வியாழன், 20 ஜனவரி, 2022

ஆதலினால் காதல் கொள்ளாதீர்.. காமிக்ஸ் எனும் கனவுலகத்தின் பரிசுமழையில்..

 ஆதலினால் காதல் கொள்ளாதீர்..2015ல் வெளியான லயன் காமிக்ஸ். வெளியீட்டு எண் இல்லை.

கதைச்சுருக்கம்.

ஆப்பிரிக்க பமாகோ நாட்டின் உள்நாட்டுப்போர். அங்கே ப்ரெஞ்சுத் தூதரைக் கடத்தும் இராணுவ ஜெனரல். ப்ரெஞ்ச் ஆர்மியால் ஏதும் செய்ய முடியாமல் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் தங்கத்தோடு தப்பி வெளியேற ஜெனரல் காலாம்போ காத்திருக்கிறான். அவனது பிணைக்கைதி மார்ட்டின் லெக்ரெட் டிவி நிருபர் தனது முன்னாள் காதலர் என்பதைத் தற்செயலாகக் காணும் ஹானஸ்டியின் கடைக்கண் ஆணைக்கிணங்க தன் பைலட் நண்பரை துணைக்கழைத்து சென்று வேய்ன் புரியும் அதிரடிகளும் அதன் திடீர்த் திருப்பங்களும் பிரெஞ்ச் இராணுவத்தினரையும்,  மாந்திரீகனையும், ஜெனரல் காலாம்போவையும், லெக்ரெடையும் ஏகப்பட்ட சிரமங்களுக்கிடையே எப்படி திறம்பட கையாண்டு மீள்கிறார்கள் வேய்ன் டீம் என்பதனை தரமான பின்னணிகளோடு போட்டுப் பின்னிப் பிரிச்சி ஏவுகணை விட்டு பிளேனை காலி செய்து ஹெலிகாப்டரை தூள்பறத்தி செமத்தியான சாகஸத்துடன் கதையை நிறைவு செய்திருக்கின்றனர். இன்றைய வாசிப்புக்கு செம்ம தீனியாகி விட்டிருக்கிறது இந்த ஆதலினால் காதல் கொள்ளாதீர். 😻🤩😻🤩😻 


மிக்க நன்றி தோழர்களே..வாசக வாசகியரே.. காமிக்ஸ் எனும் கனவுலகம் சார்பில் சென்ற மாதம் டெக்ஸ் வில்லரது தீபாவளி வெளியீடுகளில் இருந்து இரு தினங்களாக நடந்த போட்டியில் நான் கலந்து கொள்ள கிடைத்த நேரமும் காலஅவகாசமும் சற்றும் எதிர்பாராததே. சரியாக வாசிக்கக்கூட சமயம் கிட்டா நிலையில் போட்டிக்களத்தில் எகனைமொகனையாகக் குதித்து வைத்தேன்..என் சிறு பயலின் அட்டகாசங்களையும் சமாளித்தவாறே கேள்வி பதிலில் கலந்து கொண்டேன். ரிசல்ட் தினத்தில் பெரியதொரு எதிர்பார்ப்பும் இல்லை.. ஆனால்..ஆச்சரியமாக ஊக்கப்பரிசை வென்றிருந்தேன். ஆஹா என மகிழ்வதா.. இல்லை திருதிருவென முழிப்பதா என்று நினைத்திருந்தேன். இந்நிலையில் காலையிலேயே கதவைத் தட்டுகிறது பரிசுப் புத்தகம். திறந்தால் அட நம்ம வேய்ன் ஷெல்டன்.. எனக்கு இராணுவக்கதைகள் என்றாலே அல்வா போன்று இஷ்டம். அதிலும் ஒருமுறை வாசித்தபின் திரும்ப வாசிப்பதற்கான காலஅவகாசங்களே காவல்துறையின் களப்பணிகளுக்கிடையே கிட்டுவதில்லை. அதனாலேயே சும்மா ஏதாவது அமர்க்களம் செய்து விட்டு ஓடிப்போவேன். இந்த அட்டகாசமான பரிசுக்கு நன்றிகள் Again and again team.. 🤩🤩🤩🤩😻🤩😻🤩

வெள்ளி, 7 ஜனவரி, 2022

ப்ரியமானவனே..ஜானி சின்னப்பன்

ஞமலியெனினும் 
தோழனெனினும் 
துணைவன் நீயே.. 
கைப்பிள்ளையாய் 
மடியில் வைத்துக் 
கொஞ்சிய மழலை நீ.. 
காடுமேடெங்கும் 
காவலாய் உடன் வந்த 
நெடுங்கால நண்பன் நீ.. 
கயவரை அணுகவிடாமல் என் 
குடிசையைப் பாதுகாப்பதில் 
நல்லதொரு காவலனும் நீ..
கடைசிவரை வாலாட்டி 
உன் குரலால் தாலாட்டி 
கூடவே துணை நிற்பாய் 
தோழனே.. 
உனக்கீடாய் உறுதுணையேதும் 
உண்டோ உலகிலே.. 
ஜானி சின்னப்பன்


 

ஞாயிறு, 2 ஜனவரி, 2022

மந்திரப்பெண் மெலூஸின்-அறிமுகம்

 வணக்கங்கள் பிரியமானவர்களே.. மந்திரப்பெண் மெலூஸின் சினி புக்கில் ஆங்கிலத்தில் கிடைக்கக்கூடிய சின்னச்சின்ன கதைகள் தொகுப்பு.. தமிழுக்கு வந்தால் சிறப்பு. இதோ உங்களுக்காக தமிழில் ஒரு பக்கம்.. 

 பகைவருக்குப் பஞ்சமேது?_Tex willer April 2024

 வணக்கம் தோழமை உள்ளங்களே.. லயன் காமிக்ஸ் ஏப்ரல் மாத வெளியீடுகள்... பகைவருக்குப் பஞ்சமேது? டெக்ஸின் லேட்டஸ்ட்..இதைப்பற்றி தோழர் சுரேஷ் தனபால்...