ஞாயிறு, 31 டிசம்பர், 2017

ஹெப்சிபா கிரிம் (@) கறுப்புக் கிழவி கதைகள் வரிசை_001_அருள் சக்தி..

ஹாப்பி ந்யூ இயர் நண்பர்களே... இந்த புத்தாண்டு எல்லா வளங்களையும் வாரி வழங்கி உங்களை வெவ்வேறு தளங்களுக்கு எடுத்துச் செல்ல எங்கள் அனைவரின் வாழ்த்துக்களும்.. அன்பும்..
நம்ம கறுப்புக் கிழவி கதையில் ஒன்றினை மொழிபெயர்த்து இங்கே நமக்கு வழங்குவது நண்பர் திரு.அருள்சக்தி... என்ஜாய்.. வண்ணத்தில் நல்ல கோப்புகள் எதுவும் இணையத்தில் கிடைக்காததால் கிடைத்ததை வைத்து முயற்சித்து இருக்கிறார்.
ஒருவேளை நல்ல கோப்புகள் கிடைக்காததால்தான் திகில் மறுபதிப்பில் கூட கறுப்புக் கிழவி கதைகள் தொடரவில்லையோ..
நமது அன்புக்குரிய லயன் குழுமத்துக்கு இந்த ஆண்டின் சந்தாத் தொகையை அனுப்பி வைக்க மறக்காதீர்கள். சந்தா என்பதே அச்சாணி.. அது இருந்தால்தான் அடுத்தடுத்த அதிரடிகள் களமிறங்கும்..அதனை நினைவில் வைத்துக் கொண்டு இந்தக் கதையை வாசிக்கலாமே.. 
மச்சான்ஸ்...ஓப்பன் தி பாட்டில்ல்ல்..
Image result for happy new year 2018
and once again we loudly say...
Related image
with love johny

இலவச பிடிப்புக்கு சரி.. சரி.. பிடிஎப்புக்கு :குறிப்பு.. இந்த போஸ்ட் குறித்து ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் தாராளமாக தெரிவிக்கலாம். போஸ்ட் சிறிது காலம் இருக்கும். அவசியம் ஏற்பட்டால் உடனே போஸ்டை எடுத்து விட நாங்கள் ரெடிதான். நன்றி...அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆயாவின் பக்தர்கள் குழு...ஹீ ஹீ ஹீ 

என்றும் அதே அம்புடன்... ச்சே... ச்சே...
 ஆயா போஸ்ட்டுன்னதும் சந்தோஷத்துல அடிக்கடி தவறு வருகிறது..
ஹாப்பி புது ஆண்டு...

 அன்புடன்..
உங்க இனிய பக்தன் ஜானி..

மீட்பின் வரலாறு புண்ணியவான்களும் புண்ணியவதிகளும்...பாகம் -2

இனிய உள்ளங்கள் அனைவருக்கும் இந்த புத்தாண்டில் சகல வளங்களும் கிடைக்க எங்கள் அனைவரின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..

 நிற்க இந்தப் புத்தகம் வெகு காலத்துக்கு முன்னர் வெளியாகி இன்றும் பதிப்பில் உள்ளதொரு கிறிஸ்தவ தவ வாழ்வு வாழும் துறவியருக்கான புத்தகம். இந்த புத்தக வரிசையை மீட்டெடுத்து இங்கே உங்களுடன் பகிர நண்பர்கள் திரு.ராஜசேகரன் வேதிஹா மற்றும் திரு.குமார், திருப்பூர் ஆகியோர் உதவினர். அவர்களுக்கும் மற்ற நூல்களையும் மீட்டெடுக்க உதவிய உதவிக் கொண்டிருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. வரும் ஆண்டிலும் உங்கள் அனைவரது உதவிகளும் கிட்டினால் அனைத்தும் சுகமே.. இனிமையே..

இதன் பாகம் ஒன்று ஏற்கனவே வாசித்திருப்பீர்கள். இதோ பாகம் இரண்டு. பாகம் மூன்றுடன் இந்தப் புத்தகம் நிறைகிறது. பிடிஎப் ஐ அந்த மூன்றாம் பாகத்துடன் இணைத்து விடுகிறோம். இந்தக்கதை இறைவனின்  பிரியத்துக்குரிய  பண்பாளர்களில் ஒருவரான தோபியாஸ் குறித்து விவரிக்கிறது...
Image result for புத்தாண்டு வாழ்த்துக்கள் 2018உங்களுடன் இறையாசீர் என்றும் இருப்பதாக.. வாழிய வளங்கள் அனைத்துடனும்..
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி..

