ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

இப்போதே அழித்து விடு -மாடஸ்டி & வில்லி

 

அந்த மின்வேலி தீவைச் சுற்றி ஓடியிருந்தது.. உள்ளே பிரிட்டிஷ் இராணுவ இரகசியக் கோப்புகளடங்கிய ட்ரக் மறைவாக நிறுத்தப்பட்டிருந்தது.. அதை அழித்தாக வேண்டும்.. மாடஸ்டி ப்ளைஸி வில்லி கார்வினோடு தனிப்படகில் தீவின் மிக அருகில் இறக்கிவிடப்பட்டனர்.. கோப்பை எடுக்க மின்வேலியைத் தாண்டியாக வேண்டும்.. மின் வேலியோ எளிதில் புக முடியாதவாறு வலுவாக பிணைக்கப்பட்டு உயர் மின்னழுத்த மின்சாரம் பாய்ந்தோடிக் கொண்டிருந்தது.. என்ன செய்யலாம் என அடர் இருளில் அமர்ந்து சிந்திக்கத் துவங்கினார்கள் இருவரும்.. முதலாவது கம்பியைப்பிணைக்கும் வயர்கள் எங்கிருந்து கொண்டுவந்து இணைத்திருக்கிறார்கள் என பார்க்க வேண்டும்..
சின்னதொரு ட்ரோனை இருளிலும் ஊடுருவிப் பார்க்கக்கூடிய காமிராவோடிணைத்து பறக்க விட்டனர்.. அந்தத் தீவை சில நிமிடங்களிலேயே சுற்றிப் பந்து ட்ரக் நிற்கும் இடத்துக்கு மிக அருகிலேயே கட்டுப்பாட்டறை செயல்படுவதையும் காவலுக்கு தீவில் தற்போது ஆறே பேர் இருப்பதையும் கண்டுகொண்டார்கள்.. மின்வேலிக்கு வரும் மின்சார வயர்களைத் துண்டித்தவுடனேயே அலாரம் அலறத் தொடங்கியது.. ஒரு தவுசண்ட்வாலா வெடியை ட்ரோனில் அனுப்பி  வெடியை பற்ற வைத்து வேறு பக்கத்தில் போட செய்தனர்.. படபட வெடிச்சத்தத்தில் ஓசை வந்ததிசை நோக்கி ஓடிய செக்யூரிட்டிகளை ஏமாற்றிவிட்டு எளிதாக மின்வேலிக்கம்பத்தை நொறுங்கி விழச்செய்து உள்ளே நின்ற லாரியில் சுற்றிலும் பாமைப் பொருத்திவிட்டு வெளியேறிப் பாய்ந்தனர். உறக்கத்திலிருந்த அடியாட்களும் வாரிச்சுருட்டிக் கொண்டு வெளியேறி வருவதற்குள் போட்டைத் தொட்டது மாடஸ்டி ஜோடி.. அங்கே அதற்குள் அறுவரில் ஒருவன் வந்து போட்டைப் பார்த்து உஷாராகி விட்டிருந்தான்.. அவன் சுடத் தொடங்க கார்வினின் கத்தி அவன் கழுத்தில் குத்தி நின்றது.. அலறக்கூட வாய்ப்பில்லாமல் அப்படியே மடங்கி விழுந்தான் அவன்.. போட் புறப்பட்டு மூன்றாவது நிமிடத்தில் அந்த லாரி குண்டு வெடித்து மொத்தமும் சாம்பலாகியது..
..அதிரடிகள் இப்போதைக்கு முற்றும்..
நிற்க..இது ஸ்பைடர் படை வாட்ஸ் அப் குழுவுக்காக நான் எழுதிய கதை.. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...