புதன், 16 செப்டம்பர், 2020

காயூஸ் செவ்விந்தியர் தாக்குதல் 1847 வரலாற்றுப் பின்னணி

 30,நவம்பர் 1847 கொடூரமான தினமாக அமைந்துபோனது விட்மேன் தம்பதியினருக்கு... 



ஒரேகான் வழித்தடம்

***மார்க்கஸ் விட்மேன் ஒரு இயற்பியலார் மற்றும் மிஷனரி.. 

தன்னுடைய மனைவி நார்ஸிஸ்ஸா விட்மேனுடன்  ஒரேகான் வழித்தடத்தில் காயூஸ் செவ்விந்தியர்கள் குடியிருப்பருகே அவர்களது ஆலயம் மற்றும் குடியிருப்பை அமைத்துக் கொண்டனர்..அனாதைப் பிள்ளைகளுக்கு அடைக்கலம் கொடுத்தும் அருகிலுள்ள செவ்விந்தியர்களுக்கு கல்வி கொடுத்தும் மருத்துவம் பார்த்தும் சேவையாற்றிக் கொண்டிருந்தனர்.. அவ்வப்போது தோல் வியாபாரம் செய்பவர்கள் ஐரோப்பாவிலிருந்து ஒரேகான் வழித்தடத்தில் அவ்வப்போது பயணம் மேற்கொள்கையில் அடைக்கலமளித்து வந்தது விட்மேன் குடியிருப்பு.. சுமார் ஆயிரம் பேரை அப்பகுதியில் குடியேற்றியதில் விட்மேனுக்கு பெரும்பங்குண்டு.. ஐரோப்பியர்கள் தத்தம் தேசத்தின் வியாதிகளை தாங்கி எதிர்ப்பாற்றலுடன் அமெரிக்கா வந்து சேர்ந்தபோது தம் நோய்க்கிருமிகளை இம்மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்களால் எதிர்கொள்ள முடியாது போனதால் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டு வந்த காலக்கட்டம் அது. தட்டம்மையானது இதுபோன்ற வணிகர்கள் மூலமாக மிஷனரிக்குள்ளிருந்த பிள்ளைகளுக்கும் பரவியது. ஐரோப்பிய பிள்ளைகள் பிழைத்துக் கொள்ள செவ்விந்தியப் பிள்ளைகள், பெரியவர்கள் என சுமார் இருநூறு பேருக்கும் மேலாக மரணதாண்டவம் நிகழ்ந்தது.. ஐரோப்பியர்களின் இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலே இதற்கு காரணம் என்றபோதிலும் தம் இனத்தவர் மாத்திரம் மரணத்தை தழுவ வெள்ளையர்கள் பிழைப்பது எவ்விதம் என்ற கேள்வி காயூஸ் இனத்தவரின் மனதை அரித்துக் கொண்டே இருந்த நிலையில்தான் அந்த விபரீதம் உருப்பெற்றது.. 1847 நவம்பர் 29-30 ல் காயூஸ் இனத்தலைவர் டிலோக்கெய்க்ட் தலைமையில் வெள்ளையர்களின் குடியிருப்பினை துவம்சம் செய்து தீக்கிரையாக்கினர்.. விட்மேன் தம்பதியினர், பிரபல அரசியல் அறிஞர் ஆலிவர் கேம்பெல் உள்பட 14 வெள்ளையர்கள் மோதலில் பலியானார்கள்..

53 பெண்கள், சிறுவர்களை காயூஸ் இனத்தவர்  பிணைக்கைதியாக்கிக் கொண்டனர்.. சுமார் ஒரு மாதகாலம் நிகழ்ந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் அனைவரும் விடுவிக்கப்பட்டாலும்..அது ஆரம்பம் மாத்திரமே.. 1855 வரையிலும் ஏகப்பட்ட குடைச்சல்களை காயூஸ் செவ்விந்தியர்கள் கொடுத்து வந்தபின் அவர்களது யுத்தத்தின் பலன்களாக சில பிரதேசங்களை அமெரிக்கா அவர்களுக்கு ஒதுக்கி உடன்படிக்கை செய்து கொண்டது..


மார்க்கஸ் விட்மேன் நினைவாக ஒரு சிகரத்துக்கே பெயரிடப்பட்டது.. அவரது ஆளுயர சிலையொன்று வாஷிங்டனில் அமைக்கப்பட்டுள்ளது.. விட்மேன் பெயரில் கல்லூரிகளும், பள்ளிக்கூடங்களும் அமெரிக்காவின் பல்வேறு பகுதியிலும் இன்றளவும் இயங்கி வருகின்றன.. 