வன ராணி_கலைப்பிரசுரம்_டெக்ஸ் சம்பத்

Image result for new year 2018 images magic
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழமை உள்ளங்களே..
உங்களை இந்த ஆண்டு சிறப்பாக பயன்படுத்தி உயர்வான இடங்களில் உங்களை அமர வைத்து அழகு பார்க்க எங்கள் அனைவரின் வாழ்த்துக்கள். உங்கள் அனைத்து எண்ணங்களும் ஈடேறும் ஆண்டாக இது அமையட்டும் என்ற வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்..
ஒரு நூலை உயிர்ப்பிப்பது என்பது மிக அழகான சிற்பம் ஒன்றை செதுக்குதல் போல.. அந்த சிற்பம் முழுமை பெறும்போது கிடைக்கும் இன்பம் இருக்கிறதே அது எத்தனை கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் வாராத இன்பமாகும்.
அந்த வாய்ப்பினை எங்களுக்கு வழங்கிய நண்பர் டெக்ஸ் சம்பத் அவர்களின்  தேடலில் இந்த வன ராணி உங்கள் பார்வைக்கு...
கலைப்பிரசுரத்தின் அத்தனை பிரதிகளும் எங்கெங்கோ இருக்கின்றன. தேடுங்கள். அத்தனையும் உயிர்பெற்று நம் இளமைப்பருவத்தின் ஆச்சரியங்களை இன்று திரும்பிப்பார்த்து பொக்கிஷமாக எண்ணிக் கொண்டாடி மகிழ்வோம்...
என்ஜாய்..தி..மேஜிக்..
பயங்கரத்தீவினை யாராவது கண்டுபிடிச்சா சொல்லி அனுப்புங்கப்பா... மற்ற வெளியீடுகளையும்தான். இது தனிப்பட்ட ஒருவரது முயற்சி அல்ல. பல கரங்களின் சேர்க்கைதான் இந்த மாயாஜாலத்தைப் புரிந்தது.. இனியும் இப்படியே தொடரும். உங்கள் உதவியும் கிட்டினால் சிறப்பாகவே அமையும்.. தேடலுடன்...
உங்கள் இனிய நண்பன் ஜான் சைமன்..

பிடிஎப் தரவிறக்கம் செய்துகொள்ள..
டவுன்லோட் ஆகி விட்டதா...
அட அப்புறம் படித்துக் கொள்வோம் என்று உங்கள் சேமிப்பில் வைத்து விடாமல் வாசித்து விட்டு நாலு வரி எழுதினீர்கள் என்றால் வேறென்ன பரிசு எங்களுக்கு வேண்டும்???

Image result for new year 2018 images magic

வியாழன், 28 டிசம்பர், 2017

வீழ்த்தினாலும் விடேன்_ஹம்பர்_HBD 2018


Related image
ஹாப்பி ந்யூ இயர் தோழர்களே.... 
உங்கள் அனைவருக்கும் என் சார்பிலும் நண்பர்கள் மற்றும் வாசகர்கள் சார்பிலும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பேருவகை அடைகிறேன். இந்த புத்தாண்டு சகல வளங்களையும் உங்கள் வாழ்வின் எதிர்பாராத தருணங்களையும் இன்ப அதிர்ச்சிகளையும் வாழ்வின் திருப்பு முனைகளையும் கொடுத்து புத்தம்புதிதாக உங்களை அரவணைத்துக் கொள்ள எங்கள் அனைவரது வாழ்த்துக்களும்...அன்பும்..
இதோ உங்கள் நட்பைக் குறுகிய காலத்திலேயே சம்பாதித்து மாபெரும் வெற்றி பெற்ற மிஸ்டர்.ஹம்பர் உங்களை மூன்றாவது முறையாக சந்திக்கவிருக்கிறார்.... கதைத் தேர்வு திரு.தமிழ் ஜோக்கர்... தொழில்நுட்ப உதவி திரு.சொக்கலிங்கம் பன்னீர்செல்வம்.. அன்பும் ஆதரவும்...நீங்கள்.. அனைவரும் சேர்ந்து புத்தாண்டை ஆரவாரமாக வரவேற்போம்... எதிர்காலம் குறித்த கற்பனைகள் பலவிதம்..அதில் இது புதுவிதம்... 


Image result for happy new year 2018
பிடிஎப் தரவிறக்கங்களுக்கு:
http://www.mediafire.com/file/o3d1rf15re85re9/Veezhthinaalum%20viden_Ratnavel%20%26%20Jscjohny.pdf
குறிப்பு..படித்து விட்டு நாலு வார்த்தை சொல்லுங்க.. வேறெப்படி என்னோட உங்க கருத்துக்களைப் பகிர்வீங்களாம்?
என்றும் அதே அன்புடன்...வாழ்த்துடன்..உங்கள்ஜானி.. 

செங்களத்தில் சாகா ஆட்டம்_மெர்லினின் மந்திர டைரி_நிறைவுப்பகுதி

வணக்கங்கள் நண்பர்களே..  சில பல ஆண்டுகளாக காத்திருப்பில் இருந்த நண்பர்களுக்காக இந்த கதை முற்றிலும் வாசக இரசனைக்காக அன்பளிக்கப்படுகிறது. விருப...