திங்கள், 12 ஏப்ரல், 2021

வலிமை கொள்.. வசப்படட்டும்..

 ஏய் மனமே..

ஏன் பதற்றம்..

ஏன் அவசரம்..

ஏன் வேகம்..

ஏன் கோபம்..

ஏன் விரக்தி..


சற்றே  சும்மாயிரேன்...


ஏய் என் ஆன்மாவே..

ஏன் அலைகிறாய்..

ஏன் தவிக்கிறாய்..

ஏன் புலம்பல்..

ஏன்  கடுப்பு..

ஏன் வேதனை..

அமைதி கொள்..


சும்மாயிருத்தலில்

சுகமுண்டு

பெரியோர் சொல்..


மெதுவாக..

மிக மெதுவாக..

மிகமிக மெதுவாக...

வசப்படும் உன் வானம்..

_ஜானி 

ஜேன் பாண்ட் _லயன் லைப்ரரி

  மலிவு விலையில் அதிரடியானதொரு ஸ்பை த்ரில்லர் இந்த ஜேன் பாண்ட்...லயன் காமிக்ஸ் இதழ்.. மாபெரும் வெற்றி பெற வாழ்த்துவோம்.