சனி, 30 நவம்பர், 2019

தொலைத்து விடுகிறேன் பார்..வினாடி கதைகள்_ஜானி சின்னப்பன்


போர்வையிலிருந்து வெளிப்பட்ட பட்டாக் கத்தி   மூர்த்தியின் நடு நெஞ்சில் சரியாக அரை இஞ்ச் இறங்கி இரத்தத்தை தெளிக்க விட்டது..குத்தியவன் கண்களில் குரூரம் கொப்பளிக்க ஆளை சாய்த்த திருப்தியோடு தடதடவென ஓடிப்போய் அந்த பைக்கை பாய்ந்த வேகத்தில் ஸ்டார்ட் செய்தான்..வேகமெடுத்து  முனை திரும்பியவனை லாரி முத்தமிட எத்தனிக்க..ப்ரேக்கை அழுத்தினான்.. ஏற்கனவே மூர்த்தி கட் செய்திருந்த ப்ரேக் வயர் பல்லிளித்தது...டொம்ம்..என லாரி மீது மோதிய பைக்கிலிருந்து நேரே நரகத்துக்கு விசா வாங்கினான்,
தன்  வேலையில் செய்த கோல்மாலைத் தட்டிக் கேட்ட மூர்த்தியை ஒழித்தே தீருவேனென சபதமிட்டு இரு முறை முயன்று தோற்று இம்முறை மூர்த்தி முந்திக் கொண்டு தன் காயை நகர்த்தி விட்டதால் மரணத்தை மறுக்காமல் ஏற்றுக் கொண்ட சுந்தர்..

நன்றி:
கதை எழுத ஊக்கி:திரு.கணேஷ் பாலா...

நகையை காணோம்.. வினாடி கதை..ஜானி சின்னப்பன்


சீக்கிரமே காணாமப் போன உங்க நகையை கண்டுபிடிச்சிருவோம்.. என சொல்லிவிட்டு பைக்கை உதைத்தார் சப் இன்ஸ்.அறிவழகன்..பைக் பெருமூச்சை வெளியேற்றி நகர்ந்தது..எத்தனை நாளாகப் போகுதோ...?   

எரிமலைத் தீவில் சிந்துபாத்
கால இயந்திரம்_சுஸ்கி & விஸ்கி சாகசம்
பகைவருக்குப் பஞ்சமேது?_Tex willer April 2024

 வணக்கம் தோழமை உள்ளங்களே.. லயன் காமிக்ஸ் ஏப்ரல் மாத வெளியீடுகள்... பகைவருக்குப் பஞ்சமேது? டெக்ஸின் லேட்டஸ்ட்..இதைப்பற்றி தோழர் சுரேஷ் தனபால்...