சனி, 30 மார்ச், 2024

வேதாளர் திருமணம்-வண்ணத்தில் வி காமிக்ஸ்

 


வி காமிக்ஸ் வேதாளரின் திருமணம் சார்ந்த பூ விலங்கு கதையின் வண்ண வடிவத்தை  நூறு ரூபாய் விலையில் விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.. அனைவரும் வாங்கி வாசித்து மகிழுங்கள்.. 
ஈஸ்டர் பெருவிழா நாளை நடைபெறவிருப்பதை முன்னிட்டு இதுவரை விவிலிய கதைகளை சித்திர வடிவில் சேமித்து வைத்துள்ள எனது மீடியாபயர் இணைப்பினைப் பகிர்கிறேன். விருப்பமுள்ளவர்கள் வாசித்து மகிழுங்கள்.. 


சும்மா உங்களுக்காக முயற்சி ஒன்றினை செய்து பார்த்தேன்..
வண்ணமிடுதல் நேரம் இழுக்கும் வேலை.. அத்தனை நேரமும் பொறுமையும் இருந்தால் எத்தனையோ சாதிக்கலாம்..
என்றும் அதே அன்புடன்.. உங்கள் நண்பன் ஜானி.. 

தொடர்புடைய இடுகைகள்..





திங்கள், 25 மார்ச், 2024

கிளாசிக் ஸ்பெஷல் -2-வகம் காமிக்ஸ் மார்ச் வெளியீடு

 

இனிய வணக்கங்கள் தோழர்களே..

இந்த மார்ச் மாதம் வெளியாகியுள்ள காமிக்ஸ்களின் வரிசையில் வகம் லேட்டஸ்டாக இறக்கி இருப்பதுதான் இந்த கிளாசிக் ஸ்பெஷல் -2.

முந்தைய பதிவில் மார்ச் மாதத்தில் வெளியாகி இருக்கும் அனைத்து சித்திரக்கதைகளையும் விளக்கி இருக்கிறேன். வாசிக்காதவர்கள் வாசித்து விடுங்கள்.. 

அதற்கான லிங்க் இதோ:  https://johny-johnsimon.blogspot.com/2024/03/blog-post.html





கிளாசிக் ஸ்பெஷல் -2 

மொத்தம் பன்னிரண்டு கதைகள்

-ஹிட் மேன்

-பவேரியாவில் ஹிட் மேன்

-பொரானியாவில் ஹிட் மேன்

-பொம்மை ப்ளேன்???

-மூளைத்திருடர்கள்

-வெகுமதி வேட்டையன் -1

 -வெகுமதி வேட்டையன் -2

-வெகுமதி வேட்டையன் -3

-வெகுமதி வேட்டையன் -4

-வெகுமதி வேட்டையன் -5

-மரணப்பொறி -கிளென்ஸி அண்ட் மான்ப்ரெட்

-வைரக்கொள்ளை



நான்கு மொழிபெயர்ப்பாளர்கள்

சதீஷ் அழகு, சிவகங்கை

கார்த்திகேயன், புதுச்சேரி  

தங்கவேல், கோயமுத்தூர்  

ராஜேஷ், சேலம்    

என பிரம்மாண்டமான செட் அப்புடன் இந்த மார்ச் மாத இறுதி வாரத்தில் அதிரடி காட்டியிருக்கிறது வகம் காமிக்ஸ். எடிட்டர் கலீல் அவர்களின் அடுத்தடுத்த பரபரப்பான அறிவிப்புகளும் இந்த வெளியீட்டுக்கு  சிறப்பான தன்மையைக் கொடுத்திருக்கிறது. 


ஆடம் ஒயில்டு, சைனாமேன் என்று புதிய இலக்குகளையும் ஆர்வமூட்டும் வகையில் விளம்பரங்களாக காட்சிப்படுத்தி அந்த வெளியீடுகள் இப்போதே நம் கையில் தவழாதா என்கிற ஏக்கத்தை உண்டு செய்திருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை..



நூற்றுப் பதினாறு பக்கங்கள், இருநூற்றுப் பத்து ரூபாய் விலை பெரிய சைஸ் என்று இந்த கிளாசிக் ஸ்பெஷல் என்றும் நினைவில் நிற்கும்..

