செவ்வாய், 17 நவம்பர், 2020

கால வேட்டையர்_ஜம்போ காமிக்ஸ் விமர்சனம்

 

ஜம்போ காமிக்ஸ் சீஸன் :3 புக்:7 ஆக வெளியிடப்பட்டுள்ள நூல் கால வேட்டையர்.. தலைப்பே கதையை விவரித்து விடுகிறது.. முன் அட்டையில் தீயின் மத்தியில் தெறிக்கும் ஆக்ஷனில் ஹீரோயின்.. பின்னட்டையில் செம்ம கொலாஜில் சிந்தனையைத் தூண்டும் ஓவியங்கள்.. 

ரூ.120/-க்கு எதிர்கால கதையை சிறப்பாக கொடுத்துள்ளனர் லயன் காமிக்ஸ் நிறுவனத்தார்.. 

ஹனிமூனுக்கு செல்லும் தம்பதியர் குள்ள உருவங்களிடம் சிக்கி அவஸ்தைப்பட பத்திரிக்கையாளர் ஒருவர் காப்பாற்றுகிறார்.. அதில் புதுப்பெண் கடத்தப்பட நிருபரோடிணைந்து அவளை மீட்கப் போராடும் கணவன்.. நமது காலத்தினை அப்படியே உறிஞ்சி வேறெந்த ஜீவராசிகளோ வேறோரிடத்தில் செழுமையாக வாழ்வதாக புனைவுக் கட்டுரையை எழுதும் நிருபரை கொல்வதற்கு குள்ள உருவங்கள் துரத்திட யுலா என்னும் பெயரில் மின்னஞ்சல், அசரீரி & போன் எச்சரிக்கையை பெறுகிறார் நிருபர்.. இருப்பினும் கடத்தப்பட்டு தப்பி வெளியேறுகிறார்..

யுலா பிரபஞ்ச காவல் அதிகாரி.. நேரத்தைத் திருடி மற்றவருக்கு விற்கும் குழுவைத் துரத்திக் கொண்டு பூமிக்கு வருகிறாள்..

தொடரும் பரபர பக்கங்களில் நகரும் கதைக் களத்துக்கு  கருப்பு வெள்ளை ஓவியங்கள் கம்பீரமாக அணி சேர்க்கின்றன.. தவற விடக்கூடாத இதழ்.. _ஜானி சின்னப்பன்


வெள்ளி, 13 நவம்பர், 2020

ராஜ யோகம்-செல்லம்-படக்கதை_comics Pdf Times

 

இந்த தீபதீருநாளிலிருந்து எல்லோருக்கும் #ராஜயோகம் தான்

செல்லம்-ராஜ யோகம்-படக்கதை


பகைவருக்குப் பஞ்சமேது?_Tex willer April 2024

 வணக்கம் தோழமை உள்ளங்களே.. லயன் காமிக்ஸ் ஏப்ரல் மாத வெளியீடுகள்... பகைவருக்குப் பஞ்சமேது? டெக்ஸின் லேட்டஸ்ட்..இதைப்பற்றி தோழர் சுரேஷ் தனபால்...