மார்க்கஸ் விட்மேனின் கல்லறை, வல்லா வல்லா, வாாஷிங்டன்
விட்மேன் சிகரம்
தோல் விியாபாரிகளின் அங்காடி

அந்நாளைய பிரபல பத்திரிக்கை

காயுஸ் செவ்விந்தியர்கள் வீரத்துக்கும், குதிரையேற்றத்துக்கும்  பேர்போனவர்கள்..

வலிமையான இனமாதலால் சுற்றியுள்ள இனத்தவரை அடிமைப்படுத்தவும் கொள்ளையடிக்கவும் செய்தனர். வேட்டையிலும், வர்த்தகத்திலும் சூரர்கள்.. குதிரைகளைப் பழக்குவிப்பதில் தலைசிறந்து விளங்கியதாலேயே இன்றைக்கும் காயுஸ் குதிரைகள் என சிறப்பானதொரு இனமே அமெரிக்க இராணுவப்பிரிவில் உள்ளது. அளவில் சிறியதாக இருப்பினும் அவை காயுஸ்களால் நன்கு பழக்குவிக்கப்பட்டு நான்கு அடிக்கு சரேலென எகிறிப் பாய்வதைக் கண்டு 1873ல் ஸ்க்ரிப்னர்ஸ் மாதப் பத்திரிக்கை அந்நாட்களில் கட்டுரையில் பிரசுரித்திருந்தனர். அப்பத்திரிக்கை 1870-1881வரை நடத்தப்பட்டு பின்னர் விற்பனை செய்யப்பட்டுவிட்டது.. அதனை வாங்கி செஞ்சுரி பத்திரிக்கை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது கொசுறு சேதி..

நிற்க. டெக்ஸ் வில்லரின் "பந்தம் தேடிய பயணம்", லயன் வெளியீடு செப்.2020யில் இந்த ஒரேகான் வழித்தடமும், வெள்ளையர் குடியேற்றப் பகுதியும், காயுஸ் செவ்விந்தியர்களும் கதையோட்டத்தில் சுட்டிக் காண்பிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தமிழ் காமிக்ஸ் ஆர்வலர்களுக்கான சிறப்புத் தகவல்..

-ஜானி சின்னப்பன், தமிழ் காமிக்ஸ் டைம்ஸ்.. 

நீதிதாஸ் சாரின் கருத்து..

இதனை வழங்கிய ஜானி சாருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

இதில் எனது கருத்து என்னவென்றால்,நீங்கள் இன்னொரு நாட்டிற்குச் சென்று நல்லதே செய்தாலும்,இந்த ஆணியை உங்க ஊருலியே பிடுங்கலாமே என்பதுதான் அந்த மன்னர் ந் மக்களது நிலைப்பாடாக இருக்கும்.நம் நாட்டிலேயே இதை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆங்கிலேயர்களைப் பொருத்தவரை நாகரிகம் பண்பாடு சொல்லித்தருகிறோம் என்பார்கள்.செவ்விந்தியர்களின் பண்பாடு ஏறக்குறைய தமிழர்களின் பண்பாட்டுக்கு இணையான பழமையான பண்பாடு.

நெசவு,விவசாயம்,கடவுள் வழிபாடு,வானவியல்,மருத்துவம்,சிற்பம்,ஓவியம் போன்ற துறைகளில் எகிப்துக்கு இணை சொல்லக்கூடிய நாகரிகம் அவர்களுடையது.தமிழரைப்போலவே இயற்கையை வணங்கி அதையே தங்கள் வாழ்வாகக் கொண்டவர்கள் செவ்விந்தியர்.

இப்படி இருக்க,உருவ வழிபாட்டை முற்றிலுமாக ஒதுக்கும் கிறித்துவ மதத்தையும் அதைப் பரப்புகின்ற மிஷனரிகளையும் எதிரிகளாக செவ்விந்தியர் பார்த்ததில் வியப்பேதுமில்லை.

ஏற்றுக்கொண்டவர்களுக்கு உணவும் வசதிகளும் ஏற்காதவர்களுக்கு தோட்டாக்களும் வழங்கப்பட்டுதான் அமெரிக்கா வசப்படுத்தப்பட்டது.

