ஞாயிறு, 31 டிசம்பர், 2017

வன ராணி_கலைப்பிரசுரம்_டெக்ஸ் சம்பத்

Image result for new year 2018 images magic
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழமை உள்ளங்களே..
உங்களை இந்த ஆண்டு சிறப்பாக பயன்படுத்தி உயர்வான இடங்களில் உங்களை அமர வைத்து அழகு பார்க்க எங்கள் அனைவரின் வாழ்த்துக்கள். உங்கள் அனைத்து எண்ணங்களும் ஈடேறும் ஆண்டாக இது அமையட்டும் என்ற வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்..
ஒரு நூலை உயிர்ப்பிப்பது என்பது மிக அழகான சிற்பம் ஒன்றை செதுக்குதல் போல.. அந்த சிற்பம் முழுமை பெறும்போது கிடைக்கும் இன்பம் இருக்கிறதே அது எத்தனை கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் வாராத இன்பமாகும்.
அந்த வாய்ப்பினை எங்களுக்கு வழங்கிய நண்பர் டெக்ஸ் சம்பத் அவர்களின்  தேடலில் இந்த வன ராணி உங்கள் பார்வைக்கு...
கலைப்பிரசுரத்தின் அத்தனை பிரதிகளும் எங்கெங்கோ இருக்கின்றன. தேடுங்கள். அத்தனையும் உயிர்பெற்று நம் இளமைப்பருவத்தின் ஆச்சரியங்களை இன்று திரும்பிப்பார்த்து பொக்கிஷமாக எண்ணிக் கொண்டாடி மகிழ்வோம்...
என்ஜாய்..தி..மேஜிக்..
















பயங்கரத்தீவினை யாராவது கண்டுபிடிச்சா சொல்லி அனுப்புங்கப்பா... மற்ற வெளியீடுகளையும்தான். இது தனிப்பட்ட ஒருவரது முயற்சி அல்ல. பல கரங்களின் சேர்க்கைதான் இந்த மாயாஜாலத்தைப் புரிந்தது.. இனியும் இப்படியே தொடரும். உங்கள் உதவியும் கிட்டினால் சிறப்பாகவே அமையும்.. தேடலுடன்...
உங்கள் இனிய நண்பன் ஜான் சைமன்..

பிடிஎப் தரவிறக்கம் செய்துகொள்ள..
டவுன்லோட் ஆகி விட்டதா...
அட அப்புறம் படித்துக் கொள்வோம் என்று உங்கள் சேமிப்பில் வைத்து விடாமல் வாசித்து விட்டு நாலு வரி எழுதினீர்கள் என்றால் வேறென்ன பரிசு எங்களுக்கு வேண்டும்???

Image result for new year 2018 images magic





2 கருத்துகள்:

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...