வியாழன், 10 செப்டம்பர், 2020

எம்பரர் திரைப்பட விமர்சனம்..


 அமெரிக்க மண்ணின் அடிமை முறையை எதிர்த்த முதல் விடுதலைப் போர்... 

எம்பரர் திரைப்படமாக 2020 யில் வெளியாகியுள்ளது.. பார்த்து இரசிக்கலாமே..

ஷீல்ட்ஸ் க்ரீன் Aka எம்பரர்.. அரச வம்சத்தில் வந்த கருப்பினத்தவர். அடிமைகளை வேலைவாங்கும் மேற்பார்வையாளராக அமெரிக்கர்களிடம் பணியாற்றி வருகிறார். அந்த அமெரிக்கர் சூதாடியாக இருந்து  தெற்கத்தியர் ஒருவரிடம் பண்ணையை தோற்று விட பண்ணையில் அராஜகங்கள் அரங்கேறுகிறது. தனக்கும் தன் மகனுக்கும் இழைக்கப்பட்ட அநீதிக்காக பொங்கி எழும் எம்பரர் சில வெள்ளையர்களைக் கொல்கிறார். அவர் மனைவி பதிலுக்கு கொல்லப்பட தப்பியோடும் பாதையில் வங்கிக் கொள்ளையன், நாக்கறுபட்ட கருப்பர், கருப்பினத்தவரை ஆதரிக்கும் வெள்ளையர், வெள்ளையர்களிடம் பணத்துக்காக காட்டிக்கொடுக்க நினைக்கும் கருப்பர், அடிமைமுறையை ஒழிக்கப் போராடும் வெள்ளையர் கும்பல் என கதை தடதடக்கிறது.. ஒரு கோட்டையை கைப்பற்றி பின்னர் இராணுவ வீரர்களிடம் தோற்கிறார்கள்.. அதுவே விடுதலை விரும்பிகளின் முதல் முழக்கம்.. விர்ஜினியா மாகாண ஹார்ப்பர்ஸ் ஃபெர்ரி என்ற இடத்திலமைந்த கோட்டை கைப்பற்றப்பட்டது.. அது நிகழ்ந்தது 1859ஆம் ஆண்டு அக்டோபர் 16 முதல் 18 வரை.. மூன்றே தினங்களிலேயே போராட்டம் அடக்கப்பட்டாலும் அன்றைய தின போராட்ட நாயகர்கள் ஜான் ப்ரௌன்,  ப்ரெட்ரிக் டக்ளஸ் இது உண்மை வரலாறு.. அமெரிக்க சிவில் யுத்தங்களின் கண நேர கீற்றுகளை அந்தப் போராட்டமே அடிமை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது என்பதில் மிகையில்லை.. அந்த இடம் வரலாற்றுநினைவிடமாக இன்றைக்கும் அமெரிக்காவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது..

 கதைக்கு வருவோம்...

தப்பும் எம்பரரை பணத்துக்கு வேட்டையாடும் கும்பல் துரத்த ஒரு சர்ச்சில் கிளைமாக்ஸ்.. தனது மகனை மீட்டு அவனோடு இணைந்து செல்வதோடு படம் முடிகிறது.. திரையனுபவம் யதார்த்த விரும்பிகளுக்கானது..

- ஜானி சின்னப்பன்..தமிழ் காமிக்ஸ் டைம்ஸ்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...