செவ்வாய், 19 செப்டம்பர், 2023

01_மாயா வினோத மான் குட்டி_முத்து மணி காமிக்ஸ் முதல் வெளியீடு.

 வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. 

விநாயகர் சதுர்த்தி காலத்தில் இந்த சித்திரக்கதையை உங்களுடன் பகிர்ந்து வாசித்து மகிழ்வதில் ஜானி ஹேப்பி அண்ணாச்சி.. 

சில சித்திரக்கதைகளை முதல் வெளியீடு தேடித்தேடி அலுத்துப் போய் விடுவோம். ஆனால் சில சித்திரக் கதைகளின் முதல் வெளியீடுகள் தானாகவே பட்டாம்பூச்சி என விண்ணில் பறந்து நம் மனதில் வந்து அமரும். 

அப்படி ஒரு சித்திரக்கதைதான் இந்த முத்து மணி காமிக்ஸின் முதல் வெளியீடான மாயா வினோத மான் குட்டி.. 

இருபத்தைந்தே காசுகளில் எடிட்டர் திரு. கே. எம். முத்துசாமி, ஓவியர் திரு. வரன் கூட்டணியில் 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதினைந்தாம் தேதியில் சிவகாசியில் அச்சிட்டு சென்னையில் இருந்து வெளியிடபட்ட சித்திரக்கதை இந்த அபூர்வமான முத்து மணி காமிக்ஸ்.. இதன் வரிசையில் நம்மிடம் உள்ள முதல் கதையினை இரசித்து மகிழுங்கள்.. 

சிறுமி கீதாவின் பயணம் எப்படி எப்படியான ஆபத்துக்களை கொண்டு வருகிறது என்பதும் அதன் இறுதியில் நிகழும் அற்புதமும் இறுதியாக சிறுமி தன் இல்லத்தை சென்றடைவதுடன் பக்திப் பரவசம் உருக்கொள்ளுமாறு அமைக்கப்பட்டிருக்கும் இந்த கதையினை விநாயகர் சதுர்த்தி தினத்துக்கான நமது வலைப் பூவின் பரிசாகப் பெற்று மகிழுங்கள்.. ஒரு சில வாரங்கள் முன்பே இணையத்துக்கு கொண்டு வந்து விட்டேன். வாசித்தவர்கள் தங்கள் கருத்தினை பதிவு செய்திடலாம்.. இந்த வலைப்பூ உங்களுக்கான ஒரு ஆவணப் பெட்டகமே.. இதன் அத்தனை படைப்புகளும் ஸ்கான்களும் நண்பர்களின் பேராதரவில் கிட்டியவையே.. அப்படி திரு. டெக்ஸ் சம்பத், திருப்பூர் அவர்களது அன்புடன் நமக்கு பரிசளிக்கப்பட்டிருக்கும் இந்த சித்திரக்கதை உங்களை இரசிக்க வைக்கப் போவது உறுதி. உங்கள் இல்ல சுட்டிகளுக்கு இந்த சித்திரக்கதையை அன்பளித்து மகிழ அன்புடன் அழைக்கிறேன். 
















இந்த சித்திர ஓட்டத்தை தரவிறக்கி பிள்ளைகளுடன் சேர்ந்து ஓடிக் கொண்டே இருக்க: 

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி..




  

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...