புதன், 30 ஆகஸ்ட், 2017

பால்கன் காமிக்ஸ் வரிசை -005

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே...
அனைவருக்கும் எனது ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!
இன்று ஐந்தாம் பால்கன் காமிக்ஸ் பற்றிய அறிமுகத்துடன் வந்துள்ளேன்..
பால்கன்
மாதமிருமுறை


மலர் : 1
இதழ் : 5
15 மார்ச் 1968
இலங்கை - 75
மேற்கு ஆப்பிரிக்கா,கிழக்கு ஆப்பிரிக்கா-1 ச,
மலேசியா மற்றும் சிங்கப்பூர் - 45  
சித்திரக் குறிப்புகள்
போர்க்கருவிகள் வளர்ந்த விதம்
கல்லெறி இயந்திரம் அறிமுகமும் அதன் பயனால் வென்ற அரசர்களும் பற்றிய குறிப்பு முகப்புப் பக்கத்தில் காணக் கிடைக்கிறது.

தொடர்கள்
ஹீரோஸ் -ஸ்பார்ட்டன் வீரன்

சோதனைக்கு ஒருவன்
டான் டேர் - வானவெளியில் சந்தித்த கறுப்புக் கொம்பன்
வெள்ளிக் கிரகத்தை சந்தித்த கறுப்புக் கொம்பனால் பூமிக்கு ஆபத்தா?

கடல் வீரர் கண்ட கடல் குரங்கு
கடல் குரங்கைக் கண்டு பிடிக்கப் போன பீட்டரைத் தேடிச் செல்லும் கடல் வீரர் மேசனும், துணையாள் குவாரோவும் கடல் குரங்கு வசிப்பதாக நம்பப்படும் குரோன் தீவுக்குப் போகின்றனர். மேற்கொண்டு நடந்தது 
என்ன?


தெய்வத்தின் சாபம்
கிரேக்கக் கடவுள் ஜீயஸ் டெலாசுக்கு சொந்தமான வில்லைக் கண்டுபிடிக்கப் போன ஏரியன் மாயக் கப்பலொன்றின் கீழ்த்தளத்தைக் கண்டுபிடிக்கிறான் அங்கே என்ன நடந்தது?

இரும்பு மனிதன்
டாக்டர் பயங்கரத்தின் இயந்திர மனிதர்கள் தாக்குதல். தப்புமா பாரீஸ்?
கறுப்பு வில் சென்னா
டாக்டர் ஜிம் அரசாங்க வண்டியைக் கொள்ளையடித்து சென்ற இரும்பு முகமூடியைக் கண்டு பிடிப்பாரா?

தனிக்கதை
-விடுதலை வேட்கை
ரஷ்ய விமானப்படை அதிகாரி ஜெர்மனில் இருந்து தப்பினாரா? பரபரப்பான சம்பவங்கள் நிறைந்த கதை.
கொள்கைக்காக உயிர்விடும் வீரர்கள் -தனிச் சண்டை
கரடியோடு மோதிப் பிழைத்த மாவீரன் குறித்த சித்திரத் தொகுப்பு
காலம் சென்ற நமது முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களது அந்நாளைய அழகான படத்தை அந்தக் கால ரெமி பவுடர் மற்றும் கேஸ்டர் தலை முடி எண்ணெய் இரண்டுக்கும் ஒரு சேர விளம்பரத்தில் உபயோகித்துள்ளனர்.   

பால்கன் ஆல்பம்:
தற்கால விமானம் தாங்கிக் கப்பல் குறிப்புகள் சித்திரங்களுடன்.


சிறுவர் சித்திரக் கதைகள்
பழங்கால நாய் ஜில்லி -இது ரின் டின் கேனுக்கெல்லாம் தாத்தா! கலாட்டாக்களை அள்ளிவிடும் சித்திரக் கதை.
தீராத விளையாட்டுப் பிள்ளை - புரூன்

சோற்றுப் பட்டாளமும் தளபதி ராவணன் மீசையும்-மந்திரப் பந்தில் விருந்து ஒன்று தெரிய அதனைக் கண்டு உண்ணப் பாயும் தளபதி ராவணன் மந்திரப் பந்தை உடைத்து விட மந்திரவாதி வெகுண்டெழ அதனால் விளையும் கலாட்டாக்களை விருந்துடன் நிறைவு செய்திருப்பார்கள்.  


சிறுவர் பகுதி
புதிர் களஞ்சியம்
எந்த இடம்?
நகைச்சுவை
காசும், தீக்குச்சியும்
ஏமாற்றும் வட்டங்கள்
கண்டுபிடியுங்கள்
புதிர் விடைகள் 
பால்கன் ஆல்பம்: விமானம் தாங்கிக் கப்பல் சித்திரமும், குறிப்புகளும். 

அடுத்த பாகத்தில் நீங்களும் துப்பறியலாம் என்கிற தொடர் துவக்கம். ஒவ்வொரு இதழிலும் ஒரு படக்கதை இருக்கும் அந்தக் கதையிலேயே குற்றவாளிகள் குறித்த குறிப்பும் இருக்கும் அவற்றைப் படித்து உங்கள் திறமையால் குற்றவாளியைக் கண்டு பிடிக்க வேண்டும். இது பின்னர் மறைபொருள், குறிப்புகள், டீட்டெயில் என்று உற்று நோக்கும் நம் நண்பர்களின் திறமையை அதிகப்படுத்தும் விதத்தில் அமைந்ததொரு பகுதி என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

-இந்த இதழில்தான் பால்கன் குறித்து நீங்கள் நினைப்பதை ஒரு விளம்பரமாக எழுதி அனுப்புங்கள் என்று போட்டி அறிவித்துள்ளனர். பத்து வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் மற்றும் பதினாறு வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் என்று இருவகையாக பிரித்து ஒவ்வொரு பிரிவிற்கும் ரூபாய் இருபது வீதம் மூன்று பரிசுகள் அறிவித்திருந்தார்கள். டால்டன் பிரசுரம், சந்தமாமா பில்டிங்க்ஸ், சென்னை 26. இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விதத்தில் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.  


-இந்த இதழில்தான் முதன்முதலாக இந்த பால்கன் காமிக்ஸின் உரிமையாளர்கள் விவரமும் முகவரிகளும் ரெஜிஸ்டர் எண்களும் காணக் கிடைக்கிறது. எடிட்டரும், பப்ளிஷரும் ஒருவரே திரு.B.விஸ்வநாத ரெட்டி. டால்டன் பிரசுரம், சந்தமாமா, பில்டிங்க்ஸ், 2&3, ஆற்காடு ரோடு, வடபழனி, சென்னை 26. இந்த பால்கன் (தமிழ்) காமிக்ஸின் உரிமையாளர்கள் 1.திரு.பி.எல்.என்.பிரசாத், 2.திரு.பி.வேணுகோபால் ரெட்டி, 3.திரு.பி.விஸ்வநாத் ரெட்டி, 4.திரு.பி.வெங்கடராம ரெட்டி. from the source ... Statement about ownership of Falcon (Tamil) Rule 8(Form iv), News papers (central) Rules.1956  

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி..

பகைவருக்குப் பஞ்சமேது?_Tex willer April 2024

 வணக்கம் தோழமை உள்ளங்களே.. லயன் காமிக்ஸ் ஏப்ரல் மாத வெளியீடுகள்... பகைவருக்குப் பஞ்சமேது? டெக்ஸின் லேட்டஸ்ட்..இதைப்பற்றி தோழர் சுரேஷ் தனபால்...