Hitler Lives என்கிற கதைத்தொடர் தமிழில் பேசிட தாவி வரவிருக்கிறது...

உங்கள் பிரதிகளைத் தவற விடவேண்டாம்..  


வெள்ளி, 22 மார்ச், 2024

மார்ச் மாத காமிக்ஸ் வெளியீடுகள்

 வணக்கம் தோழமைகளே.. 

மார்ச் மாத சித்திரக்கதை வெளியீடுகள் அனைத்தையும் ஒரு பார்வை பார்ப்போமா?

லயன் காமிக்ஸ்_மார்ச் 2024

-புயலுக்குப் பின்னே பிரளயம்_லயன் காமிக்ஸ்_மார்ச் 2024. 



இது ஒரு டெக்ஸ் வில்லர் டிடெக்டிவ் ஸ்பெஷல்.. கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் சடலத்தை டெக்ஸ் அண்ட் கார்சன் காண்கிறார்கள். அந்த பெண்ணின் பின்னணியை விசாரிப்பதில் மும்முரம் காட்டும் டெக்ஸ் ஜோடிக்கு அடுக்கடுக்கான சோதனைகள். அதனை எப்படி முறியடித்து தங்கள் துப்பறியும் திறமையால் குற்றவாளியை அடையாளம் காண்பிக்கிறார்கள் என்பதனை அதிரடிகள் பலவற்றுடன் சிறப்பாகக் கையாண்டிருக்கிறது டெக்ஸ் வில்லரின் புயலுக்குப் பின்னே பிரளயம். இது லயன் காமிக்ஸின் 445வது வெளியீடு. 


விலை ரூபாய் நூற்றைம்பது. பக்கங்கள் கருப்பு வெள்ளையில் 184. அசத்தும் ஓவியங்கள் கருப்பு வெள்ளை நிறத்தில் மாயாஜாலம் நிகழ்த்துகின்றன.. 

மார்ச் வெளியீடு இரண்டு 


முத்து காமிக்ஸின் வெளியீடு எண் 490 இந்த ஆர்டிக் அசுரன். 

ஆர்டிக் பகுதி, அண்டார்டிக் பகுதி நம் அன்பான பூமி கிரகத்தின் வட, தென் துருவங்கள். அவற்றினை மையமாக வைத்து நிறைய திரைப்படங்களும், சித்திரக்கதைகளும் வெளியாகி இருக்கின்றன. இந்த ஆர்டிக் அசுரன் அதில் ஒன்று. ஆர்டிக் பகுதியில் வசிக்கும் மக்கள் வெண்டிகோ என்கிற அசுரன் மான் கொம்புகளுடன் அந்த பகுதிகளில் சுற்றி அலைவதாகவும் மனிதர்களைக் கண்டால் உடனே கொன்று விடுவான் என்றும் பல கட்டுக்கதைகள் உலாவி வரும் நிலையில் அங்கே வைக்கிங் கும்பல் குடியேறி இருந்த தொல் தடங்களை ஆராயப் புகும் குழுவில் நமது மார்ட்டின் மற்றும் குழுவினர் பங்கேற்கிறார்கள். அதன் பின்னர் நடைபெறும் பல மர்மமான சம்பவங்களும் இறுதியில் அதற்கொரு நியாயம் கற்பித்தலும் இந்த கதையினை தனித்து தெரிய காரணமாகின்றன..  