கடவுளர் சாபத்தால் நோய்கள்,இயற்கை சீற்றங்கள் உருவாகின்றன என்பது பழங்குடியுனரிடையே உள்ள உலகளாவிய நம்பிக்கை.இப்படியிருக்க வெள்ளையர்கள் மட்டும் பிழைப்பதில் ஏதோ உள்குத்து இருப்பதாக செவ்விந்தியர் கருதியதில் வியப்பேதுமில்லை.Herd immunity பற்றி இப்போதுள்ள அறிஞர்களுக்குள்ளே சந்தேகம் நிலவும்போது அந்தக் காலத்தில் செவ்வி தியர்களை இது குழப்பியிருக்கும் என்பது நிஜம்.

சொல்லப்பால்,நோயாளிகள் பயன்படுத்திய கம்பளிகளை வெள்ளையர்கள் செவ்விந்தியர் பகுதியில் திருட்டுத்தனமாக போட்டுவிட்டு வந்ததும் அதன்மூலம் பரவிய அம்மை நோய்க்கு ஏராளமான செவ்விந்தியர் பலியானதும் வரலாற்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்து,பண்டமாற்று.முறையில் தங்கள் வாழ்வியலை அமைத்துக்கொண்ட செவ்விந்தியருக்கு தோல் என்பது முக்கிய வணிகப்பொருள்.தோலும்,கம்பளியும் குளிர் மிகுந்த நி லப்பரப்பில் உயிர்வாழ உணவுக்கு அடுத்தபடியாக தேவைப்படுபவை.ஆண்டுதோறும் வேட்டைக் காலத்தில் சேகரிக்கக்கூடிய மாமிசமும் தோலும் கம்பளியும் அடுத்துவரும் குளிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் தெம்பைக் கொடுப்பன.கத்திகளையும் வில் அம்பையும் வைத்து செவ்விந்தியர்கள் மேற்கொண்ட வேட்டை மனிதர் விலங்கு எண்ணிக்கையில் சம நிலையைப் 👸 வந்த நிலையில் தோட்டாக்களையும்,கருமருந்தையும் கையில் எடுத்துக்கொண்டு களமிறங்கிய வெள்ளையர்களின் வேட்டை வேகம் செவ்விந்தியரை எதிர்காலம் குறித்த பேரச்சம் கொள்ள வைத்திருக்குமெபதில் சந்தேகமே இல்லை.

வேட்டை சமூகம் எப்போதுமே ஆயுதத்தால்தான் பேசும்.எனவே மோதல்கள் தவிர்க்க முடியாதவை என்றாகிடும்போது பறிபோகும் மனித உயிர்களுக்காக ஏதும் செய்ய முடியாத கையறு நிலை இரண்டு பக்கத்திலுமே சமம்.ஆனால் மண்ணின் மைந்தர்களுக்கோ பறிபோவது வெறும் நிலம் மட்டுமல்ல....

என் பதிலுரை:

தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சார்.. நானறிந்ததை கூடுமானவரை  அப்படியே தமிழில் தர முயற்சிக்கிறேன். இதில் இன்னொரு தலைவலியையும் சேர்த்தே கிளப்பி விட்டனர். கத்தோலிக்க மிஷனரிகளுக்கும், ப்ராட்டஸ்டன்ட் மிஷனரிகளுக்குமிடையே பிரச்சினை வெடித்தது. அதன் விளைவாக பாதிரிகள் ஆங்காங்கேசுட்டுக் கொல்லப்பட்டதும் நிகழ்ந்தது.. பழி செவ்விந்தியர்கள் தலையில் சுமத்தப்பட்டு ஏகப்பட்ட உயிர்பலிகள்..

ஆக ஐரோப்பாவை சேர்ந்த வெள்ளையர்களே வெங்கலக்கடை யானையாக அமெரிக்க கண்டத்தில் புகுந்து தம்போக்கில் வாழ்ந்த சிவப்பிந்தியர்களின் வாழ்க்கையை குழப்பி அழித்தொழித்துள்ளனர். தம்முள்ளும் ஒற்றுமையின்றி அடித்துப்பிடித்து ஒவ்வொரு பகுதியாக அவரவர் தேசத்துக்கு விசுவாசம்  காட்டியதும்.. மதச்சண்டைகளை அமெரிக்காவிலும் விரிவாக்கம் செய்ததும் வரலாறு..



7 கருத்துகள்:

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...