகிறது.. 

*மாண்ட்ரேக் இது சகோதரயுத்தம்.. வேதாளரே போய் மோதட்டும் என வழிவிடுகிறார்..

*ஹீரோ மின்னலையெல்லாம் தவிர்த்து வேதாளரை பாதுகாப்பாக அழைத்துப் போகிறது..தவற விடக்கூடாத அனிமேஷன் தொடர்.. 

-ஜானி சின்னப்பன், தமிழ் காமிக்ஸ் டைம்ஸ்..

https://youtu.be/sVzsly_t1OY

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...