மார்ச் வெளியீடு மூன்று  

வி காமிக்ஸ் பதினைந்தாவது வெளியீடு.. துரோகங்கள், துணிச்சலான முயற்சிகள் பரபர பக்கங்கள் ஆதிவாசிகள் என்று மிஸ்டர் நோ கதை இம்முறையும் அசத்தத் தயார்.. விலை நூறு ரூபாய். 124 பக்கங்கள். 
தவறவிடாதீர்கள்.. 
மார்ச் மாதத்தில் ரங்லீ காமிக்ஸ் கொண்டு வந்திருக்கும் நூல்களைப் பற்றி அடுத்த பதிவில் அதுவரை இந்த தளத்துக்கு சென்று வரலாமே..?
பின்னர் சந்திப்போம்..
ரங்லீ   காமிக்ஸ்_மார்ச் 2024
g காமிக்ஸின் ஒன்பதாவது வெளியீடாக வெளியாகி இருக்கும் இந்த ஒரு கோடியும் இரு கேடிகளும் ஒரு ரிப் கிர்பி சாகசம். ப்ளீட்வே ஹவுஸ் வெளியிட்டிருக்கும் இந்த தரமான கதையினை தமிழில் திரு.k.v.கணேஷ் மொழிபெயர்ப்பில் அசத்தலாக வெளியிட்டிருக்கிறது ரங்லீ காமிக்ஸ்.. 
ரூபாய் 75/- இதன் கதை சுருக்கம் பார்ப்போமா?
எல்லோருக்கும் ஆசைகள் இருக்கலாம். ஆனால் அவை நிறைவேற்ற முடியாமலேயே வாழ்க்கையைத் தள்ளிப் போட்டுக் கொண்டு அன்றாட அலுவல்களில் உழன்று கொண்டிருப்போம். நினைத்ததை முடிக்கத் தடையாக பெரும்பாலும் இருப்பது பணம்தான். அந்த பணம் கட்டுக்கடங்காமல் கிடைத்து விட்டால்? விடு ஜூட்.. கிழவர் வில்பர்ட் வங்கியில்  நம்பிக்கைக்குரிய பணியாளாக இருந்தவர் ஒரு நாள் தைரியமாக முடிவெடுக்கிறார்.. தங்கள் சொந்த வங்கியில் இருந்தே ஆட்டையைப் போட்ட பணத்துடன் சுற்றுலா கிளம்புகிறது பெரிசு. அந்த சுற்றுலா கிளம்பிய தகவல்  சில பெரிய டான்களுக்கு தெரியவர ரிப்கிர்பியும் கிழவரைத்தேட கதையில் அதிரடி துவங்குகிறது.. 
சிறப்பான இந்த ரிப் கிர்பி வரிசை உரிமம் பெரும்பகுதி  லயனில் உள்ளதால் சிறிய அளவில் மாத்திரமே ரங்லீ பதிப்பித்திருந்தார்கள். இப்போதே அவுட் ஆப் ஸ்டாக் என்று தகவல்.. 



மனசாட்சி விற்பனைக்கல்ல.
நகரை விரும்பும் ஒரு பெண் கிராமத்தில் இருந்து புறப்படுகிறாள். அங்கே அவள் எதிர்பார்த்தது நடந்ததா? என்கிற யதார்த்தமான கதைக்களத்தினை நீங்கள் இந்த சித்திரக்கதையை வாசிக்கையில் அறிந்து கொள்ளலாம். விலை ரூ.75/- kv கணேஷ் அவர்களது மொழிபெயர்ப்பில் gகாமிக்ஸ் வெளியீடு இந்த மனசாட்சி விற்பனைக்கல்ல.. 

வகம் காமிக்ஸ் 

தரமான சம்பவத்துடன் கலக்கலாக வெளியாகி இருக்கிறது கிளாசிக் ஸ்பெஷல்-2 பலப்பல கதைகள், திறமையான மொழிபெயர்ப்பாளர்கள் என்று சிறப்பாக வெளியாகி இருக்கிற இந்த 210/- ரூபாய் சித்திரப் புதையல் கண்டிப்பாக நீங்கள் வாங்கி மகிழ வேண்டிய ஒன்றே.. 


இந்த மாதம் வெளியாகி இருக்கும் ஒவ்வொரு காமிக்ஸும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக உருவாகியுள்ளன.. இப்போது சாய்ஸ் உங்கள் கையில்.. நீங்கள்தான் உங்களுக்கான கதையை தேர்ந்தெடுத்து வாங்கி வாசித்து மகிழ வேண்டும்.. காமிக்ஸ் உலகம் களைகட்டி வரும் இவ்வேளையில் ஒரு மாத வெளியீடுகளையாவது ஒரே பதிவில் அலச வேண்டும் என்கிற பேரவாவில் வலைப்பூ தொடுத்திருக்கிறேன். இரசித்து மகிழுங்கள்.. அடுத்த பதிவு கடைசியாக வெளியாகி இருக்கும் வகம் பற்றி கொஞ்சம் விரிவாக இருக்கும்.. நன்றி.. என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி..  

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...